உலக வங்கிக்கு புதிய தலைவர்.. அமெரிக்கரான மால்பாஸ் தேர்வு.. தொடரும் ''அண்ணன்களின்'' ஆதிக்கம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. அப்படிப்பட்ட உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக வங்கிக்கு புதிய தலைவர்.. அமெரிக்கரான மால்பாஸ் தேர்வு.. தொடரும் ''அண்ணன்களின்''  ஆதிக்கம்

உலக வங்கியின் செயல்குழு எந்த வித போட்டியுமின்றி 63 வயதான டேவிட் மால்பாஸை தற்போது தலைவராக தேர்வு செய்துள்ளது.தற்போது இருக்கும் அமைச்சரவையில் டிரம்ப் நிதித்துறை துணை அமைச்சராகவும், சர்வதேச கருவூல விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பையும் வகிக்கிறார்.

இந்த நிலையில், ஜிம் யோங் கிம் கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதையடுத்து, அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி மல்பாஸ் என்பவரை உலக வங்கியின் தலைவராக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்ததையடுத்து புதிய தலைவராக டேவிட் மால்பாஸ் தேர்வாகி உள்ளார். இவர் உலக வங்கியின் 73-வது அமெரிக்க தலைவராகும். வரும் 9-ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக டேவிட் மால்பாஸ் பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில், இதுவரையில் உலக வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்த அனைவருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தவிர சர்வதேச நிதி கார்ப்பரேஷன், பன்முக முதலீட்டு உத்தரவாத முகமை, முதலீடு சார்ந்த சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் சர்வதேச நிர்வாகக் கவுன்சிலின் பொறுப்புகள் ஏதும் இல்லாத தலைவராக இருப்பார்.

நிதித்துறை துணை அமைச்சரான மால்பாஸ், ஜி-7 மற்றும் ஜி - 20, துணை நிதி அமைச்சர்கள் மாநாடு, உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) போன்றவற்றின் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது கவனிக்க தக்க விஷயமாகும்.

இதுமட்டுமல்லாது நிதித்துறை துணை அமைச்சராக உள்ள இவர் உலக வங்கி குழும செயல்பாடுகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சி மேற்கொண்டவர். அதேபோல உலக வங்கி மற்றும் ஐஎம்எப் உள்ளிட்டவற்றில் கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை உருவாக்கக் காரணமாக இருந்தவர் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

David Malpass is a next president in world bank

david malpass a senior us treasury official in president donalt trump’s administration, was chosan last week, as the next president of the world bank.
Story first published: Sunday, April 7, 2019, 17:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X