சீனாவுக்கு ஷாக் கொடுக்கு அறிக்கை.. தொழில்துறை வளர்ச்சி ஒகே தான்.. ஆனா வேலை?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய செய்தித்தாள்கள் ஆகட்டும், செய்தி சேனல்களாகட்டும், ஆன்லைன் தளங்களாகட்டும், இப்படி எது எடுத்தாலும், அதில் சீனாவை பற்றிய செய்திகள் இல்லாமல் இல்லை.

அந்தளவுக்கு இன்று நம்முள் பரப்பப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது சீனா.

இப்படி பரபரப்பான விஷயங்களுக்கு மத்தியில், பேசப்படும் விஷயங்களில் ஒன்று, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவது தான்.

கொரோனாவின் தாக்கம்
 

கொரோனாவின் தாக்கம்

என்ன தான் கொரோனாவின் தாக்கம் சீனாவில் இல்லாமல் போனாலும், அதன் தாக்கம் நிச்சயம் சீனாவில் இருக்கத்தானே செய்யும். ஆனால் அதெல்லாம் இல்லை சீனாவின் பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டு இருக்கிறது என்று கூறுகிறது ஒரு அறிக்கை. ஆனால் நிச்சயம் அது உண்மை இல்லை. சீனாவின் உற்பத்தி விகிதம் வளர்ச்சியடைந்து கொண்டு தான் உள்ளது. அது மறுப்பதற்கில்லை.

சீன பொருட்கள் விற்பனை

சீன பொருட்கள் விற்பனை

ஆனால் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சீனாவிலேயே முழுவதும் விற்பனை செய்யபப்டுவதில்லை. மாறாக சீனாவில் அதன் பொருட்கள் விற்பனை என்பது குறைவு தான். சீனாவின் பெரும்பாலான பொருட்கள், அண்டை நாடுகளுக்குத் தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆக உற்பத்தி அதிகரித்தாலும், அதனை ஏற்றுமதி செய்தால் தானே சீனாவுக்கு பயன்.

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தொடக்கம்

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தொடக்கம்

தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள உலகின் பெரும்பாலான நாடுகள் சுய நலமாக யோசிக்கத் தொடங்கியுள்ளன. அதாவது பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக உள்நாட்டு உற்பத்தியினை மேம்படுத்த தொடங்கி விட்டன. இதற்கு சிறந்த உதாரணம், அமெரிக்கா தான். அதோடு கொரோனா காரணமாகவும் இறக்குமதியினையும் குறைத்துள்ளன.

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை
 

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா சீனாவின் இறக்குமதியை குறைப்பதற்காக வரியை கூட்டியுள்ளது. மேலும் சீனாவின் இறக்குமதிக்கு ஏற்ப, அமெரிக்கா பொருட்களை சீனா இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கட்டுபாடு விதித்துள்ளது. ஆக மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் இது சீனாவுக்கு பிரச்சனையாகத் தான் உள்ளது. அதிலும் கொரோனாவின் தாக்கத்திற்கு சீனா தான் காரணம் என்றும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியும் வருகிறது.

சீனாவின் தொழில்துறை வளர்ச்சி தான்

சீனாவின் தொழில்துறை வளர்ச்சி தான்

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சீனாவின் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத பிஎம்ஐ குறியீடானது சற்று வளர்ச்சி கண்டுள்ளது, இது சீனாவின் தொழில்துறையினை வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை தெளிவுபடுத்தும் விதமாகத் தான் வந்தது. தொழில்துறை வளர்ச்சியின் சாதகமான வளர்ச்சியினை இதன் மூலம் அறிய முடிகிறது.

அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்

அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்

ஆனால் தொழில் துறை வளர்ச்சி கண்டாலும், நாட்டில் வேலைவிகிதம் அந்தளவுக்கு மேம்படவில்லை என்கிறது இந்த அறிக்கை. சொல்லப்போனால் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதாக கூறுகிறது. ஏனெனில் உற்பத்தி அதிகரித்தாலும் கூட, ஏற்றுமதி அந்தளவுக்கு அதிகரிக்கவில்லை என்று கூறலாம். ஆக ஏற்றுமதி இன்மையால் வேலையிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

உற்பத்தி கொள்முதல் குறியீடு

உற்பத்தி கொள்முதல் குறியீடு

மார்கெட்டின் உற்பத்தி கொள்முதல் குறித்தான குறியீடு, கடந்த மாதம் 51.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து ஒப்பிடும்போது மிக விரைவான வளர்ச்சியாகும். இது மே மாதத்தில் 50.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 6.8 சதவீதம் வீழ்ச்சி கண்டு இருந்தாலும், தற்போது படிப்படியாக ஏற்றம் கண்டு வருகிறது.

தேவை சரிவு

தேவை சரிவு

இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா காரணமாக பல வாரங்கள் லாக்டவுன் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பல இடையூறுகளுக்கும் மத்தியில் மீண்டும் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போது சீனாவுக்கு பதில் மற்ற உலக நாடுகளை கொரோனா சூழ்ந்துள்ள நிலையில், உலகளாவிய தேவையானது வீழ்ச்சி கண்டுள்ளது.

குறைவான ஆர்டர் மற்றும் ரத்து செய்யப்பட்ட ஆர்டர்கள்

குறைவான ஆர்டர் மற்றும் ரத்து செய்யப்பட்ட ஆர்டர்கள்

பல உற்பத்தியாளர்கள் கொரோனாவின் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஆர்டர்கள் மற்றும் குறைக்கப்பட்ட ஆர்டர்களுடன் போராடி வருகின்றனர். சீனாவின் சில வர்த்தக பங்காளிகள் சிலர் கட்டுப்பாடுகளை தளர்த்துவதோடு, தங்கள் பொருளாதாரங்களை மீண்டும் துவங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இன்னும் பலர் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனா இரண்டாவது பரவலா?

கொரோனா இரண்டாவது பரவலா?

ஆக இந்த தொற்று நோயானது உலகளாவிய மந்த நிலைக்கான அபாயத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பெய்ஜிங்கில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இது இரண்டாம் கட்ட அலையை ஏற்படுத்தி விடுமோ என்ற பயத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆக இதற்கு நடுவில் மீண்டும் ஒரு தாக்கம் வந்தால் தாங்க முடியாது என்ற பதற்றத்திலேயே நுகர்வோர் எச்சரிக்கையாக இருந்து வருகின்றனர்.

வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்கு

வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்கு

நிறுவனங்கள் உள்நாட்டு ஆர்டர்களை தேர்தெடுத்தாலும், நிலவி வரும் நிச்சயமற்ற நிலையினால் தொடர்ச்சியாக ஆறவாது மாதமாக, நிறுவனங்களை சம்பளத்தினை குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் இது பணிகளை குறைக்கவும் காரணமாக அமைந்துள்ளது. எனினும் வேலையின்மையை குறைக்கும் விதமாக, இந்த ஆண்டு 9 மில்லியனுக்கும் அதிகமான நகர்புற வேலைகளை உருவாக்கும் இலக்கு உள்ளது. இதுவே அரசின் முன்னுரிமையாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China’s production expands, but job losses increase amid dull export

China’s factory production activities grow faster. But at this same time export is clumped, its pressure to jobs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X