அடுத்த ஆப்பு ஸ்மார்ட்போன்களுக்கா.. சீனாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. கவலையில் உற்பத்தியாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உசென் : எந்த பொருள் ஆனாலும் அதில் தரைமட்ட விலைக்கு தயாரித்து மற்ற நிறுவனங்களை வீழ்த்தும் சீனா ஏற்கனவே, ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்திருந்தாலும், தற்போது அடுத்த ஆண்டு முதல் சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி 10, 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

உசெனில் நடந்த வோர்ல்டு இண்டர்நெட் கான்ஃப்ரன்ஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜியோமி நிறுவனத்தின் தலமைமை செயல் அதிகாரி லீ ஜன், 2020ம் ஆண்டில் 10 விதமான 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் முதலாவதாக உலக அளவில் நிலவி வரும் போட்டியை தவிர, உள்நாட்டிலேயே கடுமையான போட்டியை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சில சிக்கல்கள்

சில சிக்கல்கள்

சீனா நிறுவனமான ஹூவாய் டெக்னாலஜி நிறுவனத்தால், தங்களது நிறுவனம் உள்நாட்டிலேயே கடுமையான போட்டியை சந்தித்து வருவதாகவும், இந்த நிலையிலேயே கடந்த மாதம் ஜியோமி தனது 5ஜி மாடல் தொலைபேசியான ஜியோமி (Xiaomi Mi 9 Pro) மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் 5ஜி போன்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுவனம் சில சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் விலை குறைவான தரமான 5 ஜி போன்களை அறிமுகப்படுத்த ஜியோமி தூண்டப்பட்டுள்ளது என்றும் லீ கூறியுள்ளார்.

4ஜி போன்கள் விற்கப்படாது

4ஜி போன்கள் விற்கப்படாது

மேலும் அடுத்து வரும் ஆண்டுகளில் 4ஜி போன்கள் விற்கப்படாது என்றும், தொழில் துறையில் உள்ளவர்கள் அஞ்சுகிறார்கள் என்றும், இதை தவிர்க்க வேறு வழியில்லை என்றும் லீ கூறியுள்ளார், எனவே ஆப்ரேட்டர்கள் 5ஜி அடிப்படை நிலையங்களின் விரிவாக்கத்தை விரைவு படுத்த முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றும் லீ கூறியுள்ளார்.

ஜியோமி பங்கு கடுமையான வீழ்ச்சி
 

ஜியோமி பங்கு கடுமையான வீழ்ச்சி

சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தை மிகவும் போட்டித் தன்மையுடன் வளர்ந்து வருவதால், கடந்த ஆண்டு ஜியோமியின் பங்கு விலை கடந்த ஆண்டு சீராக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பரில் இந்த நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வர்த்தகப் போரால் மந்த நிலை

வர்த்தகப் போரால் மந்த நிலை

கடந்த 2019ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் 11.8 சதவிகித ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளதாகவும், இது ஒரு வருடத்துக்கு முன்பு 13.9 சதவிகிதமாக இருந்ததாகவும் ஆராய்ச்சி நிறுவனமாக கனலிஸ் தெரிவித்துள்ளது. அதிலும் ஹூவாய் நிறுவனத்தின் பிராண்டுகளை நுகர்வோர் நாடிச் சென்றதால், சீனாவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்துள்ளன. மேலும் ஷென்சென் அடிப்படையிலான கைப்பேசி நிறுவனம் அமெரிக்கா சீனா வர்த்தக பதற்றங்களினாலும், மந்த நிலை நிலவி வருகிறது என்றும் கூறியுள்ளது.

ஜியோமி வளர்ச்சி

ஜியோமி வளர்ச்சி

மற்ற தொலைபேசி நிறுவனங்கள் நஷ்டத்தினை கண்டாலும், ஜியோமி சற்று லாபத்தை கண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டாவது காலாண்டில் இப்பிராந்தியத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை பங்கு 9.6 சதவிகிதமாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 6.5 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இந்த மந்த நிலையிலும் சீன பிராந்தியத்தில் மிக வேகமாக ஜியோமி வளர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's Xiaomi said plan to launch over 10 types of 5G phones in 2020

China's Xiaomi said plan to launch over 10 types of 5G phones next year for low and high, medium tier phones.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X