11 வருட உயர்வை எட்டியது அமெரிக்க டாலர்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: செவ்வாய்க்கிழமை நாணய சந்தையில் அமெரிக்காவின் கருவூல ஸ்திரத்தன்மை அதிகரித்ததால் உலகின் முன்னணி வர்த்தக நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு 11 வருட உயர்வை எட்டியது.

 

மேலும் நேற்று டாலர் வர்த்தக சந்தையில் டாலர் இன்டக்ஸ் குறியீடு 95.516 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜனவரி 23ஆம் தேதி டாலர் இன்டக்ஸ் 95.481 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டி இருந்தது. மேலும் இத்தகைய உயர்வை செப்டம்பர் 2003ஆம் ஆண்டுக்கு பின் தற்போது காணப்படுகிறது.

நாணயங்கள்

நாணயங்கள்

அமெரிக்க டால்ர் மதிப்பு அதிகரித்ததால் யூரோவின் மதிப்பு 1.12 டாலராக குறைந்தது, இதேநாளில் ஜப்பான் யென் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 120.19யென் வரை உயர்ந்து முன்று வார உயர்வை எட்டியது குறிப்பிடதக்கது. இந்நிலையிலும் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு சரிவு பாதையை நோக்கியே செல்கிறது.

அமெரிக்காவின் கருவூலம்

அமெரிக்காவின் கருவூலம்

அதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதால் நாட்டின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் கருவூலம் கடந்த 10 வருடத்தில் நேற்று 2.10 சதவீத உயர்ந்தது. கடந்த வாரம் 1.93 சதவீத அளவு சரிந்தது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

அமெரிக்காவின் கருவூலத்தின் சீரான வளர்ச்சி அமெரிக்க பங்குச்சந்தையில் அதிகளவிலான பங்குகளை வர்த்தகம் செய்ய தூண்டியது. இதனால் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியது குறிப்பிடதக்கது.

வட்டி விகிதம் உயர்வு
 

வட்டி விகிதம் உயர்வு

அமெரிக்காவின் நிலை சிறப்பாக இருப்பதால் அடுத்த சில வாரங்களில் வட்டி வகிதம் உயர்த்தப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

டாலர் மதிப்பு உயர்வால் தங்கம் விலை சரிவு!! கிராமிற்கு 54 ரூபாய் சரிந்தது..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dollar hits fresh 11-year peak on rising Treasury yields

The dollar hit a fresh 11-year peak against a basket of major currencies on Tuesday, as rising Treasury yields helped it prevail over its peers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X