பலத்த வேலையிழப்பினை சந்தித்து வரும் UK.. போரிஸ் ஜான்சனுக்கு காத்திருக்கும் சவால்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் நெருக்கடியால் சர்வதேச அளவில் பல லட்சம் தொழிலாளர்கள் தங்களது வேலையினை இழந்து வருகின்றனர். அதற்கு வல்லரசு நாடான அமெரிக்காவே மிகச் சிறந்த உதாரணம்.

ஏற்கனவே அரசு மிகப்பெரிய வேலைவாய்ப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், பிரிட்டனில் வேலையிழப்பு 2009க்கு பிறகு மிக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு சுயதொழில் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால், இரண்டாவது காலாண்டில் 2,20,000 பேருக்கும் குறைவான மக்களே சுயதொழில் மூலம் பணிபுரிந்ததாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேலையிழப்பு அதிகரிப்பு
 

வேலையிழப்பு அதிகரிப்பு

ஜூலை மாதத்திற்கான வரி தரவு, மார்ச் மாதத்தில் இருந்தே நிறுவனத்தின் ஊதியத்தில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை, 7,30,000 ஆக குறைந்துவிட்டது எனவும் காட்டுகிறது. இது வேலையின்மை அதிகரிப்பு பற்றி எச்சரிக்கையை காட்டுகிறது. ஊழியர்களை பாதுகாக்கும் வேலை தக்க வைப்பு திட்டத்தினை பிரிட்டன் மூடலாம் எனப்படுவதால், வேலை இழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது பெரும் குழப்பமாக மாறும்

இது பெரும் குழப்பமாக மாறும்

பிரிட்டனில் இந்த திட்டம் அக்டோபரின் இறுதியில் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சந்தை தரவுகளின் சமீபத்திய தொகுப்பில் காணப்படும் விரிசல்கள், விரைவில் ஒரு குழப்பமாக மாறும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பிரிட்டீஸ் நிதி மந்திரி ரிஷி சுனக் அரசாங்கத்தின், ஆதரவு திட்டங்கள் செயல்படுவதாகவே கூறியுள்ளார். எனினும் வேலை இழப்பு தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.

தெளிவான திட்டம் உள்ளது

தெளிவான திட்டம் உள்ளது

ஒவ்வொரு வேலைகளையும் எங்களால் பாதுகாக்க எங்களால் முடியாது என்றும் நான் எப்போதுமே தெளிவாக இருந்தேன். ஆனால் யாரும் நம்பிக்கை இன்றி இருப்பதை உறுதி செய்வதற்காக வேலைகளை பாதுகாக்கவும், ஆதரிக்கவும் எங்களுக்கு ஒரு தெளிவான திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

வேலையிழப்பு பற்றிய கணிப்பு
 

வேலையிழப்பு பற்றிய கணிப்பு

ராய்ட்டர்ஸ் வாக்களித்த பொருளாதார வல்லுனர்கள், வேலையின்மை விகிதம் 4.2% ஆக உயரும் என்றும் எதிர்பார்த்தனர். இதே கடந்த வாரத்தில் இங்கிலாந்து வங்கி இந்த ஆண்டின் இறுதியில் வேலையின்மை விகிதம் 7.5%ஐ எட்டும் என்று கணித்துள்ளது. பல்வேறு துறைகளில் இழக்கும் வேலை இழப்புகளுக்கு, வேலை இழக்க நேரிடும் நபர்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேபிஎம்ஜி பொருளாதார நிபுணர் யேல் செல்பின் கூறியுள்ளார்.இது போரிஸ் ஜான்சனுக்கும் பெரும் சவாலாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து மட்டும் அல்ல, அனைத்து நாடுகளிலும் வேலையிழப்பு என்பது, தொடர்ந்து அதிகரித்து வருவது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

coronavirus impact: UK suffers big job losses since 2009

British finance minister Rishi Sunak said the figures showed the government's support programmes were working but job losses were unexpected
Story first published: Tuesday, August 11, 2020, 19:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X