சீனா அரசின் முக்கிய அறிவிப்பு.. 3 வயது முதல் அனைவருக்கும் கோவிட் வேக்சின்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வந்த நிலையில் தற்போது சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்தை அளிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சீன அரசு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

3வது கொரோனா தொற்று அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சீன அரசு அந்நாட்டில் 3 முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்குச் சீன நிறுவனமான Sinovac தயாரித்த கோவிட் வேக்சின் CoronaVac-ஐ அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

சீனா அரசின் முக்கிய அறிவிப்பு.. 3 வயது முதல் அனைவருக்கும் கோவிட் வேக்சின்..!

இந்த அறிவிப்பை Sinovac நிறுவனத்தின் தலைவரான Yin Weidong தெரிவித்துள்ளார்.

சீனாவின் Sinovac நிறுவனம் 3 முதல் 17 வயதுடைய குழந்தைகள் மத்தியில் முதல் மற்றும் 2ஆம் கட்ட ஆய்வுகளைச் செய்துள்ளது. பல நூறு பேர் இந்த மருத்துவச் சோதனையில் கலந்துகொண்ட நிலையில் CoronaVac மருந்து பெரியவர்கள் போலவே குழந்தைகள் உடலிலும் சிறப்பாகச் செயல்படுகிறது என Yin Weidong தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி WHO அமைப்பு சீனாவின் 2வது கொரோனா வேக்சின்-ஆன CoronaVac ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன் சீனாவின் Sinopharm மருந்துக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவில் இதுவரை 763 மில்லியன் டோஸ் வேக்சின்-ஐ மக்களுக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China govt allows CoronaVac COVID-19 vaccine for children above 3 years

China govt allows CoronaVac COVID-19 vaccine for children above 3 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X