சீன நிறுவனங்களுக்கே இப்படி ஒரு நிலையா.. அப்படின்னா இந்தியா போன்ற நாடுகள் என்ன செய்யும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: கொரோனா வைரஸால் இன்று நாம் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் சந்தித்து வருகிறோமோ? அதே பிரச்சனைகளைத் தான் சில மாதங்களுக்கு முன்பு சீனாவும் அனுபவித்து வந்தது.

இன்னும் சொல்லப்போனால் சீனாவில் தற்போது கொரோனா இல்லையென்றாலும், அதன் எதிரொலி இருக்கத்தான் செய்கிறது.

இன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனாவினால் பல லட்சம் பேர் வேலையிழந்து வருகையில், சீனாவிலும் அதே போலத் தான் நடந்திருக்கும்.

விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் சீனா

விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் சீனா

இது ஒரு காரணம் எனில், அன்று சீனா மட்டுமே பிரச்சனையை எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. சீனா உள்நாட்டு உற்பத்தியினை அதிகரித்தாலும், அதனை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்ய முடியாது. மற்ற நாடுகளை நம்பியே சீனா உள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் கொரோனாவின் ருத்ரதாண்டவம் இருந்து வரும் நிலையில், பொருளாதார ரீதியாக பெரிதும் சரிந்து வருகின்றன.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் பல லட்சம் பேர் தங்களது வேலையினை இழந்துள்ளனர். வருமானத்தினை இழந்துள்ளனர். பல கோடி பேர் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். இப்படி இருக்கையில் அத்தியாவசியம் தவிர மற்றவைக்கு செலவிட அவர்கள் தயாராக இல்லை.

செலவிட தயக்கம்

செலவிட தயக்கம்

சீனாவின் உற்பத்தி ஜாம்பவான்கள் ஆன ஸ்டீல் மற்றும் மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது வழக்கம் போல் தங்களது ஆலைகளை இயக்க தொடங்கியுள்ளனவாம். எனினும் அவர்களிடம் பொருட்களை வாங்கும் நுகர்வோர் தான் இல்லையாம். மக்களிடம் போதிய வருவாய் இன்மையால் அவர்கள் செலவிட தயங்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளும் இதே போன்ற பிரச்சனைகளை விரைவில் எதிர்கொள்ளக் கூடும்.

பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நடவடிக்கை

பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நடவடிக்கை

வேலையில்லாத இளம் கல்லூரி பட்டாதாரிகள் ஸ்னீக்கர்கள் வாங்குவதை நிறுத்திவிட்டார்களாம். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம். சீனாவில் கொரோனா வைரஸ் பரவலால் முடங்கிப் போன பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நிறுவனங்களும், அதிகாரிகளும் பொருளாதாரத்தினை மறுதொடக்கம் செய்வதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.

கடினமான பணி

கடினமான பணி

எனினும் நுகர்வோர் வகையில் மேம்படுத்துவதில் மிகவும் கடினமான ஒரு பணியாக இருக்கலாம். ஏனெனில் பலர் இங்கு வேலையை இழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. பலர் லாக்டவுன் காரணமாக வேலையில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆக அவர்கள் அவர்களின் அத்தியாவசிய தேவைக்கே கூட சேமிப்பு பொறுத்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

இதனால் அவர்கள் செலவழிக்கும் தொகையும் வெகுவாக குறைந்துள்ளது. உதாரனத்திற்கு வெளியில் சென்றால் காஃபி, அழகு சாதன பொருட்கள், உணவகங்களில் உணவு அருந்துவது என பல வற்றிற்கும் செலவு செய்வோம். ஆனால் இதுபோன்ற நேரங்களில் இதற்காக செலவு செய்வோமா என்பது கஷ்டம்தானே.

செலவு செய்வது கடினம்

செலவு செய்வது கடினம்

இதே கொரோனாவினால் வேலை இழந்தோர், இனி புதியதாக வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கிய பிறகே செலவு செய்யலாம். அப்போதும் கூட, முன்பு போல செலவு செய்வார்களா? என்பது தெரியவில்லை. ஏனெனில் முன்பு போல இல்லாமல் மக்கள் அத்தியாவசிய தேவையினை பற்றி தற்போது அறிந்துள்ளார்கள். ஆக முன்பு போல செலவு செய்வது கடினம் தான் என்கிறது ஒர் அறிக்கை.

மூன்றில் ஒரு பங்கு விற்பனை தான்

மூன்றில் ஒரு பங்கு விற்பனை தான்

மேலும் பர்னிச்சர்கள், ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நகைகள் விற்பனை கடந்த மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தொடங்கிய தொழில்சாலை பணிகள் கூட நீண்ட காலத்திற்கு நம்ப தகுந்ததாக இருக்காது.

உற்பத்தி செய்தும் பிரச்சனை தான்

உற்பத்தி செய்தும் பிரச்சனை தான்

ஏனெனில் தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில்லை. உதாரணத்துக்கு அமெரிக்காவின் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் ஆர்டர்களை ஒத்தி வைத்துள்ளன. இதனால் உற்பத்தி செய்தும் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலையே நிலவி வருகிறது.

இன்னும் சீனா விடுபடவில்லை

இன்னும் சீனா விடுபடவில்லை

ஆக சீனா கொரோனாவில் இருந்து விடுபட்டாலும், இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை எனலாம். அதிலும் தற்போது உலக நாடுகளில் பல நாடுகள் சீனாவிற்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளன. ஆக அது எந்தளவுக்கு சீனாவுக்கு நல்ல விஷயம் என, மற்ற நாடுகளும் கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது தான் தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s factories are faces some issues, Its Consumers Aren’t

China manufacturing giants starts production. But job losses and pay cuts have left its people reluctant to spend.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X