குழாய் அடிச் சண்டைக்குத் தயாராகும் டிஸ்னி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"ஏன்யா உன் ரேஞ்ச் என்ன, நீயெல்லாம் இதுக்கு வர்லாமா" என்று சில நெட்டிசன்கள் கோவப்பட்டாலும், வா ராசா வா ராசா உன்னையத் தான் எதிர் பாத்துக் காட்த்துக் கெடந்தேன்னு உருகிற டிஸ்னி ரசிகர்கள் ஏராளம்.

 

 வெறித்தனமான திட்டம்

வெறித்தனமான திட்டம்

வெகு சில மார்வெல் கதாபாத்திரங்களான லோகி, பிளாக் விடோ போன்றவர்களை மட்டுமே முதலில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங்குக்கு கூட்டி வர இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் பெரியத் திரைக்கு மட்டுமே என்று இப்போதைக்கு கட் அண்ட் ரைட்டாகச் சொல்லி இருக்கிறது.

அவரே வருவார்

அவரே வருவார்

பெரியத் திரையில் எந்த கதாபாத்திரத்தில், யார் நடிக்கிறார்களோ, அவர்களே இந்த ஐந்து இன்ச் சின்னத் திரைக்கும் வர இருக்கிறார்கள். இதனால் பட்ஜெட் கொடூரமாக இடிக்கும் என்றும் புரொடெக்‌ஷன் தரப்பு தெரிவித்திருக்கிறது.

சீசனாகத் தொடங்கும்
 

சீசனாகத் தொடங்கும்

டிஸ்னி சின்னத் திரை தொடர்கள், சீசன் சீசனாக வெளியிடப் படும். ஒரு சீசனுக்கு ஆறு முதல் எட்டு எபிசோட்கள் வரை இருக்குமாம். இதையும் மார்வெல் ஸ்டூடியோஸ் தான் தயாரிக்க இருக்கிறதாம்.

பலப் பரிட்சை

பலப் பரிட்சை

இது டிஸ்னி நிறுவனத்துக்கு நேரடியாக் உள்ள ஒரு சவால். எங்களுக்கென்று எத்தனை ஆடியன்ஸ் அங்கே காத்திருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோக்கள் காட்டிவிடும். ஏற்கெனவே அமெஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் தடத்தை ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் அழுத்தமாக பதித்த பின் நாங்கள் தாமதமாகவே களம் இறங்குகிறோம். எனவே எங்களுக்கான இடத்தை நாங்கள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் எனப்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

விளம்பரம் பேசும் டிஸ்னி

விளம்பரம் பேசும் டிஸ்னி

ஏற்கெனவே டிஸ்னி தன் தளத்தில் எந்த அளவுக்கு ப்ரீமியம் ரக வீடியோக்களை கொடுக்க முடியும் என்று ஆலோசித்து அதற்கான செயல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பெத்த பட்ஜெட் படங்கள் பெண்டிங்:

பெத்த பட்ஜெட் படங்கள் பெண்டிங்:

டிஸ்னி தற்போது நல்ல லாபத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் என்றாலும், இன்னும் சில பெரிய பட்ஜெட் படங்கள் முடிவடையாமலேயே இருக்கின்றன. ஸ்ஆர் வார் சீரிஸ், ஹை ஸ்கூல் மியூசிக்கல், லேடி அண்ட் தெ டிராம்ப் போன்ற படங்கள் ஒவ்வொன்றும் 100 மில்லியன் டாலருக்கு மேல் செலவழித்து எடுக்க வேண்டிய படங்கள்.

 டெக்னாலஜிக்கு ஒரு பெரிய தொகை

டெக்னாலஜிக்கு ஒரு பெரிய தொகை

அதோடு தன் லாபத்தில் ஒரு கணிசமான தொகையை தொழில்நுட்ப ரீதியாக அதிகம் அப்டேட் செய்து வருவதால் அதிகம் கையில் லாபம் நிற்பதில்லை என்றும் கவலைப் பட்டிருக்கிறது.

இப்படி ஒரு டைட்டான சூழலில் தான் டிஸ்னி கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்துக்கு வந்திருக்கிறது. என்ன ஆனாலும் மோசமான பட்ஜெட்டில் எந்த சீரிஸையும் எடுக்க மாட்டோம் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: disney
English summary

Disney is going to make their imprint in online video streaming

Disney is going to make their imprint in online video streaming
Story first published: Wednesday, September 19, 2018, 18:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X