அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தகர்க்க வரும் சீனா-ரஷ்யா கூட்டணி.. சபாஷ் சரியான போட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பயணிகள் விமானத் தாயரிப்பிலும் விற்பனையும் பல வருடங்களாகத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களை ஆதிக்கத்தைத் தகர்க்க சீனாவும், ரஷ்யாவும் மிகப்பெரிய அளவிலான ஒரு கூட்டணியை அமைத்துள்ளது.

 

இக்கூட்டணி பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திற்கும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திற்கும் போட்டியாகக் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிப் பறக்கும் விமானத்தைத் தயாரிக்க உள்ளது.

கூட்டணி நிறுவனங்கள்

கூட்டணி நிறுவனங்கள்

பல நூறு பில்லியன் டாலர் சந்தை கொண்டு பயணிகள் விமானத் தயாரிப்புச் சந்தையில் சீன அரசு நிறுவனமான கமர்சியல் ஏர்கிராப்ச் கார்ப் ஆஃப் சீனா மற்றும் ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப் ஆகியவை இணைந்து இப்புதிய தயாரிப்புத் திட்டத்தில் இறங்கியுள்ளது.

பொருளாதார ரீதியில் உலகின் இரண்டு சக்திவாய்ந்த நாடுகளில் இணைப்பு இச்சந்தையைத் தலைகீழாக மாற்றும் எனத் தெரிகிறது.

முதல் டெலிவரி

முதல் டெலிவரி

2025-27ஆம் ஆண்டுகளுக்குள் விமானங்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய இக்கூட்டணி முடிவு செய்துள்ளது என யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப் நிறுவனத்தின் தலைவர் யூரி சல்யூசார் தெரிவித்துள்ளார்.

முதலீடு
 

முதலீடு

இருகூட்டணி நிறுவனங்களும் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து புதிய தொழிற்சாலையில் 280 இருக்கைகள் கொண்டு விமானத்தைத் தயாரிக்க உள்ளது. இந்த விமானம் 12,000 கிலோமீட்டர் வரையில் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.

இது லண்டன் - சிங்கப்பூர் இடையிலான தூரத்தை விட மிகவும் அதிகம்.

முதல் பயணம்

முதல் பயணம்

மே மாதத்தின் துவக்கத்தில் சீனா தனது முதல் மார்டன் பயணிகள் விமானத்தின் முதல் பயணத்தை ஷாங்காய் நகரத்தில் இருந்து துவங்கியது. 100 இருக்கைகள் கொண்ட இந்த ஜெட் விமானம் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு நேரடியாகக் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டு

2025ஆம் ஆண்டு

இதன் பின் பேசிய சீன அதிபர் ஜி ஜினிபிங் மேட் இன் சீனா 2025இல் ஏர்ரோஸ்பேஸ் துறையும் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும், இதன் மூலம் சீனா அட்வான்ஸ்டு எக்னாமி பிரிவில் சேரும் எனத் தெரிவித்தார்.

தயாரிப்பும் அமைப்பும்

தயாரிப்பும் அமைப்பும்

இப்புதிய கூட்டணி தாயரிக்கும் விமானங்களின் ஆராய்ச்சி மற்றும் டெவலப்மென்ட் ஆகிய பணிகளை மாஸ்கோவிலும், அசம்பெளி பணிகளை ஷாங்காய்-யில் செய்யப்பட உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China, Russia JV aim to take on Boeing and Airbus

China, Russia JV aim to take on Boeing and Airbus
Story first published: Tuesday, May 23, 2017, 13:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X