'கல்வி கடன்' தள்ளுபடி.. பைடனுக்கு வந்த புதிய நெருக்கடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பலரும் பல முறை மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டதை யாராலும் மறக்க முடியாது

இதேவேளையில் அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு அமெரிக்க மாணவர்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இலக்குடனும் ஒரு முக்கியமான திட்டம் குறித்துத் தீவிரமாக ஆலோனைச் செய்யப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் மட்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்தால் சுமார் 4.5 கோடி மாணவர்களின் கல்விக் கடன் சுமை மிகப்பெரிய அளவில் குறையும்.

இதுமட்டும் அல்லாமல் இத்திட்டம் வெற்றிப்பெறும் பட்சத்தில் அமெரிக்கா போலவே பிற நாடுகளிலும் கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கல்வி கடன் தள்ளுபடி
 

கல்வி கடன் தள்ளுபடி

அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் தேர்தல் வாக்குறுதியிலும் சரி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருளாதார ஊக்கத் திட்டத்திலும் சரி கல்வி கடன் தள்ளுபடி என்பது இல்லை. ஆனால் பைடன் அரசு மற்றும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

ஜோ பைடன் அரசு

ஜோ பைடன் அரசு

அமெரிக்க அதிபராகப் பதிவியேற்றிய பைடன் முதல் நாள் கூட்டத்தில் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி குறித்து எவ்விதமான அறிவிப்பையும் அளிக்கவில்லை, இதுமட்டும் அல்லாமல் கல்வி கடன் தள்ளுபடி செய்யத் தனக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.

50,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி

50,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி

இதேபோல் தற்போது கோரிக்கை வைக்கப்பட்டு உள்ள படி தலா ஒரு மாணவருக்கு 50,000 டாலர் கல்வி கடன் தள்ளுபடி என்பது தன்னால் முடியாது, முடிந்தால் 10,000 டாலர் அளவிற்குச் செய்ய முடியும் என்று தெரிவித்திருந்தார்.

மாசசூசெட்ஸ் செனேட்டர் எலிசபெத் வாரன்
 

மாசசூசெட்ஸ் செனேட்டர் எலிசபெத் வாரன்

இந்த நிலையில் அல்ட்ரா மில்லியன் டாக்ஸ் முறையை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்த மாசசூசெட்ஸ் மாகாணத்தில் செனேட்டரான எலிசபெத் வாரன், கல்வி கடன் தள்ளுபடி கோரிக்கை விரைவில் நிறைவேற்ற வேண்டுமெனப் பல அமைச்சர்கள் உடன் இணைந்து எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் அவர் கல்வி கடன் வைத்துள்ள மாணவர்களின் வருமானத்திற்கு Public Service Loan Forgiveness திட்டத்தைப் போல் வரி விலக்கு அளிக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

2025 வரை வருமான வரிச் சலுகை

2025 வரை வருமான வரிச் சலுகை

எலிசபெத் வாரன் திட்டத்திற்கு ஆதரவாக நியூஜெர்சி மாகாணத்தில் செனேட்டரான பாப் மெனின்டெஸ் 2025 வரையில் கல்வி கடன் வைத்துள்ளவர்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் முழுமையான வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

4.5 கோடி மாணவர்கள்

4.5 கோடி மாணவர்கள்

அமெரிக்காவில் தற்போது 4.5 கோடி மாணவர்கள் கல்வி கடன் உடன் இருக்கிறார்கள், இவர்கள் அனைவருக்கும் வருமான வரிச் சலுகை அளித்தால் அரசுக்குப் பெருமளவிலான வருமானம் நஷ்டம் ஏற்படும், அதை ஒருபோதும் அமெரிக்க அரசால் சமாளிக்க முடியாது. இதனால் பைடன் அரசு கல்வி கடன் தள்ளுபடி அறிவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதிபர் பைடன் ஒப்புதல் அளிப்பார்

அதிபர் பைடன் ஒப்புதல் அளிப்பார்

அதிபர் பைடன் கண்டிப்பாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு மாணவருக்குத் தலா 50,000 டாலர் அளவிலான கடனை தள்ளுபடி செய்வார்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவது மட்டும் அல்லாமல் சொத்து மதிப்பில் இருக்கும் வித்தியாசம் பெரிய அளவில் குறையும். மேலும் பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமை இதன் மூலம் குறையும் என்றும் எலிசபெத் வாரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Democrats want to cancel $50,000 of student debt per person: Biden under pressure

Democrats want to cancel $50,000 of students debt per person: Biden under pressure
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X