கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர் வரை பாதிக்கப்படலாம் என்று ஐ நாவின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறியுள்ளது.
சில நாடுகளில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக, உலகளாவிய ஆண்டு வளர்ச்சியை 2.5% சதவிகிதத்திற்கும் குறைவாக குறைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
சொல்லப்போனால் உலக பொருளாதாரத்தில் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி குறையலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதுவும் அது இரண்டு சதவிகிதத்திற்கும் மேலாக குறையலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை
கொரோனா வைரஸ் மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதோடு, பொருளாதாரத்திலும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் 1 டிரில்லியன் டாலர் பாதிக்கப்படலாம் என்றும் ஐநா தெரிவித்துள்ளது. மேலும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் உலக வருமானத்தில் 2 டிரில்லியன் டாலர் பற்றாக்குறை காணப்படுகிறது. இது வளரும் நாடுகளுக்கு 220 பில்லியன் டாலராகும்.

வீழ்ச்சியடையக் கூடும்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இருக்கும். எனினும் மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளும் 1% மேற்பட்ட வளர்ச்சியை இழக்க நேரிடும். எனினும் வலுவான வர்த்தக தொடர்புகளை கொண்டவர்களும் கூட, ஆரம்பத்தில் சற்று வீழ்ச்சியடையக் கூடும்.

வர்த்தக தாக்கம்
குறிப்பாக அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க மண்டலம் போன்ற நாடுகளில் 0.7% முதல் 0.9% வரை வளர்ச்சி குறைய வாய்ப்புகள் உள்ளது. ஐ நாவின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்தியாவுக்கான கொரோனா வைரஸ் தொற்று நோயின் வர்த்தக தாக்கம், சுமார் 348 மில்லியன் டாலராக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்பு இருக்கலாம்
சீனாவில் உற்பத்தி மந்தநிலை உலக வர்த்தகத்தை சீர்குலைப்பதால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள, முதல் 15 பொருளாதாரங்களில் மிகவும் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் சீனாவில் உற்பத்தி தாக்கம் உலகளாவிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இது உலகளாவிய அளவில் ஏற்றுமதி மற்றும் வினியோக சங்கிலிகள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பொருளாதாரத்தினை பாதிக்கும்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச நிதிச் சந்தைகள் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதைக் கணிப்பது கடினம். ஆக இந்த அச்சங்களைக் கணிக்க அரசாங்கங்கள் நேரத்தினை செலவழிக்க வேண்டும். மேலும் மத்திய வங்கிகளும் இந்த நெருக்கடியை தீர்க்கும் நிலையில் இல்லை. ஆக இதற்கான மறுசீரமைப்பு கொள்கைகள் எடுக்க பல நாடுகள் போராடி வருகின்றன. எனினும் இது நிச்சயம் பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.