சீனாவுக்கு மீண்டும் செக் வைக்கும் கொரோனா.. அச்சத்தில் உலக நாடுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா என்றொரு வார்த்தையை அவ்வளவு எளிதில் பலரும் மறந்து விட முடியுமா? என்பது சந்தேகம் தான். ஏனெனில் பல லட்சம் பேரின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு வைரஸ். இது பொருளாதாரத்தினை மட்டும் அல்ல, மதிப்பில்லாத பல லட்சம் உயிர்களை காவு கொண்டுள்ளது.

 

இன்னும் தொடர்ந்து அடுத்தடுத்த அலையாக உருமாறி மக்களை பயமுறுத்தி வருகின்றது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாக தோன்றியதாக கூறப்படும் இந்த கொரோனா, தற்போது மீண்டும் சீனாவில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு பல முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

 ராணுவ பட்ஜெட்-ஐ உயர்த்திய சீனா.. இந்தியாவுக்குப் பாதிப்பா..?! ராணுவ பட்ஜெட்-ஐ உயர்த்திய சீனா.. இந்தியாவுக்குப் பாதிப்பா..?!

பாதியாக சரியலாம்

பாதியாக சரியலாம்

ஏற்கனவே முதல் கட்ட இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியிலேயே பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று, தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளன. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் நிலை கொண்டு இருக்கும் கொரோனாவால், அதன் பொருளாதார வளர்ச்சியானது பாதியாக சரிவடையலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சீனாவில் தான் தொடக்கம்

சீனாவில் தான் தொடக்கம்

இதில் அச்சம் கொள்ளக்கூடிய விஷயம் என்னவெனில் 2019ன் இறுதியில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா, முதன் முதலாக சீனாவின் தான் கண்டறியப்பட்டது. அதன் பிறகு தான் உலக நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. சொல்லப்போனால் அந்த காலகட்டத்தில் உலகமே ஸ்தம்பித்து போனது எனலாம். வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள், ஆள் நடமாற்றம் இன்றி காணப்பட்ட தெருக்கள், எங்கும் ஒரு அமைதி, மறுபுறம் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள், படுக்கை வசதி பற்றாக்குறையால் வாகனங்களிலேயே சிகிச்சை பெற்ற மக்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என உலகமே சில காலம் அச்சத்தில் தான் இருந்தது.

வாழ்வாதாரங்களை இழந்த மக்கள்
 

வாழ்வாதாரங்களை இழந்த மக்கள்

இது ஒரு புறம் எனில் லாக்டவுனால் வேலையிழந்த மக்கள் ஒரு புறம், வாழ்வாதாரங்களை இழந்து தவித்த மக்கள், என அனுதினமும் அடிப்படை தேவைகளுக்கே பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். இப்படி எந்த நேரத்திலும் பிரச்சனையுடனே வாழ்ந்த மக்கள், தற்போது தான் சற்று சுதந்திர காற்றினை சுவாசிக்க தொடங்கினர். ஆனால் மீண்டும் சீனாவில் கொரோனா, லாக்டவுன் எனும் போது அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது.

முக்கிய நகரங்களில் மீண்டும் லாக்டவுன்

முக்கிய நகரங்களில் மீண்டும் லாக்டவுன்

மீண்டும் ஒரு மோசமான காலம் திரும்ப வந்து விடக் கூடாது என்பதே ஒவ்வொருவரின் பிரார்த்தனையாகவும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது சீனாவில் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கு பல முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் பல உலோகங்கள், உணவு பொருட்கள், சமையல் எண்ணெய், கச்சா எண்ணெய் விலை என பலவும் உச்சம் தொட்டுள்ளன.

ஜிடிபி சரியலாம்

ஜிடிபி சரியலாம்

இதற்கிடையில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி பாதியாக குறையலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர். தரவுகளின்படி, சீனாவில் 17.5 மில்லியன் வீடுகளுக்கு லாக்டவுன் போடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்ந்து கொரோனா அதிகரித்து வரும் நிலையில் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சீனாவின் முக்கிய தொழில் நகரமான சாங்க்சுன் இந்த லாக்டவுன் வளையத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

11% கார் உற்பத்தி

11% கார் உற்பத்தி

சுமார் 9 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரம், 2020ல் சீனாவின் மொத்த கார் உற்பத்தியில் 11% பங்கினை கொண்டுள்ளது. இப்படியொரு நகரமும் தற்போது லாக்டவுனில் சிக்கியுள்ளது. இந்த லாக்டவுன் நடவடிக்கையானது மேற்கொண்டு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிடிபி கணிப்பு

ஜிடிபி கணிப்பு

முன்னதாக சீன அரசு ஜிடிபி வளர்ச்சியினை 5.5% இருக்கலாம் என கணித்திருந்த நிலையில், அதனை மற்ற தரகு நிறுவனங்களில் அதிலும் குறைத்து 5% வளர்ச்சி இருக்கலாம் என்றும் கணித்துள்ளன. எனினும் இந்த லாக்டவுன் நடவடிக்கைகள் அதிகரிக்கும் பட்சத்தில் வளர்ச்சி இன்னும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ்கான் பணி நிறுத்தம்

பாக்ஸ்கான் பணி நிறுத்தம்

ஷென்செனின் ஜிடிபி விகிதம் தேசிய உற்பத்தியில் 2.7% என்றாலும், சீனாவின் முன்னணி உற்பத்தியாளர்களான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், ஹீவாய் டெக்னாலஜிஸ், ஆப்பிள் இன்க், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களும் இந்த பகுதியில் தான் உள்ளன. இதில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் தனது உற்பத்தியினை நிறுத்தியுள்ளது. தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களும் உற்பத்தியினை நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனங்கள்

சீனாவின் முக்கிய நிதி நிறுவனங்களாக பிங் ஆன் இன்சூரன்ஸ் குரூப் கோ, சைனா மெர்ச்சன்ட்ஸ் பேங்க் கோ உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமையிடமும் இங்கு உள்ளன. இது தவிர UBS குழுமம், ஹெச்.எஸ்.பி.சி ஹோல்டிங் உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளும் இந்த பகுதியில் உள்ளன.

துறைமுகங்கள் பாதிப்பு

துறைமுகங்கள் பாதிப்பு

ஷாங்காய்க்கு அடுத்த படியாக முக்கிய துறைமுகமான ஷென்சென், எந்த மாதத்திலும் சீனாவில் இருந்து 10% கன்டெய்னர்களை அனுப்புகிறது.

எனினும் இதில் நல்ல விஷயம் என்னவெனில் சீனாவின் லாக்டவுன் நடவடிக்கையானது, இதுவரையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. இது பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பிக்கவில்லை. எனினும் இது நீடிக்கும் பட்சத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

 

உலக நாடுகளுக்கு பிரச்சனை?

உலக நாடுகளுக்கு பிரச்சனை?

சீனாவில் லாக்டவுன் நடவடிக்கைகள் நீண்டகாலத்திற்கு அதிகரிக்கும் பட்சத்தில், அது சப்ளை சங்கிலியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக ஏற்கனவே மூலதன பொருட்கள்,குறிப்பாக சிப் பற்றாக்குறை காரணமாக, மூலதன பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இது இன்னும் விலையை அதிகரிக்க தூண்டலாம். இது பணவீக்கத்தினை தூண்டலாம். ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு உலோகங்களின் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியுள்ளன. ஆக சீனாவில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலையானது சர்வதேச நாடுகளிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's lockdown due to covid surge may impact on economy

China's lockdown due to covid surge may impact on economy/சீனாவில் மீண்டும் கொரோனா.. பாதியாக பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம்.. மற்ற நாடுகளுக்கும் பிரச்சனை தான்!
Story first published: Tuesday, March 15, 2022, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X