Deutsche Bank lay off: 20,000 பேரை வீட்டுக்கு அனுப்பப் போகும் டாயிஷ் வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெர்மனி: ஃப்ராங்க்ஃபர்ட்டை (Frankfurt) தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச வங்கி Deutsche Bank. இந்த சர்வதேச வங்கி அடுத்த ஒரு வருடத்துக்குள் 15,000 முதல் 20,000 பேரை வேலையில் இருந்து லே ஆஃப் (Lay off) செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அப்படி 15,000 முதல் 20,000 பேரை வேலையில் இருந்து நீக்கவில்லை என்றால் கூட குறைந்த பட்சம், Deutsche Bank-க்கு முழு நேரமாக வேலை பார்ப்பவர்களில் 6-ல் ஒருவரை வேலையை விட்டு அனுப்பப் போவதாகச் சொல்கிறார்கள்.

அதாவது உலகம் முழுக்க வேலை பார்க்கும் Deutsche Bank ஊழியர்களில் சுமார் 16 சதவிகிதம் பேரையாவது வேலையில் இருந்து நீக்கப் போவதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அனைத்து பிராந்தியம்

அனைத்து பிராந்தியம்

இந்த லே ஆஃப் பூதம் Deutsche Bank-ன் அனைத்து வியாபாரம் சார்ந்த துறைகளிலும், அனைத்து பிராந்தியங்களிலும் இருக்கும் என்கிறார்கள். Deutsche Bank-யின் மேல் மட்டத்திலேயே பல்வேறு மறு சீரமைப்புகள் கடந்த சில நாட்களில் நடந்திருக்கிறதாம். ஆனால் இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப் படவில்லையாம்.

ஈக்விட்டி

ஈக்விட்டி

நிர்வாக மறு சீரமைப்பின் பெயரில், Deutsche Bank-ன் ஈக்விட்டி டிரேடிங், டெரிவேட்டிவ்ஸ் டிரேடிங் மற்றும் ஈக்விட்டி ஆராய்ச்சிப் பிரிவில் இருந்து பல நூறு பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதை ப்ளூம்பெர்க்கும் கடந்த சில நாட்களில் செய்தியாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

மிக முக்கியமாக அமெரிக்காவில் ஈக்விட்டீஸ் வியாபாரப் பிரிவில் வேலை பார்ப்பவர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பப் போவதாக மற்றொரு சர்வதேச செய்தி நிறுவனமும் சொல்லி இருந்தது. கார்ப்பரெட் கம்பெனிகளுக்கும், அதிகம் பணம் போட்டு ஈக்விட்டீஸில் வர்த்தகம் செய்யும் தனி நபர்களுக்கு (High Net Worth Individuals) மட்டும் சேவை செய்ய போதுமான ஊழியர்களை மட்டுமே அமெரிக்காவில் பணியில் வைத்துக் கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சி இ ஓ பேச்சு

சி இ ஓ பேச்சு

செய்திகள் எல்லாம் ஒரு பக்கம் போகட்டும் விடுங்கள். Deutsche Bank-ன் முதன்மைச் செயல் அதிகாரி க்ரிஸ்டியன் செவிங் (Christian Sewing) முதலீட்டாளர்களுக்கு மத்தியில் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசும் போது "மீண்டும் இந்த வங்கியை சிறப்பாக கொண்டு வருவோம். நாங்கள் பெரிய அளவில், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கில் ஆட்களை லே ஆஃப் செய்யப் போகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார். ஆக, அடுத்த வருடத்தில், Deutsche Bank-ல் ஏகப்பட்ட பேரின் வேலை ஈவு இறக்கம் இல்லாமல் பறிக்கப்படப் போகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Deutsche Bank is planning to lay off 20000 staff

Deutsche Bank is planning to lay off 20000 staff
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X