ஒரே ஒரு பதிவு.. சீன பில்லியனருக்கு ரூ.18,365 கோடி கோவிந்தா.. அப்படி என்ன பதிவு போட்டார்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனா அரசு, சீன பில்லியனர்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர். அலிபாபா - ஜாக் மா - சீன அரசு மத்தியிலான பிரச்சனையில் சற்று தணிந்துள்ள வேளையில் சீனாவின் இண்டர்நெட் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

 

இதற்கிடையில் சீனாவின் முன்னணி ரீடைல், நுகர்வோர், டெலிவரி சேவையில் ஈடுபட்டு இருக்கும் Meituan நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வாங் ஜிங் தனது சமுகவலைதளக் கணக்கில் 1,100 ஆண்டுப் பழமையான ஒரு பாடலின் வரிகளைப் பதிவிட்டார்.

இவ்வளவு தான் விஷயம், ஆனால் இதற்குப் பின் நடந்து படுமோசம்.. அப்படி இந்தப் பாடல் வரியில் என்ன இருந்தது.

 Meituan நிறுவனம்

Meituan நிறுவனம்

Meituan நிறுவனத்தின் சிஇஓ தலைமை நிர்வாக அதிகாரியான வாங் ஜிங் மே 6ஆம் தேதி 1100 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான ஒரு பாடலில் குவின் வம்சத்தை விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்தப் பாடல் வரிகள் தற்போது சீன அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 புத்தகங்கள் எரிப்பு

புத்தகங்கள் எரிப்பு

வாங் ஜிங் பதிவிட்ட இந்தப் பாடல் வரிகளில், படிக்காதவர்கள்/அறிவில்லாதவர்கள் முன்னேறுவதற்காகப் படித்தவர்களை அடக்க வேண்டும் என்ற நோக்கில் குவின் வம்சத்தினர் புத்தகங்கள் எரித்தனர் என்ற வரியை Meituan குழுமம் உருவாக்கிய சமூகவலைத்தளத்தில் வாங் பதிவிட்டார்.

 ஜி ஜின்பிங்-ன் சீன அரசு
 

ஜி ஜின்பிங்-ன் சீன அரசு

ஆனால் சீன சமுகவலைதளத்தில் பலர் வாங் ஜிங், சீன அதிபரான ஜி ஜின்பிங் தலைமையிலான அரசின் மோனோபோலிக்கு எதிரான நடவடிக்கையைத் தான் விமர்சிக்கிறார் எனக் கருத்துப் பரவத் துவங்கியது. இதற்கிடையில் வாங் ஜிங் தனது தொழில் போட்டியாளர்களைத் தான் விமர்சனம் செய்ததாக விளக்கம் அளித்தார். இதன் பின்பு வாங் ஜிங் செய்த சமுக வலைதளப் பதிவும் நீக்கப்பட்டது.

 வாங் ஜிங்-ன் சொத்து மதிப்பு

வாங் ஜிங்-ன் சொத்து மதிப்பு

இதற்கிடையில் Meituan நிறுவனத்தின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் அல்லமல்ல வாங் ஜிங்-ன் சொத்து மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.

 MEITUAN நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி

MEITUAN நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி

இதன் எதிரொலியாக ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள MEITUAN நிறுவனத்தின் பங்குகள் 313 ஹாங்காங் டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 249 டாலர் வரையில் சரிந்துள்ளது.

 18,365 கோடி ரூபாய் இழப்பு

18,365 கோடி ரூபாய் இழப்பு

இந்தச் சரிவில் MEITUAN நிறுவனத்தின் சிஇஓ வாங் ஜிங் சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டாலர் அதாவது 18,365 கோடி ரூபாய் சரிந்துள்ளது. இதேவேளையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர் மாயமாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese billionaire Meituan's CEO Wang Xing lost Rs 18,365 crore for sharing a 1100yr old poem

Chinese billionaire Meituan's CEO Wang Xing lost Rs 18,365 crore for sharing a 1100yr old poem
Story first published: Wednesday, May 12, 2021, 15:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X