மீண்டும் லாக்டவுன்.. 40 லட்சம் மக்கள் முடங்கினர்.. சீனாவில் கொரோனா அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வந்த சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக லான்ஜோவ் (Lanzhou) மாகாணத்தில் தொற்று எண்ணிக்கை வேகமாக உயரும் காரணத்தால் சீன அரசு வழக்கம் போல் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் அறிவித்துள்ளது.

 

இதனால் Lanzhou பகுதியில் இருக்கும் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தற்போது வீட்டில் முடங்கியுள்ளனர். அனைத்திற்கும் மேலாக இப்பகுதியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளது.

உற்பத்தி இன்ஜின்

உற்பத்தி இன்ஜின்

உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கு உற்பத்தி இன்ஜின் ஆக இருக்கும் சீனாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டால் இந்தியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் பாதிக்கப்படும் என்பதை இந்தக் கொரோனா காலத்தில் உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.

Lanzhou பகுதி

Lanzhou பகுதி

சீனாவில் கடந்த சில நாட்களில் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. இதில் Lanzhou பகுதியில் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதன் மூலம் சீன அரசு லான்ஜோவ் (Lanzhou) பகுதியில் அனைத்து நுழைவு மற்றும் வெளியே செல்லும் வழிகளையும் மூடியுள்ளது.

100 பேருக்குக் கொரோனா தொற்று
 

100 பேருக்குக் கொரோனா தொற்று

சீனாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் பெரு நகரங்கள் மற்றும் தொற்று ஏற்பட்டு உள்ள பகுதிகளில் மக்களுக்குப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் தொற்று உள்நாட்டுச் சுற்றுலா பயணிகள் மூலம் ஏற்பட்டு உள்ளதாகச் சீன அரசின் ஆய்வுகள் கூறுகிறது.

லான்ஜோவ் முழுவதும் லாக்டவுன்

லான்ஜோவ் முழுவதும் லாக்டவுன்

இந்நிலையில் லான்ஜோவ் (Lanzhou) லாக்டவுன் செய்யப்பட்டு உள்ளதால் இந்தியாவும் உலக நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது ஏற்பட்டு உள்ளது. லான்ஜோவ் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை இணைக்கும் முக்கியப் போக்குவரத்து மற்றும் வர்த்தக நகரமாகும்.

பெட்ரோகெமிக்கல்

பெட்ரோகெமிக்கல்

லான்ஜோவ் (Lanzhou) சீனாவின் மிகப்பெரிய பெட்ரோகெமிக்கல் வர்த்தகத் தளம். இதோடு டெக்ஸ்டைல், ரப்பர், உரம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, இயந்திரவியல் மற்றும் உலோகவியல் ஆகிய துறையில் சிறந்து விளங்குகிறது. இதில் எதுவும் இந்தியாவையோ அல்லது உலக நாடுகளையோ பாதிக்காது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

 காலதாமதம் ஏற்படலாம்

காலதாமதம் ஏற்படலாம்

ஆனால் இதேவேளையில் சீனாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை லான்ஜோவ் இணைக்கும் காரணத்தால் உற்பத்தி பொருட்கள் அல்லது ஏற்றுமதி பொருட்கள் கிடைக்கக் காலதாமதம் ஏற்படலாம். மேலும் சீனாவின் பல பகுதியில் கடந்த ஒருவாரத்தில் 100க்கும் அதிகமான மக்களுக்குத் தொற்று ஏற்பட்டு உள்ள நிலையில் உஷாராக இருப்பது உத்தமம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China: lockdown at Lanzhou amid new Covid cases; Does it affect global economy, businesses

China: lockdown at Lanzhou amid new Covid cases; Does it affect global economy, businesses
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X