அமெரிக்காவின் வயது 'முதிர்ந்த' அதிபராக 'டொனால்டு டிரம்ப்' இன்று பதவியேற்கிறார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் பில்லியனர்களின் முக்கியமான ஒருவர் டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தல் வெற்றிக்கு முன்னும் சரி, பின்னும் சரி இவர் மீதான சர்ச்சைக்குக் குறைவில்லை என்றே சொல்லலாம். ஏன் தேர்தல் வெற்றிக்குப் பின் அமெரிக்க மக்கள் பலர் இவருக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

எதெப்படி இருந்தாலும், அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் தான் என்பது உறுதியானது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் 45வது அதிபராக மட்டும் அல்லாமல் வயது முதிர்ந்த அதிபராகவும் இன்று பதவியேற்கிறார்.

வெள்ளை மாளிகை
 

வெள்ளை மாளிகை

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா வெள்ளிக்கிழமை மதியம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் நிலையில், நியூயார்க் நகரத்தில் இருந்து அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகைக்கு அதிபராக டொனால்டு டிரம்ப் குடிபெயர உள்ளார்.

துவக்கம்

துவக்கம்

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு டொனால்டு டிரம்ப் இரண்டு பைபிள் மீது கை வைத்து அமெரிக்காவின் 45வது அதிபராகப் பதவியேற்க உள்ளது.

இரண்டு பைபிள்-இல் ஒன்று ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்தியது, மற்றொன்று தலைமை நீதிபதியான ஜான் ராபர்ட்ஸ் பயன்படுத்தியது.

வெள்ளிக்கிழமை காலையில் வாஷிங்கடன் நகரத்தில் மழைபெய்யும் வாய்ப்புகள் உள்ளதால், பதவியேற்பு நிகழ்ச்சி மாலை 4மணிக்குத் துவங்க உள்ளது.

10 வாரங்கள்

10 வாரங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டி போட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் டொனால்டு டிரம்ப் வெள்ளிப்பெற்றார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 வாரங்களில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் டிரம்ப் தலைமையிலான குழு செய்து முடித்துள்ளது.

மாற்றம்
 

மாற்றம்

இனி வெள்ளை மாளிகையில் ஒபாமாவிற்குப் பிடித்தமான ஆப்பிள் மற்றும் பாதாம்/முந்திரி போன்ற உடல்நலத்திற்கு ஏற்றப் பொருட்களை நீக்கிவிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் டோடிட்டோஸ் போன்ற உணவு வகைகள் மாறப் போகிறது. அமெரிக்காவில் நடக்கப்போகும் மாற்றங்களின் முதல் எடுத்துக்காட்டு

டிரம்ப் வயதான அதிபர் மட்டும் அல்லாமல் நலமற்ற (மக்களின் உடலுக்கும் சரி நாட்டின் வளர்ச்சிக்கும் சரி) அதிபரும் கூட.

முக்கியத் தலைவர்கள்

முக்கியத் தலைவர்கள்

இன்று மாலை நடைபெறும் பதிவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, மிட்ஷல் ஒபாமா, பிற முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் மற்றும் ஜிம்மி கார்டர் மற்றும் டொனால்டு டிரம்ப் உடனான அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump to be sworn in as 45th and oldest US President today

Donald Trump to be sworn in as 45th and oldest US President today - Tamil Goodreturns
Story first published: Friday, January 20, 2017, 11:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?