ஐஎம்எஃப் நாணய பெட்டகத்தில் நுழைந்தது யுவான்.. அமெரிக்காவுடன் போட்டி போட சீனா தயார்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நாணய பெட்டகத்தில் பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு சீன நாட்டின் யுவான் நாணயம் இடம்பெற்றுள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பும், சர்வதேச வர்த்தகச் சந்தையில் யுவான் நாணயத்தின் மீதான வர்த்தகம் அதிகரிக்கும்.

 

ஐஎம்எஃப் பிற நாடுகளுக்குக் கடன் மற்றும் நிதியுதவி அளிப்பதற்காகப் பண இருப்பைப் பல தரப்பட்ட நாணய வடிவில் வைத்துக்கொள்ளும். இருப்பு என்றால் 1,000 கோடி, 2,000 கோடி போன்றவை அல்ல.. 50,000 கோடிக்கும் அதிகமாக இருப்பு வைத்திருக்கும். இதனால் என்ன லாபம்..?

என்ன லாபம்..?

என்ன லாபம்..?

திடீரென ஒரு நாட்டின் நாணயத்தின் தேவை அதிகரிக்கும் போது, நாட்டின் வளர்ச்சி உச்சத்திற்குக் கொண்டு செல்லும். மேலும் பெரும்பாலான வர்த்தகம் அந்நாட்டின் நாணய வடிவிலேயே செய்யப்படும். இதனால் ஐஎம்எஃப் போன்ற நிதியகங்கள் இல்லாமல் உலக நாடுகளிலும் இந்த நாணயத்தின் மீதான வர்த்தகம் அதிகரிக்கும்.

இதனால் இந்நாணயத்தின் மதிப்புச் சர்வசாதாரணமாக உயரவும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் டாலர், பவுன்ட் நாணயங்களுக்குக இணையாக உயரும் வாய்ப்பு உண்டு.

உதாரணமாக இந்தியா கச்சா எண்ணெய்க்கு அளிக்க வேண்டிய தொகையை அமெரிக்க டாலர் வடிவில் தற்போது அளித்து வருகிறது. இதனை இனி நாம் யுவான் வடிவிலும் வழங்கலாம். இதனால் சந்தையில் டாலரின் ஆதிக்கம் அதிகளவில் குறையும் வாய்ப்புகள் உருவாகும்.

 

ஐஎம்எஃப்

ஐஎம்எஃப்

இதுகுறித்து ஐஎம்எஃப் கூறுகையில், சீன யுவான் நாணயம் அனைத்து விதமான தகுதிகளையும் பெற்றுள்ளதால் வருகிற அக்டோபர் 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் IMF நாணய பெட்டகத்தில் யுவான் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளது.

கிறிஸ்டின் லகார்ட்
 

கிறிஸ்டின் லகார்ட்

மேலும் ஐஎம்எஃப் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கூறுகையில், ஐஎம்எஃப் நாணய பெட்டகத்தில் யுவான் இணைக்கப்படுவது சீனா பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். இதனால் இந்நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான பொருளாதாரச் சூழ்நிலையின் விரைவில் மீண்டு வரும் எனத் தெரிவித்தார்.

நாணய பெட்டகம்

நாணய பெட்டகம்

தற்போது இப்பெட்டகத்தில் அமெரிக்க டாலர், யூரோ, பவுண்ட் மற்றும் ஜப்பான் யென் ஆகியவை உள்ளது. கடந்த 2000வது ஆண்டுக் கிரீக் மார்க் மற்றும் பிரான்க் ஆகியவற்றை வெளியேற்றிவிட்டு யூரோ நாணயம் இதில் இடம்பிடித்தது.

பொருளாதார நாடுகள்

பொருளாதார நாடுகள்

உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாகச் சீனா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ள நிலையில், ஐஎம்எஃப் அளித்த இந்த வாய்ப்பு மிகப்பெரியதாகும்.

2030இல்

2030இல்

இதன் படி 2030ஆம் ஆண்டில் உலகின் 3 முக்கிய நாணயங்களில் சீன நாட்டின் யுவான் இடம் பெறும் என உலகில் பல முன்னணி பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's yuan gains IMF reserve status

The International Monetary Fund (IMF) has announced that China's currency, the yuan, will join the fund's basket of reserve currencies.
Story first published: Tuesday, December 1, 2015, 12:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X