சீனாவில் 25 வயதான ஊழியர் மரணம்.. விஷமாக மாறும் 996 கலாச்சாரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அரசு நடவடிக்கையின் காரணமாக அதிகளவில் பாதித்துள்ள நிலையில், இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருவதற்காக அனைத்துத் துறை நிறுவனங்களும் கடுமையாகப் பணியாற்றி வருகிறது. இதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் சீனாவில் பல நிறுவனங்கள் 996 கலாச்சாரத்தைக் கொண்டு வந்துள்ளது.

 

இந்தச் சூழ்நிலையில் 996 கலாச்சாரத்தின் படி அதிக நேரம் பணியாற்றியதன் விளைவாகச் சீனாவின் மிகப்பெரிய வீடியோ தளமான Bilibili Inc நிறுவனத்தில் 25 வயதே ஆன ஊழியர் பெருமூளை இரத்தப்போக்கு (cerebral haemorrhage) காரணமாக மரணம் அடைந்துள்ளார் என வெய்போ தளத்தில் கருத்து நிலவுகிறது.

 3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. ! 3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. !

இது சீன சமுக வலைத்தளத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி தற்போது உலக முழுவதும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது.

 Bilibili நிறுவனம்

Bilibili நிறுவனம்

அலிபாபா முதலீட்டில் இயங்கும் சீனாவின் மிகப்பெரிய வீடியோ தளமான Bilibili Inc நிறுவனத்தின் ஊழியர் நீண்ட நேரம் பணியாற்றிய காரணத்தால் மரணம் அடைந்துள்ளார். Twilight wooden heart எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்த ஊழியர் பொது விடுமுறை காலத்தில் கூடத் தினமும் 8 மணிநேரம் பணியாற்றியுள்ளதை நிறுவனமே ஒப்புக்கொண்டு உள்ளது.

 ஊழியர் மரணத்தின் விளக்கம்

ஊழியர் மரணத்தின் விளக்கம்

ஊழியரின் மரணம் குறித்து Bilibili நிறுவனம் சமுகவலைத்தளமான வெய்போ தளத்தில் நிறுவனத்திற்குப் பெரும் நஷ்டம் மட்டுமல்ல, எங்களுக்கு ஒரு எச்சரிக்கையும் தான், இதுபோன்ற அவலங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், எங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க, அதிகச் செயல்திறனுள்ள நடவடிக்கைகளை எடுக்க உத்தரவாதம் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 பணி சுமை
 

பணி சுமை

முதல் கட்டமாக ஊழியர்களின் பணி சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகக் கன்டென்ட் மாடரேட்டர் பிரிவில் புதிதாக 1000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது Bilibili நிறுவனம். மேலும் ஊழியர்களின் உடல் நலம் குறித்துத் தொடர்ந்து கண்காணிக்க மருத்துவப் பரிசோதனை செய்ய உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 சீன டெக் ஊழியர்கள்

சீன டெக் ஊழியர்கள்

சீன டெக் ஊழியர்கள், இளைஞர்கள் மற்றும் வொயிட் காலர் ஊழியர்கள் மத்தியில் பணி நேரம் மற்றும் பணி சுமை கடுமையாக அதிகரித்துள்ளது எனக் கருத்து நிலவி வருகிறது. சீனாவில் பல பெரும் டெக் நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருமான சரிவில் இருந்து மீண்டு வர ஊழியர்கள் மீது அதிகப்படியான சுமையை வைக்கிறது.

 996 பணி காலச்சாரம்

996 பணி காலச்சாரம்

இவை அனைத்தும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட 996 பணி காலச்சாரத்திற்குப் பின்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வாரத்தில் 6 நாட்களும் பணியாற்றும் முறை தான் 996 பணி கலாச்சாரம். இத்தகைய பணி நேரம் பற்றி உங்களின் கருத்து என்ன..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's Bilibili 25yr old employee dead over work pressure, 996 work culture poisoned China youth

China's Bilibili 25yr old employee dead over work pressure, 996 work culture poisoned China youth சீனாவில் 25 வயதான ஊழியர் மரணம்.. விஷமாக மாறுகிறதா 996 கலாச்சாரம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X