Harvard, MIT பல்கலைக் கழகங்களுக்கே இப்படி ஒரு நிலையா.. எல்லாம் இந்த கொரோனாவினால் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலக மக்களையே என்ன சேதி என கேட்டு வரும் கொரோனா, கல்வித் துறையையும் விட்டு வைக்கவில்லை எனலாம். அதிலும் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவினையும் விட்டு வைக்க வில்லை எனலாம்.

அதிலும் அமெரிக்காவின் மிகப்பெரிய உயரிய பலகலைக் கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினையும், அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிலையமான மாசாசூசெட்சூ தொழில்நுட்ப கழகத்தினையும் (Massachusetts Institute of Technology) கொரோனா விட்டு வைக்கவில்லை எனலாம்.

ஏனெனில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்கள், தொழிலகங்கள் என அனைத்தும் முடங்கியுள்ளன.

சம்பளம் குறைப்பு & பணி நீக்கம்

சம்பளம் குறைப்பு & பணி நீக்கம்

இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைகழங்கள் கூட தங்களது ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்து வருகின்றனராம். குறிப்பாக ஹார்வர்டு பல்கலைக் கழகம், அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிலையமான மாசாசூசெட்சூ தொழில்நுட்ப கழகமும் சம்பள குறைப்பு மற்றும் புதியதாக பணி அமர்த்தலையும் முடக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செலவினை கட்டுப்படுத்த நடவடிக்கை

செலவினை கட்டுப்படுத்த நடவடிக்கை

உலகளவில் கொரோனாவினை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் அமெரிக்கா நிறுவனங்கள் கூட, தற்போது செலவினங்களை கட்டுப்படுத்த கடினமான முடிவுகளை செயல்படுத்தி வருகின்றன. ஒரு புறம் பணி நீக்கம், சம்பள குறைப்பு, பணியமர்த்தல் என அனைத்திலும் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பரிசீலனை

பரிசீலனை

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தினசரி மாணவர்கள் செய்தித்தாளில் சம்பளம் முடக்கம், பணியமர்த்தல், செலவினங்களை ரத்து செய்தல், ஒத்தி வைத்தல் மற்றும் அனைத்து மூல திட்டங்களையும் தள்ளிவைத்தல் என பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

எவ்வளவு பணி நீக்கம்

எவ்வளவு பணி நீக்கம்

அது மட்டும் அல்ல ஹார்வர்டின் 12 பள்ளிகளின் டீன்கள், துணைத் தலைவர்கள், தலைவர்கள், பள்ளி நிர்வாகிகளுக்கும் சம்பளத்தினை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் கஷ்டத்தினை அனுபவிக்கும் ஊழியர்களுக்கு நிதி உதவி அளிப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. அங்கு மட்டும் உலகம் முழுக்க விஸ்வருபம் எடுத்து ஆடி வரும் கொரோனாவால் இன்னும் எத்தனை பேர் தங்களது பணியினை இழப்பார்களோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: Harvard, MIT announces hiring freeze and leadership pay cuts

US educational institutions Harvard University and Massachusetts Institute of Technology are implementing salary and hiring freeze and their top leadership will take pay cuts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X