கொரோனாவால் ரூ.30 லட்சம் கோடி நஷ்டம்! பில்லியனர்களுக்கே பயங்கர அடியாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால் அன்றாட மக்கள், தங்கள் மாத சம்பளம் வருமா வராதா என பயந்து கொண்டு இருக்கிறார்கள். கட்டட வேலை செய்பவர்கள், தினக் கூலிகள் எல்லாம், வேலை கிடைக்கவில்லை என வருத்தத்தில் இருக்கிறார்கள்.

Recommended Video

பணக்காரர்களை கதற விடும் கொரோனா! டிமிக்கி கொடுத்த Amazon

உலக வர்த்தகமே ஸ்தம்பித்து இருக்கிறது. எனவே கம்பெனிகளுக்கு வியாபாரங்களும் ஸ்தம்பித்து இருக்கின்றன.

ஆனால் உலகின் டாப் 100 பணக்காரர்களோ, இந்த கொரோனாவால், தங்களுகளுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக, வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். என்ன கணக்கு? ஏன் இந்த நஷ்டம்?

ஹூரன் பட்டியல்

ஹூரன் பட்டியல்

Hurun அறிக்கை, உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு சரிந்து இருக்கிறது என சமீபத்தில் ஒரு கணக்கிட்டு இருக்கிறது. இவர்கள் சமீபத்தில் தான் ஹூரன் ரிச் லிஸ்ட் 2020 அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் பில்லியனர்களின் சொத்து மதிப்பு ஜனவரி 31, 2020 நிலவரப்படி கணக்கிட்டு இருந்தார்கள்.

13 % காலி

13 % காலி

இப்போது இந்த கொரோனா வைரஸால் பில்லியனர்கள் எவ்வளவு சொத்து மதிப்பை இழந்து இருக்கிறார்கள் எனக் கணக்கிட்டு இருக்கிறது இந்த ஹூரன் அறிக்கை. இவர்கள் கணக்குப் படி உலகின் டாப் 100 பில்லியனர்கள், கடந்த 2 மாதத்தில் சுமார் 408 பில்லியன் அமெரிக்க டாலரை (மொத்த சொத்து மதிப்பில் 13 %) இழந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்திய மதிப்பில் 408 பில்லியன் டாலர் என்பது சுமார் 30.060 லட்சம் கோடி ரூபாய்.

86% பேரின் சொத்துக்கள் டவுன்

86% பேரின் சொத்துக்கள் டவுன்

ஹூரன் ரிச் லிஸ்டில் இருக்கும் டாப் 100 பில்லியனர்களில் சுமார் 86 % பேரின் சொத்து மதிப்புகள் சரிந்து இருக்கிறதாம். 9 % பேரின் சொத்து மதிப்பு மட்டும் தான் அதிகரித்து இருக்கிறதாம். அதுவும் பெரும்பாலும் சீனர்கள் தானாம். 5 % பில்லியனர்களின் சொத்துக்கள் மாற்றம் இல்லாமல் இருக்கின்றனவாம்.

உலக பங்குச் சந்தைகள்

உலக பங்குச் சந்தைகள்

கடந்த 2 மாதத்தில் அமெரிக்க பங்குச் சந்தைகள் 21 %, சரிந்து இருக்கிறது. அதே போல இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாட்டுச் சந்தைகள் சுமார் 25 % சரிந்து இருக்கிறது. ஜப்பான் 18 %, ஹாங்காங் 10 % என சரி கொஞ்சம் கடுமையாகவே இருக்கிறது.

கரன்ஸிகள்

கரன்ஸிகள்

அதே போல டாலருக்கு நிகரான பல நாட்டு கரன்ஸிகளும் கடந்த 2 மாதங்களில் பெரிய வீழ்ச்சி கண்டு இருக்கின்றன. பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் சுமார் 6.3 %, இந்திய ரூபாய் சுமார் 5.2 %, சீனாவின் யுவான் சுமார் 2.3 %, யூரோ சுமார் 0.4 % என கணிசமான இறக்கம் கண்டு இருக்கின்றன.

கம்பெனி பங்குகள்

கம்பெனி பங்குகள்

பணக்காரர்கள் பெரும்பாலும், தங்கள் கம்பெனி பங்குகளை புரொமோட்டர்கள் என்கிற கணக்கில், அதிகமாக வைத்திருப்பதால், அவர்களின் சொத்து மதிப்பும் அதிகமாக இருக்கும், அவர்களின் கம்பெனி பங்கு விலை சரிகிறது என்றால், பில்லியனர்களின் சொத்து மதிப்பும் பெரிய அளவில் சரியும். அது தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட பங்குச் சந்தை சரிவால் கடந்த 2 - 2.5 ஆண்டுகளில் கண்ட ஏற்றங்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாம்.

எப்படி 30 லட்சம் கோடி

எப்படி 30 லட்சம் கோடி

408 பில்லியன் டாலர் = 40,800 கோடி டாலர். ஆக, 40,800 கோடி டாலர் * 75 ரூபாய் = 30,60,000 கோடி ரூபாய் சுருக்கமாக 30.60 லட்சம் கோடி ரூபாய். இந்த 30 லட்சம் கோடி ரூபாயை கொரோனா பேரில் கணக்கு எழுதுகிறார்களாம். அந்த அளவுக்கு கொரோனா வைரஸால், உலக பணக்காரர்களின் சொத்து பத்துக்களையே காலி செய்து இருக்கிறதாம்.

யாருக்கு அதிக நஷ்டம்

யாருக்கு அதிக நஷ்டம்

உலகின் புகழ் பெற்ற முதலீட்டாளர் வார பஃபெட் 19 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்து இருக்கிறார். இந்தியாவின் முகேஷ் அம்பானி 28 பில்லியன் டாலர் நஷ்டம் கண்டு இருக்கிறார். LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் சுமார் 30 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus: 100 billionaires lost Rs 30 lakh crore in 2 months

As per Hurun Rich list top 100 billionaires lost around 30 lakh crore rupee of their wealth. It is around 13 percent of their total wealth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X