கோவிட் தொற்றைப் பரவலை தடுப்பதற்கான சீன அரசு வழக்கம் போல் இந்த முறையும் கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகளை அறிவித்தது. ஆனால் வர்த்தகப் பாதிப்பு, ஏற்றுமதி சரிவு, பொருளாதார மந்த நிலை ஆகியவை காரணமாக அவ்வப்போது லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்து.
இதனால் சீனா தற்போது தலைநகர் பெய்ஜிங்-ஐ லாக்டவுன் மூலம் மூடும் அளவிற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
Made In China 2025: புதிய & நவீன உற்பத்தி கொள்கை.. ஜி ஜின்பிங் திட்டம் இதுதான்..!

கொரோனா
கொரோனா தொற்றுக்காக அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் தற்போது சீனாவின் பொருளாதாரத்தைக் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளையைப் பெரிய அளவில் பாதித்துத் தற்போது அந்நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அளவீட்டைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் ஜி ஜின்பிங் அரசு உள்ளது.

சீனாவின் முக்கியப் பகுதிகள்
சீனாவின் முக்கிய நிதி மையமான ஷாங்காய், வாகன உற்பத்தி மையமான சாங்சுன் மற்றும் பிற இடங்களில் ஏப்ரல் மாத லாக்டவுன் காரணமாக அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. சீன அரசு வெளியிட்டு உள்ள ஏப்ரல் மாத தரவுகள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

PMI தரவுகள்
கொள்முதல் மேலாளர்கள் கணக்கெடுப்புகளின்படி, முதல் கொரோனா வைரஸ் தொற்று அலை கட்டுப்படுத்த சீனா முழுவதும் அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 2020 லாக்டவுன்-க்கு பின்பு உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டும் மோசமான நிலைக்கு ஏப்ரல் மாதத்தில் சென்றுள்ளது.

சப்ளை செயின் பாதிப்பு
சீனாவின் பிஎம்ஐ தரவுகள் படி சீன சப்ளையர்கள் தங்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்வதில் இரண்டு ஆண்டுகளில் மோசமான தாமதத்தை எதிர்கொண்டு உள்ளனர்.

சரக்கு இருப்பு அளவு
மேலும் முழுமையாக முடிக்கப்பட்ட பொருட்களின் சரக்குகளின் இருப்பு கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. சீனாவின் ஆதிக்கம் நிறைந்த சப்ளை செயினில் ஏற்பட்ட பாதிப்பு அந்நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான குறியீடுகளைச் சரிவுக்கு ஈட்டுச் சென்றது மட்டும் அல்லாமல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

ஜி ஜின்பிங் அரசு
இந்நிலையில் சீன அரசும் வரும் காலாண்டுக்கும், நடப்பு நிதியாண்டுக்கும் ஜீரோ கோவிட் பாலிசி நடைமுறையில் வைத்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சி அளவீட்டைக் கட்டாயம் அடையும் என உறுதி அளித்துள்ளார்.

சீன பொருளாதாரம்
இது இரண்டும் ஓரே நேரத்தில் சாத்தியப்படுத்த முடியாது எனப் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சீன அரசின் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி அளவீட்டை அடைவது சாத்தியமில்லை எனக் கூறுகின்றனர்.

பெய்ஜிங் லாக்டவுன்
ஓமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் முழு மற்றும் கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. தலைநகர் பெய்ஜிங்-ன் 22 மில்லியன் மக்கள்தொகையின் பெரும் பகுதியினருக்குக் கொரோனா தொற்றுச் சோதனை அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.