ஸ்க்விட் கேம் பெயரில் கிரிப்டோகரன்சி மோசடி.. 3.38 மில்லியன் டாலர் அபேஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஸ்க்விட் கேம் வெப் சீரியஸ் பெயரில் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோகரன்சி சந்தையில் ஸ்க்விட் என்ற எனப் பெயரில் வெளியான மீம் காயின் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்தது.

 

தற்போது கிரிப்டோகரன்சி சந்தையில் டோஜ்காயின், ஷிபா இனு போன்ற மீம் காயின் தாறுமாறான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாக ஸ்க்விட் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தனர்.

இந்த அதிரடியான முதலீட்டில் ஸ்க்விட் காயின் சுமார் 230,000% வளர்ச்சி அடைந்தது.

நாங்க சீனா மாதிரி இல்லை.. கிரிப்டோகரன்சி மீது ஆர்வம் காட்டும் இந்தோனேஷியா, தாய்லாந்து..!

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோ சந்தையில் தற்போது அதிகளவில் கிரிப்டோகரன்சிகள் முதலீட்டுக்காக இயங்கி வருகிறது, இதில் பல கிரிப்டோகரன்சி குறித்து முழுமையான தகவல்கள் தெரியாத நிலையிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

இது ஆபத்து

இது ஆபத்து

இது ஆபத்தான நிலை எனப் பல கிரிப்டோ சந்தை வல்லுனர்கள் கூறினாலும் குறைந்த காலகட்டத்தில் அதிக லாபம் வேண்டும் என நோக்கத்தில் முதலீடு செய்வோர் ஸ்விக்ட் போன்ற மோசடிகளில் சிக்குகின்றனர்.

230,000% வளர்ச்சி

230,000% வளர்ச்சி

அக்டோபர் 26ஆம் தேதி ஸ்க்விட் கிரிப்டோ வெறும் 0.012 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் 230,000% உயர்ந்து 2,861.80 டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தக் கிரிப்டோ உரிமையாளர்கள் கிரிப்டோவை விற்பனை செய்து விட்டு மாயமாகியுள்ளதாகத் தெரிகிறது.

ஸ்க்விட் கிரிப்டோகரன்சி
 

ஸ்க்விட் கிரிப்டோகரன்சி

இதனால் இந்த ஸ்க்விட் கிரிப்டோகரன்சியை மோசடி என அறிவிப்பு வெளியாகக் காரணத்தால் ஸ்க்விட் கிரிப்டோ விலை 100 சதவீதம் இறங்கி தற்போது 0.0031 டாலராகச் சரிந்துள்ளது. மேலும் இந்தக் கிரிப்டோ மோசடி குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியாவதன் மூலம் டோஜ்காயின், ஷிபா இனு ஆகியவை அதிகளவில் பாதிக்கப்பட்டும்.

 கிரிப்டோ சந்தை

கிரிப்டோ சந்தை

மேலும் ஸ்க்விட் கிரிப்டோகரன்சி உருவாக்கியவர்கள் இதை மொத்தமாக நிறுத்திவிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் உள்ளது. இதைக் கிரிப்டோ சந்தையில் "rug pull" என அழைப்பார்கள்.

3.38 மில்லியன் டாலர் மாயம்

3.38 மில்லியன் டாலர் மாயம்

இதுமட்டும் அல்லாமல் கிரிப்டோகரன்சி உருவாக்கியவர்கள் விற்பனை செய்யப்பட்ட கிரிப்டோகரன்சி மூலம் திரட்டப்பட்ட 3.38 மில்லியன் டாலர் உடன் மாயமாகியுள்ளது கிரிப்டோ சந்தையில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

பிட்காயின் மதிப்பு இன்று 1.02 சதவீதம் அதிகரித்து 62,766.96 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crypto Squid promoters flee with $3.38m in sales: after 230,000% gain in just a weeks

Crypto Squid promoters flee with $3.38m in sales: after 230,000% gain in just a weeks
Story first published: Tuesday, November 2, 2021, 17:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X