ஒரே நாளில் '3.6 பில்லியன் டாலர்' சொத்துக்களை இழந்தார் வாங் ஜியாலின்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: சீன பங்குச்சந்தையின் வரலாறு காணாத வீழ்ச்சி காரணமாக, சீன பணக்காரர் ஒருவர் ஓரே நாளில் 3.6 பில்லியன் டாலர் (அதாவது 23,760 கோடி ரூபாய்) இழந்துள்ளார்.

 

அதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வார வர்த்தகத்தில் சீன பங்குச்சந்தை 2015ஆம் ஆண்டில் அடைந்த உயர்வை முழுவதையும் இழந்துள்ளது குறிப்பிடதக்கது.

வாங் ஜியாலின்

வாங் ஜியாலின்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சீன சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள வாங் ஜியாலின் திங்கட்கிழமை வர்த்தகச் சரிவில் சுமார் 23,760 கோடி ரூபாய் இழந்துள்ளார்.

இவர் டாலின் வாண்டா என்னும் ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார்.

 

ப்ளும்பெர்க்

ப்ளும்பெர்க்

உலகப் பணக்காரர்களைத் தொடர்ந்து கண்காணிக்கப் பல அமைப்புள்ள உள்ளது, இதில் ப்ளும்பெர்க் நிறுவனமும் ஒன்று.

பங்குச்சந்தை சரிவிற்குப் பின் சீன பணக்காரர்களின் சொத்து மதிப்புகளைக் கணக்கிடும் போதும் வாங் ஜியாலின் அவர்கள் சுமார் 3.6 பில்லியன் டாலர் சொத்துக்களை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

 

2015இல் வாங் ஜியாலின்
 

2015இல் வாங் ஜியாலின்

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் 2015ஆம் நிதியாண்டில் வாங் ஜியாலின் அவர்களின் சொத்து மதிப்பு 6 பில்லியன் டாலர் வரை அதிகரித்தது. ஆனால் கடந்த 2 நாள் வர்த்தகத்தில் சரி பாதி அளவிலான சொத்துக்களை அவர் இழந்துள்ளார்.

அலிபாபாவின் ஜாக் மா..

அலிபாபாவின் ஜாக் மா..

இந்நிலையில் சீனாவில் மிகப்பெரிய பணக்காரரான ஜாக் மா, கடந்த 2 நாள் வர்த்தகத்தில் வெறும் 545 மில்லியன் டாலர் மட்டுமே இழந்துள்ளார். ஜாக் மா அலிபாபா நிறுவனத்தின் தலைவராவார்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

ஜூன் மாத சரிவில் இருந்து மீண்டு வர நிறுவனங்களின் பங்கு விற்பனையைத் தடுக்கச் சீன அரசு, சீனா பாதுகாப்பு நிதியியல் நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து முக்கிய நிறுவனங்களின் பங்குகளைக் கைபற்றியது.

ஓய்வுதிய நிதி

ஓய்வுதிய நிதி

தற்போதையை நிலையை மேம்படுத்த சீனா 548 பில்லியன் டாலர் மதிப்பிலான ஓய்வுதிய நிதியை பங்குகளை வாங்குவதற்காக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி எதிர்ப்புகள் அதிகரித்துள்ளது.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's richest man loses $3.6 bn in one day

China's richest man lost $3.6 billion in a single day after global stock markets tanked and Chinese markets erased all their gains for the year.
Story first published: Wednesday, August 26, 2015, 10:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X