இதிலும் சீனாவின் ஆதிக்கமா? Startup-களின் தலை நகராகும் பெய்ஜிங்! சுவாரஸ்ய தரவுகள் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் வியாபாரம் என்றால் இப்படித் தான் நடக்க வேண்டும். இந்த வேலைகளை எல்லாம் செய்ய இத்தனை நாள் ஆகும் எனச் சொல்லிக் கொண்டு இருந்தோம்.

 

அந்த ஒட்டு மொத்த வியாபார முறைகளையும், வியாபார தன்மையையும் மாற்றி அமைத்தவர்கள் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தான். Startup கம்பெனிகளின் புதுமையான யோசனை, அதை செயல்படுத்தும் முறை எல்லாமே உலக பொருளாதாரத்தையும் சேர்த்தே வளர்த்து இருக்கிறது.

சரி உலக அளவில், ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு பேச்சு இருக்கிறதே உண்மையா? சீனாவின் யுனிகார்ன் Startup கம்பெனிகள் எத்தனை இருக்கின்றன? இப்படி பல விவரங்களை Hurun Global Unicorn Index 2020 தரவுகள் நமக்கு விளக்குகின்றன. வாருங்கள் பார்ப்போம்.

உலக அளவில் யுனிகார்ன் பட்டியல்

உலக அளவில் யுனிகார்ன் பட்டியல்

யுனிகார்ன் - ஒரு Startup கம்பெனியின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலருக்கு மேல் போனால் அதை யுனிகார்ன் என்று சொல்வார்கள். இப்படி உலக அளவில் மொத்தம் 586 Startup கம்பெனிகள், 29 நாடுகளில் 145 நகரங்களில் இருக்கின்றனவாம். உலக பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் இத்தாலி, ரஷ்யா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் ஒரு யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனி கூட இல்லை என்கிறது ஹூரன் குளோபல் யுனிகார்ன் இண்டெக்ஸ் 2020 தரவுகள்.

டாப் 5 நாடுகள் எவை

டாப் 5 நாடுகள் எவை

உலகிலேயே அதிக அளவில் யுனிகார்ன் Startup கம்பெனிகள் இருக்கும் நாடு அமெரிக்கா. 233 யுனிகார்ன் Startup கம்பெனிகள் இருக்கின்றனவாம். அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா, 227 யுனிகார்ன் Startup கம்பெனிகளை வைத்திருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து (24), இந்தியா (21), தென் கொரியா (11) யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளை வைத்திருக்கிறார்களாம்.

உலக ஸ்டார்ட் அப் தலை நகரம் பெய்ஜிங்
 

உலக ஸ்டார்ட் அப் தலை நகரம் பெய்ஜிங்

உலக அளவில் ஒரே ஒரு நகரம் 93 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் நகரமாக இருக்கிறது என்றால் அது சீனாவின் பெய்ஜிங் தான். இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ இருக்கிறது. ஆனால் அங்கு 68 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் தான் இருக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் பெய்ஜிங்கை எட்டிப் பிடிப்பது அத்தனை எளிதல்ல. 3-வது இடத்தில் 47 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுடன் சீனாவின் ஷாங்காய் நகரம் இருக்கிறது.

எந்த துறையில் வியாபாரம்

எந்த துறையில் வியாபாரம்

சீனாவின் யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகள்
இ - காமர்ஸ் (E- Commerce),
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence),
நிதி டெக்னாலஜி (Fin Tech), லாஜிஸ்டிக்ஸ் (Logistics),
ஹெல்த் டெக் (Health Tech) போன்ற துறைகளில் அதிகம் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் ஃபின் டெக் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் எனலாம்.

ஃபின் டெக்கில் தொட முடியாத முன்னிலை

ஃபின் டெக்கில் தொட முடியாத முன்னிலை

குறிப்பாக நிதி டெக்னாலஜி சேவைகளில் இருக்கும் சீன யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் மதிப்பு 239 பில்லியன் டாலராக இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டின் ஃபின் டெக் ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் மதிப்பீடுகளும், இதற்கு பக்கத்தில் கூட இல்லை என்பதை அடிக்கோடு போடலாம்.

உலகின் டாப் 5 யுனிகார்ன் ஸ்டார்ட் அப்

உலகின் டாப் 5 யுனிகார்ன் ஸ்டார்ட் அப்

ஒட்டு மொத்த பட்டியலில் வேண்டுமானால் அமெரிக்கா முன்னிலை வகிக்கலாம். ஆனால் அதிக மதிப்பீடு கொண்ட டாப் யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பட்டியலில் சீனாநான்கு இடங்களைப் பிடித்து இருக்கின்றன. ஆண்ட் குழுமம் 150 பில்லியன் டாலர், பைட் டான்ஸ் 80 பில்லியன் டாலர், டிடி சுசிங் (Didi Chuxing) 55 பில்லியன் டாலர், லுஃபாக்ஸ் (Lufax) 38 பில்லியன் டாலர் என டாப் 4 இடங்கள் சீனாவுக்கு. ஐந்தாவது இடத்தில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் 36 பில்லியன் டாலர் உடன் இருக்கிறது.

முன்னேறும் சீன ஸ்டார்ட் அப் கம்பெனிகள்

முன்னேறும் சீன ஸ்டார்ட் அப் கம்பெனிகள்

உலகின் டாப் 10 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகள் பட்டியலில், Kuaishou, Cainiao என்கிற இரண்டு சீன ஸ்டார்ட் அப் கம்பெனிகள் புதிதாக இடம் பிடித்து இருக்கின்றன. போனால் போகட்டும் என ஒரே ஒரு அமெரிக்க யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனி 10-வது இடத்தைப் பிடித்து இருக்கிறது. ஆக டாப் 10 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் 6 கம்பெனிகள் சீன கம்பெனிகள். அதிலும் 2 புது வரவு. ஆக ஸ்டார்ட் அப் உலகத்தையும் சீனா விட்டு வைக்காமல் ஆதிக்கம் செலுத்துவதை இந்த தரவுகள் உறுதி செய்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China strong presence in startup space Beijing home for 93 startups

The communist ruling china is having a very strong presence in world startup space. As per the Hurun Global Unicorn Index 2020, Beijing is the homeland for 93 startup companies.
Story first published: Wednesday, August 5, 2020, 12:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X