21,000 பேருக்கு ஒரே நாளில் வேலை அவுட்.. கதறும் பணியாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : பிரபல பிரிட்டனின் சுற்றுலா நிறுவனமான தாமஸ் குக் நிறுவனம் திவால் அடைந்துள்ளதாகவும், இதனால் அந்த நிறுவனத்தில் பணி புரியும் மொத்தம் 21,000 பேர் தங்களது வேலையினை இழந்துள்ளனர்.

1841ல் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், சுமார் 178 வருட பழமையான இந்த நிறுவனம் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாடுகளிலும், ரயில் விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கான வசதிகளை செய்து கொடுத்து வந்தது.

இந்த நிலையில் இந்த நிறுவனம் சொந்தமாக விமான சேவையையும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

திவால் நிலைக்கு தள்ளப்பட்டது

திவால் நிலைக்கு தள்ளப்பட்டது

உலக பொருளாதாரமே மந்த நிலையில் இருக்கும் இந்த நிலையில், தாமஸ் குக் நிறுவனம் கடந்த சில வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில் தான் இந்த நிறுவனத்தில் சீனா நிறுவனம் 900 மில்லியன் பவுண்டுகளை முதலீடு செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனத்திற்கு 1.25 பில்லியன் கடன் இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தீவிர கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்காக இந்த நிறுவனம் பல வகையிலும் முயற்சித்தும் எதுவும் கைகொடுக்காமல் போகவே, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பயணிகள் தவிப்பு

பயணிகள் தவிப்பு

இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், இதனை நம்பி வந்த பயணிகள் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதற்கான தொகையை தாமஸ் குக் நிறுவனத்திடம் செலுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிவித்ததையடுத்து, பயணிகள் மீண்டும் பணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில பயணிகள் ஏற்கனவே நாங்கள் பணம் செலுத்திவிட்டோம், இனியும் செலுத்த முடியாது என்றும் கூறிவருகின்றனராம். இந்த நிலையில் பயணிகள் பிரிட்டீஷ் அரசினை நாடியுள்ளனர்.

இவ்வளவு பேர் வேலையினை இழந்துள்ளனரா?

இவ்வளவு பேர் வேலையினை இழந்துள்ளனரா?

உலகெங்கிலும் உள்ள இந்த நிறுவனத்தில் மொத்தம் 21,000 ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள் என்றும், இதில் இங்கிலாந்தில் மட்டும் 9,000 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் திவால் நடவடிக்கையை அடுத்து 21,000 பணியிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் திவால் நடவடிக்கையால் இந்த நிறுவனம் நடத்தி வந்த நான்கு விமான நிறுவனங்களும் தரையிறக்கப்படும் என்றும் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்துள்ளது.

பயணிகள் பாதிப்பு

பயணிகள் பாதிப்பு

இந்த நிறுவனம் தீடிரென மூடப்பட்டதால், இதனை நம்பி வந்த பயணிகள் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே இதற்கான தொகையை தாமஸ் குக் நிறுவனத்திடம் செலுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அறிவித்ததையடுத்து, பயணிகள் மீண்டும் பணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில பயணிகள் ஏற்கனவே நாங்கள் பணம் செலுத்திவிட்டோம், இனியும் செலுத்த முடியாது என்றும் கூறிவருகின்றனராம். இந்த நிலையில் பயணிகள் பிரிட்டீஷ் அரசினை நாடியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lose job வேலை
English summary

Civil Aviation Authority said Thomas Cook has stopped its services and four airlines will be grounded

Thomas Cook has stopped its services and four airlines will be grounded
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X