என்னய்யா இது, இவரோட ஒருவேளை உட்கார்ந்து சாப்பிட 32 கோடி செலவா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா: உலகின் நான்காவது பெரிய பணக்காரர் மற்றும் பங்குச் சந்தை ராவணண் வாரன் பஃபெட் (Warren Buffett)-க்கு அருகில் அமர்ந்து ஒருவேளை சாப்பிடத் தான் இவ்வளவு செலவு செய்திருக்கிறார் ஒரு பணக்காரர்.

 

ஒவ்வொரு வருடமும் வாரன் பஃபெட் உடன், ஒருவர் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம். அதற்காக ஒரு முரட்டு ஏலம் நடத்தப்படும்.

அந்த ஏலம் 25,000 டாலரில் தொடங்கி ஒவ்வொருவராக ஏலம் கேட்டு யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ, அவர்கள் ஒரு நாள், ஒரு வேளை வாரன் பஃபெட் (Warren Buffett) உடன் அமர்ந்து சாப்பிடலாம்.

30 நாளுக்குள்ள Kerala 32 லட்சம் தரணும்! இல்ல மாசம் வட்டி மட்டும் ரூ.21,333 தரணும் பாத்துக்குங்க..!

 அறிவுரை

அறிவுரை

அப்படி அருகில் உட்கார்ந்து சாப்பிடும் போது, அவர்களுக்கு தேவையான பிசினஸ் அட்வைஸ், பங்குச் சந்தை அட்வைஸ், ஃபோட்டோ, ஆட்டோகிராஃப் என பிசினஸ் நுணுக்கம் தொடங்கி ரசிகர்கள் அன்பு வரை அனைத்தையும் பரிமாறிக் கொள்ளலாம்.

 32 கோடி

32 கோடி

அப்படி இந்த 2019-ம் ஆண்டில் வாரன் பஃபெட் (Warren Buffett) உடன் அமர்ந்து சாப்பிட, ஒரு பணக்காரர் 4.57 மில்லியன் டாலர் (32.2 கோடி ரூபாய்) வரை ஏலம் கோரி வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்னும் சில தினங்களில் இந்த பணக்காரர் தனக்கு பிடித்தமான 7 பேர் உடன் வாரன் பஃபெட் (Warren Buffett) உடன் அமர்ந்து உணவருந்தப் போகிறார் அந்த 32 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்த பணக்காரர்.

 நியூ யார்க்கில் விருந்து
 

நியூ யார்க்கில் விருந்து

இப்படி 32 கோடி செலவழித்தவர் எங்கு உட்கார்ந்து விருந்து சாப்பிடப் போகிறார் தெரியுமா..? நியூ யார்க் நகரில் உள்ள Smith & Wollensky steakhouse-ல் தான் சாப்பிடப் போகிறார்களாம். யார் இந்த ஏலத்தில் வென்று இருக்கிறார், எப்போது விருந்து நடக்கப் போகிறது போன்ற விஷயங்களை மோடி அமைச்சரவை இலாக்காக்கள் போல ரகசியமாகவே வைத்திருக்கிறார்களாம்.

 தான தர்மம் தான்

தான தர்மம் தான்

இப்படி கடந்த 2003-ல் இருந்து ஏலம் விட்டு தன்னோடு விருந்து சாப்பிட அழைத்து தேவையான அறிவுரைகளையும், அனுபவப் பகிர்தலையும் செய்து வருகிறார் நம் வாரன் பஃபெட் (Warren Buffett). அப்படி திரட்டப் படும் நிதியில் ஒரு சென்டைக் கூட (அமெரிக்காவில் ஒரு செண்ட் என்பது நம்மூரில் ஒரு பைசா போல) தன் சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதை அப்படியே தன் நண்பர் ஒருவர், சான் பிரான்சிஸ்கோவில் நடத்தும் Glide என்கிற சமூக சேவை செய்யும் சேரிட்டி நிறுவனத்துக்கு கொடுத்துவிடுகிறார் வாரன் பஃபெட் (Warren Buffett).

 சமூக சேவை

சமூக சேவை

இந்த Glide charity அமைப்பு வீடுகளில் நடக்கும் வன் கொடுமைகள், வீடில்லாதவர்களுக்கு உணவு வழங்குவது, வீடு இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது என பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார்களாம். இந்த அமைப்பை வாரன் பஃபெட் (Warren Buffett)-ன் முதல் மனைவி சூசன் பஃபெட் இறக்கும் வரை பெரிய அளவில் ஆதரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம்

அதிகம்

இதுவரை 2003-ம் ஆண்டில் இருந்து நடந்த ஏலத்தில் திரட்டப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகையே இந்த 2019-ல் திரட்டிய 4.57 மில்லியன் டாலர் தானாம். இதற்கு முன் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் 3.46 மில்லியன் டாலர் வரை ஏலம் போனது தான் அதிகபட்ச தொகையாக இருந்தது எனவும் Glide Charity அமைப்பினர் சொல்லி இருக்கிறார்கள். இந்த மொய் விருந்தைக் குறித்து நம் வாரன் பஃபெட் (Warren Buffett)-யிடம் கேட்ட போது...

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

"இப்படி ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஒருவேளை விருந்தை பகிர்ந்து கொள்ள, உலகம் முழுவதில் இருந்தும் பல சுவாரஸ்யமான நபர்கள் வருகிறார்கள். அவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களின் வெற்றிக்கு பின்னால் இருந்து உதவுவது, அவர்கள் வெற்றி பெற வழி சொல்வது ஒரு சுகாணுபவமாக இருக்கிறது. என்னால் நடமாட முடிந்த வரை இந்த வேலையை நான் செய்வேன்" என பூரித்துப் போய் இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do we have to pay 32 crore rupees to have lunch with warren buffett

Do we have to pay 32 crore rupees to have lunch with warren buffett
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X