ஆப்கானுக்கு ஆதரவு கரம் நீட்டும் சீனா.. எல்லாம் மண்ணுக்குள் இருக்கும் அந்த பொக்கிஷத்துக்காக தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2001ல் அமெரிக்க ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, பொருளாதாரம் வேறு. அப்போது டெஸ்லா இன்க் என்ற ஒரு நிறுவனம் இல்லை. ஐபோன் அறிமுகம் அப்போது இல்லை.

ஆனால் இன்றோ அவைகள் நவீனமயமான இந்த காலகட்டத்தில் உச்சத்தில் உள்ளன.

அக்டோபர் 1 முதல் மாத சம்பளத்தில் மாற்றம் : புதிய தொழிலாளர் சட்டம் அக்டோபர் 1 முதல் மாத சம்பளத்தில் மாற்றம் : புதிய தொழிலாளர் சட்டம்

இது உயர் தொழில்நுட்ப சிப்கள், அதிக திறனுள்ள பேட்டரிகள் என பலவற்றால் ஆனது. இது பூமியில் இருந்து எடுக்கப்பட்ட அரிய தாதுக்களால் நிரம்பியது.

தாதுக்கள் அடங்கிய அரிய பூமி

தாதுக்கள் அடங்கிய அரிய பூமி

ஆப்கானிஸ்தான் பல அறிய வகை தாதுக்கள் அடங்கிய தாதுக்களால் அடங்கிய அரிய பூமி. சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பினால் ஆன பூமியின் மீது அமர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கிட்டதட்ட எல்லா இடங்களையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபான்கள், மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைபற்றியுள்ளனர்.

சீனா உதவலாம்

சீனா உதவலாம்

சோவியத் யூனியனுடனான யுத்தம், போராளிகள், அமெரிக்கா என 4 தசாப்தங்களாக யுத்த களமாக இருந்தது ஆப்கானிஸ்தான். தற்போது மீண்டும் தாலிபான்கள் வசம் திரும்பியுள்ளது. நிதி ரீதியாக பின்னடைவில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் பின் வாங்கியிருந்தாலும், தற்போது சீனா உதவலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

சீனாவுக்கு தேவை
 

சீனாவுக்கு தேவை

விரைவில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிலாம் என்ற நிலையில், காபூலுக்கு வேண்டியதை சீனாவால் தர முடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது. ஏனெனில் ஆப்கானில் உள்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்துதல், தொழில் கட்டமைப்பு வாய்ப்புகள் மற்றும் பயன்படுத்தப்படாத 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான விலையுயர்ந்த கனிமங்களை அணுகுதல் என சீனாவுக்கு தேவையானதாக உள்ளது.

வணிகம் செய்ய முடியுமா?

வணிகம் செய்ய முடியுமா?

இது சாத்தியமாக இன்னும் சில காலம் ஆகலாம் என்றாலும், 20 வருட போரினை முடித்துக் கொள்ள ஜோ பிடன் நினைத்தாலும், தாலிபான் தலைமையிலான அரசினை தனிமைப்படுத்தினால் என்ன செய்வது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள நிறுவனங்களுடன் வணிகம் செய்வதை தடுக்கும் அதிகாரமும் அமெரிக்காவிடம் உள்ளது.

ஜி7 மாநாட்டில் அறிக்கை

ஜி7 மாநாட்டில் அறிக்கை

இது தாலிபான்கள் நாட்டின் பெண்கள், சிறுபான்மையினரை எப்படி நடத்துவது, பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு தாலிபான்கள் பாதுகாப்பான வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதை பொறுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நிரூபிக்கும் விதமாகவே இன்று பெண் சுதந்திரத்துக்கும், பாதுகாப்புக்கும் ஜி7 மாநாட்டின் முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்த முடியுமா?

இதனை பயன்படுத்த முடியுமா?

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் முதலீடுகளை நிர்வாகம் செய்து வந்தது. இதில் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம், தங்கம், பத்திரம் மற்றும் இதர முதலீடுகள் அனைத்தும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் உடன் உள்ளது. இதனையும் தாலிபான்கள் தற்போது பயன்படுத்த முடியாத சூழலே உருவாகியுள்ளது.

உதவியும் கிடைக்கவில்லை?

உதவியும் கிடைக்கவில்லை?

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியம், சமீபத்தில் 650 மில்லியன் டாலர் தொகையை ஆப்கானிஸ்தானுக்கு வழங்க ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் இதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆக மொத்தத்தில் ஆப்கானிஸ்தானுக்கு தற்போதைக்கு எந்த உதவியும் கிடைத்தபாடாக இல்லை. ஆக இந்த வாய்ப்பினை சீனா பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

முதலீடு செய்ய தயார்

முதலீடு செய்ய தயார்

ஏனெனில் இன்றைய நாளில் எப்படியும் தாலிபான்களுக்கு நிச்சயம் ஒரு சப்போர்ட் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். இதனால் சீனாவை தாலிபான்கள் ஏற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் சீனா 1 டிரில்லியன் கனிமங்களை எடுப்பதிலும் உதவி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவுக்கு முக்கிய தேவை

சீனாவுக்கு முக்கிய தேவை

இன்றைய நாளில் எலெக்ட்ரிக் சாதனங்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் சீனாவுக்கு, ஆப்கானில் உள்ள கனிமங்கள் தேவை. குறிப்பாக பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்திற்கு தேவை அதிகம் உள்ளது. ஆக சீனாவின் குறி ஆப்கானில் இருக்கும் தாதுக்கள் என்பதால், மெதுவாக ஆப்கானிஸ்தானுக்கு தனது ஆதரவினை கொடுக்க தொடங்கியுள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், டெஸ்லா நிறுவனங்களுக்கு போட்டியாக அமையலாம் எனவும் கருத்துகள் நிலவி வருகின்றன. மொத்தத்தில் நேரம் பார்த்து காய் நகர்த்த தொடங்கியுள்ளது சீனா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China looking to Afghanistan’s $1 trillion of mineral reserves; it’s not good for tesla, apple

China looking to Afghanistan’s $1 trillion of mineral reserves; it’s not good for tesla, apple
Story first published: Wednesday, August 25, 2021, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X