அதிவேகமாக பரவும் கொரோனா.. சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும்.. ஐஎம்எஃப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் புதிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிச்சயம் இருக்கும். ஆனால் அதை தற்போது சொல்வது மிக கடினம். எனினும் நிச்சயம் அதன் தாக்கம் இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.

இது குறித்து வெளியான அறிக்கையில், சீனாவில் கொரோனா வைரஸால் தாக்கம் இருக்கும். அதை தற்போது சொல்வது மிக கடினம். ஆனால் சற்று வீழ்ச்சி இருக்கும் என்று கிறிஸ்டலினா தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இந்த கொடிய வைரஸால் இறப்பு எண்ணிக்கை 1,350யும் தாண்டியுள்ளது. மேலும் இந்த மாத கடைசியில் இறப்பு எண்ணிக்கையானது உச்சத்தை தொடலாம் என்ற நம்பிக்கைகள் வலுத்துள்ளன.

லேசான தாக்கம்

லேசான தாக்கம்

மேலும் சர்வதேச நாணய நிதியம் ஒரு வித வி வடிவ தாக்கத்தை ("V-shaped impact) எதிர்பார்க்கிறது. இந்த கொடிய கொரோனாவினால் சீனாவின் செயல்பாட்டில் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கூர்மையான மீட்சி உள்ளது. அதாவது உலகின் மற்ற பகுதிகளுக்கு லேசான தாக்கம் மட்டுமே இருக்கும் என்றும் ஜார்ஜீவா சிஎன்பிசியில் கூறியுள்ளார்.

பாதிப்பு எப்படி இருக்கும்?

பாதிப்பு எப்படி இருக்கும்?

எனினும் இந்த கணிப்புகள் செய்வது மிக முன்னரே ஆரம்பமாகியுள்ளது. சீனா சார்ஸ் வைரஸ் தாக்கத்தை எதிர்கொண்டு இருந்தபோதினை விட, உலகப் பொருளாதாரம் சற்று குறைவான வலிமையுடன் உள்ளது. ஆக இதன் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியாது. மேலும் சீனா வேறுபட்டது. உலகம் வேறுபட்டது என்றும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன.

சீனாவின் வளர்ச்சி

சீனாவின் வளர்ச்சி

மேலும் சீனாவின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 6% ஆக வளரக்கூடும். ஆனால் சார்ஸ் வைரஸ் தாக்கத்தின் போது 2003ல் இது 10% ஆக இருந்தது என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிகாரிகளும் எந்த ஒரு முன்னறிவிப்புகளை வழங்க தயங்குகிறார்கள். ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு குறுகிய காலமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் என்று ஜார்ஜீவா கூறியுள்ளார்.

நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்

நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்

ஆக இந்த வைரஸானது சீனாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சீனாவின் கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரையில் இந்த ஆண்டைத் தாண்டிலும் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 கவனமாக கண்காணித்து வருகிறோம்

கவனமாக கண்காணித்து வருகிறோம்

மேலும் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், நாங்கள் மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறோம் என்ற கருத்தை நினைவு கூர்ந்துள்ளார் முனுச்சின். எப்படி இருப்பினும் அமெரிக்கா பொருளாதாரமோ, சீனாவோ அல்லது இந்தியாவோ நிச்சயம் கொரோனாவின் தாக்கத்தினை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அதிலும் இந்தியா தற்போது இருக்கும் நிலையில் இருமடங்கு தயாராக இருக்கவேண்டும்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronovirus impact: IMF chief said global growth may hit should be mild

IMF chief krishtalina gerorgieva said coronovirus may impact world economic in mild. And now death toll from coronavirus in China climbed past 1,350, but hopes have risen that the outbreak could peak later this month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X