சீனாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. எல்லாம் அந்த ஒரு விஷயத்தால் தான்.. கவலையில் உலக நாடுகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் நுகர்வோர் செலவினங்கள் என்பது கடந்த அக்டோபர் மாதத்தில் சரிவினை கண்டுள்ளது. தொழிற்துறை உற்பத்தியும் குறைந்துள்ளது.

 

உலகின் உற்பத்தி மையமான சீனாவில் இப்படி ஒரு நிலையானது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்தம், சீன அரசின் கடும் கட்டுபாடுகள், கடும் மின்சார தட்டுபாடு என பல காரணிகளால் பாதிக்கப்பட்ட உற்பத்தியானது தற்போது தான் மேம்படத் தொடங்கியது.

ஆனால் தற்போது சீனாவினை மீண்டும் கொரோனா ஆட்கொள்ள தொடங்கி விட்டது. இதனால் சீனாவின் பல முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் என்ன தான் நடக்குது.. டெஸ்லா ஏன் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது? சீனாவில் என்ன தான் நடக்குது.. டெஸ்லா ஏன் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது?

சில்லறை விற்பனை சரிவு

சில்லறை விற்பனை சரிவு

இதற்கிடையில் தான் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் சில்லறை விற்பனையானது கடந்த ஆண்டினை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் 0.5% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 2.5% அதிகரித்து காணப்பட்டது. இது மில்லியன் கணக்கான மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் வந்துள்ளது.

உற்பத்தியும் சரிவு

உற்பத்தியும் சரிவு

சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி சரிவு 6.3%ல் இருந்து, 5% ஆக குறைந்துள்ளது. சீனாவின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். முன்னதாக சீனாவில் வைரஸ் என்பது கட்டுக்குள் இருப்பதாகவும், அமெரிக்காவின் வட்டி விகித அதிகரிப்பு மற்றும் மற்ற நாடுகளின் வட்டி அதிகரிப்பு என்பது சர்வதேச வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்னும் மோசமாகலாம்
 

இன்னும் மோசமாகலாம்

சீனாவின் முக்கிய பொருளாதார நகரங்களில் கட்டுபாடுகள் உள்ள நிலையில், நவம்பரில் இன்னும் தாக்கம் மோசமான இருக்கலாம் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே சரிவினைக் கண்டுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் முடிவடைந்த மூன்று மாதங்களில் 2.2% ஆக பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆண்டில் 3.9% ஆக இருந்தது. ஆக பொருளாதாரம் ஏற்கனவே சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது மேலும் பொருளாதார வளர்ச்சி குறித்தான செயல்பாடுகள் முடங்கியுள்ளன. ஆக இன்னும் வளர்ச்சி குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

இறக்குமதி வீழ்ச்சி

இறக்குமதி வீழ்ச்சி

முன்னதாக வருடாந்திர வளர்ச்சி 3% ஆக இருக்கலாம் என எதிர்பார்த்த நிபுணர்கள், இது மீண்டும் இன்னும் குறையலாம் என குறைத்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இறக்குமதியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 0.7% குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 0.3% விரிவடைந்திருந்தது. இது நுகர்வோரின் தேவையானது குறைந்துள்ள நிலையில், இறக்குமதியும் குறைந்துள்ளது.

ஏற்றுமதி சரிவு

ஏற்றுமதி சரிவு

ஏற்றுமதியும் 0.3% குறைந்துள்ளது. இது கடந்த செப்டம்பரில் 5.7% அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ரியல் எஸ்டேட் வணிகமானது 2021ன் மத்தியில் இருந்தே சரிந்து வந்த நிலையில், சீனாவின் வணிகங்கள் மற்றும் நுகர்வோர் செயல்பாடுகள் சரியத் தொடங்கி விட்டன. வீடு விற்பனையும் சரிந்து விட்டது. கட்டுமானம் குறைந்து விட்டது. இதில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்த மில்லியன் கணக்கான சீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடனை மீட்கவில்லை

கடனை மீட்கவில்லை

இதற்கிடையில் சீன அரசு பெரு நிறுவனங்கள் மற்றும் வீட்டுக் கடன்களை மீட்க முடியாமல், வளர்ச்சியினை முடுக்கிவிட நினைக்கின்றது. இது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து கொரோனா மீண்டும் விஸ்வரூபம் தொடங்கிய நிலையில், மீண்டும் லாக்டவுனால் சிக்கியுள்ளது. இது மீண்டும் சீனாவின் நிலையை கவலைக்கிடமாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China consumer, factory activity again fall in October month

Consumer spending in China eased last October. Industrial production also declined. This has further influenced the development of China
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X