என்ன சீனா ஒப்பந்தமா வேணும்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஜனாதிபதி தேர்தல் முடியட்டும்.. டிரம்ப்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறிக் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது மிக அமைதியாக இரு நாடுகளூம் இருந்துக் கொண்டிருக்கின்றன. எனினும் இந்த பிரச்சனைக்கு சரியான முடிவு தான் இன்று வரை எட்டப்படவில்லை.

அதிலும் ஜப்பானில் ஒஷாகா மாநகரில் நடந்த ஜி20 மாநாட்டில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், விரைவில் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரு தரப்பிலும் இது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் மவுனமே பதிலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது, கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு முன்பு வர்த்தக பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த பின்னர், தற்போது தான் ஷாங்காயில், இந்த வாரத்தில் அமெரிக்கா அதிகாரிகளும் சீனா அதிகாரிகளும் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முடிவுகள் எட்டப்படுமா?

முடிவுகள் எட்டப்படுமா?

நீண்ட கால வர்த்தக போருக்கு பின்னர், பல பிரச்சனைகளையும் சந்தித்த பின்னர், தற்போது நடக்கவிருக்கும் இந்த பேச்சு வார்த்தையில் நல்ல முடிவுகள் எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ஒஷாகவில் நடந்த பேச்சு வார்த்தையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பும், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசியதில், சில முடிவுகள் எட்டப்பட்டதாகவும், இதன் மூலம் வருங்கால பேச்சு வார்த்தை மூலம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சுமூக பேச்சு வார்த்தை எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை இது குறித்து எந்த வித ஈடுபாடும் அமெரிக்காவிடம் இருப்பதாக தெரியவில்லை.

சீனா அமெரிக்காவிடன் இருந்து இறக்குமதி?

சீனா அமெரிக்காவிடன் இருந்து இறக்குமதி?

ஆமாங்க.. சமீபத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே, சமாதானத்திற்காக எந்தவித சமிக்கையும் இருந்ததாக தெரியவில்லை. அதோடு சமரசத்திற்குண்டான எந்தவொரு அறிகுறியும் தென்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த நிலையில் சீனா அமெரிக்காவிடம் இருந்து மில்லியன் கணக்கான டன்கள் சோயாபீன்ஸை வாங்கியிருப்பதாகவும், அதோடு பருத்தி, பன்றி இறைச்சி, சோளம்,கோதுமை மற்றும் டெய்ரி பொருட்களை தொடர்ந்து அமெரிக்காவிடம் இருந்து வாங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா ஒரு “black hand

அமெரிக்கா ஒரு “black hand"

இந்த நிலையிலும் கூட சீனா அமெரிக்காவை கருப்பு கை "black hand" என்றும் கூறியுள்ளாதாம். இந்த நிலையில் ஃபெடெக்ஸ் கார்ப் நிறுவனத்தின் விசாரணையில், ஹூவாய் டெக்னாலஜி தொகுப்புகளை அமெரிக்காவிற்கு தவறாக மாற்றியமைத்தது கொடுத்துள்ளதாகவும், மேலும் சட்ட மீறல்களையும் கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹூவாய் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதற்காக தடை மற்றும் அந்த தடையை தளர்த்துவது குறித்து தொழில் நுட்ப நிர்வாகிகளுடன் டிரம்ப் பேசியுள்ளாராம். அமெரிக்கா அதிகாரிகள் விரைவான வர்த்தக ஒப்பந்தத்தின் சாத்தியத்தையும் குறைத்துக் கொண்டனராம்.

உலக பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது?

உலக பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது?

இந்த நிலையில் இந்த இரு நாடுகளையுடைய தொடர் பிரச்சனையால், சந்தைகள் மற்றும் நிறுவனங்களின் நிச்சயமற்ற தன்மையால், எடைப்போடப்படும் உலகப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் ஆபத்தில் உள்ளது என்றும், சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் கூறியுள்ளது. இதோடு உலகளாவிய வளர்ச்சிக்கான அதன் மதிப்பீடுகளை மேலும் குறைத்ததுடன், வர்த்தகப் போரினால் ஏற்பட்ட நீண்டகால நிச்சயமற்ற தன்மை, தொழில்நுட்பத்தின் மீதான பதட்டங்கள் அதிகரித்தல் மற்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஆகியவற்றால் பாதிப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா – சீனாவுக்கு இடையே பெரிய இடைவெளி

அமெரிக்கா – சீனாவுக்கு இடையே பெரிய இடைவெளி

ஆராய்ச்சி நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் சீனாவின் தலைமை பொரூளாதார நிபுணரான ராபின் ஜிங், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிவான ஒப்பந்தத்தை நோக்கி தெளிவான எந்த பாதையும் இல்லை. இன்னும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பெரிய இடைவெளி உள்ளதாம்.

சீனாவின் மூன்று கோரிக்கைகள்!

சீனாவின் மூன்று கோரிக்கைகள்!

இந்த நிலையில் சீனா முக்கிய மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளதாம். ஒன்று தற்போதுள்ள அனைத்து கட்டணங்களையும் முழுமையாக நீக்க வேண்டும் என்றும், ஒரு சீரான ஒப்பந்தம் மற்றும் யதார்த்தாமான ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கா பொருட்களை சீனா வாங்குவதற்கு சீரான யதார்த்தமான இலக்குகள் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதோடு அமெரிக்கா தற்போதுள்ள இதே நிலைப்பாட்டை கடைபிடித்தால் எந்தவொரு சாதனையும் செய்யப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது சீனா.

அமெரிக்கா கட்டணங்களை அகற்ற வேண்டும்?

அமெரிக்கா கட்டணங்களை அகற்ற வேண்டும்?

மேலும் அமெரிக்கா சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்பினால்,அமெரிக்கா முதலில் அனைத்து கூடுதல் கட்டணங்களையும் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளது சீனா. மேலும் ஒரு தரப்பினருக்கும் இடையிலான சமத்துவமும், மரியாதையும் மட்டுமே உடன்பாட்டை எட்டுவதற்கான வழி என்றும், அமெரிக்காவின் 300 பில்லியன் டாலர்கள் கூடுதல் சீனப் பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கும் செயலுக்கு சீனா பயப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

அமெரிக்காவின் நோக்கம் என்ன?

அமெரிக்காவின் நோக்கம் என்ன?

அமெரிக்காவின் கோரிக்கைகளில் சீனாவின் பொருளாதாரத்திற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள், அறிவுசார் சொத்துரிமைகளின் அதிக பாதுகாப்பு மற்றும் மிகவும் சீரான வர்த்தக உறவு ஆகியவை அடங்கும். இந்த நிலையில் அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ், டிரம்பின் நோக்கம் சரியானது தான் என்றும் கூறியுள்ளாரார்.

சீனா காத்திருக்கலாம்?

சீனா காத்திருக்கலாம்?

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட 2020 அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு சீனா காத்திருக்கலாம் என்று டிரம்ப் கூறியுள்ளாராம். ஏனெனில் பெய்ஜிங் ஒரு ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புவர், ஆக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் சீனா சொல்லும் என்றும் நான் நினைக்கிறேன். எனினும் நான் வெற்றி பெறும் போது உடனடியாக அவர்கள் அனைவரும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போகிறார்கள் என்றும் கூறியுள்ளாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald trump says China may wait till 2020 US presidential election to sign trade deal

Donald trump says China may wait till 2020 US presidential election to sign trade deal
Story first published: Monday, July 29, 2019, 13:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X