17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச பொருளாதாரத்தின் உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் சீனா எப்போதும் இல்லாத அளவிற்குத் தொழிற்துறை உற்பத்தியில் 17 வருட சரிவை அடைந்து சீன மக்களை மட்டும் அல்லாமல் உலக நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சில வருடங்களுக்கு முன்பு சீனாவில் மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்புப் பிரச்சனை உருவானது அப்போது கூடச் சீனா தட்டுத்தடுமாறி தனது உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தைக் காப்பாற்றிக்கொண்டது. ஆனால் இப்போது தொழிற்துறை உற்பத்தியில் ஏற்பட்டு உள்ளத சரிவு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

 
17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..?

சீனாவில் ஆகஸ்ட் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி அளவீடுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இம்மாதத்தில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி 4.4 சதவீதம் என்ற மோசமான நிலையை அடைந்து 17 வருடச் சரிவைப் பதிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஜூலை மாதத்தில் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி 4.8 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன தொழிற்துறை உற்பத்தியின் முக்கியக் காரணியாக இருப்பது உற்பத்தி, சுரங்கம் மற்றும் நுகர்வோர் துறைகள் தான். இத்துறைகள் தான் தொழிற்துறை உற்பத்தியைக் கணக்கிடப்படுவதில் முக்கியக் காரணியாகக் கொண்டு அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு ஆய்வு செய்கிறது.

இந்த முக்கியத் துறைகள் மட்டும் அல்லாமல் மற்ற துறைகளிலும் உற்பத்தியில் சரிவைச் சந்தித்துள்ளதாகச் சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனா வேணாம்.. இந்தியா தான் வேணும்.. ஆப்பிள்-இன் திடீர் பாசம்..!சீனா வேணாம்.. இந்தியா தான் வேணும்.. ஆப்பிள்-இன் திடீர் பாசம்..!

இதுமட்டும் அல்லாமல் சீனாவில் சில்லறை விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 7.5 சதவீதமாகச் சரிந்து மொத்த வர்த்தகச் சந்தையும் கேள்விக்குறியாக நிற்கிறது.

இதோடு 2019ஆம் ஆண்டில் முதல் முறையான பிக்ஸ்டு அசர்ட் முதலீட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டு ஆகஸ்ட் மாதம் 5.5 சதவீதமாக உள்ளது.

மேலும் தனியார் வர்த்தகத் துறை எப்போதும் இல்லாத வரையில் தொடர்ந்து 6 மாதமாகச் சரிவு பாதையில் உள்ளது.

இப்படித் திரும்பு பக்கம் எல்லாம் சீனா தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வருவதற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தகப் போர் தான் காரணம் என்றால் மிகையில்லை.

இந்த வர்த்தகப் போரின் காரணமாகச் சீனாவில் உள்நாட்டு விற்பனையும் சரி, வெளிநாடுகளுக்குச் செய்யப்படும் ஏற்றுமதியும் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து உள்ளது. இதன் எதிரொலியின் காரணமாக உற்பத்தியும் அதிகளவில் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China on 17-year low: industrial growth at bad shape

China's industrial production growth slipped to over 17-year low of 4.4% in August as trade war with US takes toll on the economy. It was 4.8% in July.
Story first published: Wednesday, September 18, 2019, 9:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X