சீனாவில் கரன்ஸி நோட்டுக்களை அழிக்கத் திட்டம்! ஏன் இந்த முடிவு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Recommended Video

Coronavirus: China decides to clean the currency, just like India's demonetization

கொரோனா வைரஸால், நம் அண்டை தேசமான சீனா, படாத பாடு பட்டுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

 

தினமும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு தன்னால் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லா செய்து வருகிறது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள், வெளியே வருவதற்கான கட்டுப்பாடுகள், சிறந்த மருத்துவ வசதிகள் என தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது.

விற்பனை வீழ்ச்சி தான்.. ஆனாலும் லாபம் அதிகரிப்பு.. எப்படி தெரியுமா..!விற்பனை வீழ்ச்சி தான்.. ஆனாலும் லாபம் அதிகரிப்பு.. எப்படி தெரியுமா..!

பாதிப்பு

பாதிப்பு

ஆனாலும் வைரஸ் மட்டும் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. சீனாவில், இந்த கொடூரமான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை, சுமாராக 70,000-த்தை தாண்டிவிட்டது. இந்த கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமாராக 1,750 பேருக்கு மேல் போய்க் கொண்டு இருக்கிறது.

எப்படி பரவுகிறது

எப்படி பரவுகிறது

இப்போது வரை, ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி, தும்மினாலோ அல்லது இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகத் தான் கொரோனா பெரிய அளவில் பரவிக் கொண்டு இருக்கிறது. இந்த பரவலைத் தடுக்கத் தான் உடல் முழுக்க மறைத்துக் கொண்டு, முகத்தில் மாஸ்க் மற்றும் கண்களுக்கு கண்ணாடி எல்லாம் அணிந்து கொண்டு மருத்துவம் செய்கிறார்கள், சீன மருத்துவர்கள்.

கரன்ஸி நோட்டுக்கள்
 

கரன்ஸி நோட்டுக்கள்

இப்படி தும்மல் மற்றும் இருமல் வழியாக, மக்கள் கையில் புழங்கும் சீன யுவான் நோட்டுக்களில் இந்த கிருமி பரவி இருந்தால், இந்த கொரோனா வைரஸ் பரவல் இன்னும் அதிகரித்துவிடுமோ என்கிற பயத்தில் சீனா ஒரு அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது. சிம்பில் நோட்டுக்களை அழிப்பது.

அழித்துவிடுங்கள்

அழித்துவிடுங்கள்

மருத்துவமனைகள், சந்தைகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஓடும் பேருந்துகளில் வசூலான பணத்தை அழிக்கச் சொல்லி இருக்கிறார்களாம். சீனாவின் மத்திய வங்கியான Chinese central bank-ன் துணை ஆளுநர் ஃபான் யிஃபி (Fan Yifei)-யே நோட்டுக்களைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

600 பில்லியன் யுவான்

600 பில்லியன் யுவான்

இப்படி அழிக்க இருக்கும் பழைய சீன யுவான் கரன்ஸி நோட்டுக்களுக்கு பதிலாக, சீன பொருளாதாரத்தில் புதிதாக 600 பில்லியன் சீன யுவான் நோட்டுக்களை வெளியிட இருக்கிறார்களாம். சீனாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் வங்கிகளில் கூட, வசூலிக்கும் பழைய கரன்ஸி நோட்டுக்களை மீண்டும் புழக்கத்தில் விட வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.

பழையதை என்ன செய்ய

பழையதை என்ன செய்ய

கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத, சீனாவின் மற்ற பகுதிகளில் இருக்கும் வங்கிகள், வசூலிக்கும் கரன்ஸிகளை கூட, 14 நாட்களாக தனியாக வைக்கச் சொல்லி இருக்கிறார்கள். இப்படி தனியாக வைக்கப்படும் கரன்ஸியை, அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது அதிக வெப்பத்தில் வைத்து, நோய் தொற்று வராமல் தடுக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களாம். மக்கள் மீது அக்கரை காட்டி இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுத்த சீன அரசுக்கு சல்யூட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

china is going to destroy yuvan currency

The Chinese central bank is going to destroy some hospital, bus, market currency to stop corona virus spreading through infected yuvan currency.
Story first published: Monday, February 17, 2020, 15:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X