அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

காக்னிசென்ட் ஐடி நிறுவனம் அமெரிக்காவின் எச்-1பி விசா சேவையினை அதிகளவில் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுத்து வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்திய ஊழியர்களுக்கு அதிகச் சலுகைகள் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இங்குப் பணிபுரிந்து வந்த வெளிநாட்டு ஊழியர்கள் மூவர் இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களது செயல்பாட்டுத் திறனை குறைத்துக் காட்டுவதாகவும் மற்றும் பதவி உயர்வு அளிக்க மறுப்பதாகவும் அதே நேரம் தங்களை விடக் குறைவான தகுதி படைத்த தெற்காசிய ஊழியர்களுக்குப் பல சலுகைகளை வழங்குவதாகப் புகார் அளித்துள்ளனர்.

காக்னிசெண்ட்

காக்னிசென்ட் நிறுவனம் இது குறித்துச் சரியான பதிலை அளிக்காமல், இந்தப் புகாரினை வைத்து பெடரல் சிவில் உரிமைகள் சட்டத்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

டிரம்ப்

வெளிநாட்டு ஊழியர்களைக் குறைத்து அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்வது தான் தலையாயக் கடமை என்ற வாக்குறுதியினை அளித்து அமெரிக்க அதிபர் ஆகியுள்ள டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கையால் இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தில் எழுந்து ஊழியர்கள் பிரச்சனை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

நீதிபதி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிபதியான டாலி ஜி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கான்கின்சென்ட் வைத்த கோரிக்கையினை நிராகரித்துள்ளார்.

எச்-1பி விசா

சென்ற ஆண்டுக் காக்னிசென்ட் நிறுவனம் 29,000 ஊழியர்களை எச்-1பி விசா திட்டத்தின் அமெரிக்காவில் பணியமர்த்தியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. அமெசான், மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் 5,000 நபர்களுக்கும் குறைவாகவே எச்-1பி விசா சேவையினைப் பயன்படுத்தியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Cognizant, number one H1B visa sponsor, battles anti white bias lawsuit

Cognizant, number one H1B visa sponsor, battles anti white bias lawsuit
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns