சீனாவில் தலைதூக்கும் கொரோனா.. புதிதாக ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு.. உஷாரா இருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக்கு ஆரம்பப் புள்ளி சீனாவாக இருந்தாலும், கடுமையான கட்டுப்பாடுகள், தொடர் பரிசோதனை, விரைவாகச் செயல்படுத்திய திட்டங்கள் எனப் பல அதிரடி பணிகளால் சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சீனாவின் தெற்கு பகுதியில் மீண்டும் கொரோனா தலைதூக்கியுள்ளது, மட்டும் அல்லாமல் கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளார்.

உற்பத்தி நகரமான Guangzhou

உற்பத்தி நகரமான Guangzhou

சீனாவின் தெற்கு பகுதியில் இருக்கும் மிகப்பெரிய உற்பத்தி நகரமான Guangzhou-ல் புதிதாக 11 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள காரணத்தால், Guangzhou மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

மேலும் இப்பகுதியில் இருந்து சீனாவின் வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் மக்கள் கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும் எனச் சீன அரசு கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

30 பேருக்கு தொற்று
 

30 பேருக்கு தொற்று

Guangzhou பகுதியில் மட்டும் சுமார் 1.5 கோடி மக்கள் உள்ளனர். தற்போது வெளியான தகவல்கள் படி இப்பகுதியில் சுமார் 30 பேருக்கு லோக்கல் டிரான்ஸ்மிஷன் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. லோக்கல் டிரான்ஸ்மிஷன் என்றால் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுவது.

புதிய H10N3 தொற்று

புதிய H10N3 தொற்று

மேலும் சீனாவின் Jiangsu பகுதியில் ஒருவருக்கு H10N3 வகையிலான பறவை காய்ச்சல் தொற்று மனிதருக்கு ஏற்பட்டு உள்ளதாகச் சீனாவின் தேசிய சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளைப் பயமுறுத்தியுள்ளது

உலக நாடுகளைப் பயமுறுத்தியுள்ளது

இந்த அறிவிப்பு சீன மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் பயமுறுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். Jiangsu பகுதியில் இருக்கும் Zhenjiang நகரத்தில் இருக்கும் 41 வயதான ஆண் ஒருவருக்கு H10N3 வகையிலான பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டு உள்ளது.

தொற்று பரவ வாய்ப்புக் குறைவு

தொற்று பரவ வாய்ப்புக் குறைவு

இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பரவு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் சீனாவின் தேசிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. மேலும் இதுவரை உலகில் எந்த ஒரு நாட்டிலும் H10N3 வைரஸ் தொற்று ஏற்பட்டது இல்லை என்று கூடுதல் தகவல்.

மக்களே உஷார்

மக்களே உஷார்

ஏற்கனவே கொரோனா வைரஸ் மூலம் உலக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது சீனாவின் உற்பத்தி நகரத்தில் கொரோனா தொற்றும், கிழக்குப் பகுதியில் புதிதாக ஒரு H10N3 வைரஸ் தொற்றும் உருவாகியுள்ளது. இது மீண்டும் பரவத் துவங்கினால் மிகப்பெரிய ஆபத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China Guangzhou has new corona cases and reports human case of H10N3 bird flu

China Guangzhou has new corona cases and reports human case of H10N3 bird flu
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X