சீனாவை வெறுப்பேற்றும் டிரம்ப்.. டிக் டாக்கினை சிறப்பாக ஆரக்கிள் கையாளலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனி என்னாவாகுமோ? என்ற கவலை ஒரு புறம் இருந்து வருகிறது.

 

அதே சமயம் அமெரிக்கா சீனாவுக்கு இடையேயான பிரச்சனையும் அதிகரித்து வருகிறது. முதலில் சிறிய வர்த்தக போரில் தொடங்கி இன்று எது எடுத்தாலும் பிரச்சனையாகவே உருவெடுத்து வருகிறது.

அதனை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அடுத்தடுத்த பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். குறிப்பாக டிக் டாக் சம்பந்தமான பிரச்சனை மேலும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது எனலாம்.

தடை செய்யலாம்

தடை செய்யலாம்

முன்னதாக செப்டம்பர் 15-க்குள் சரியான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், டிக் டாக்கிற்கு தடை செய்யப் போவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேசினார்.

டிக் டாக் – மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை

டிக் டாக் – மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தை

அந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் கூறியது. ஆனால் இந்த நிறுவனங்களும் இன்று வரையில் பேச்சு வார்த்தையில் உள்ள நிலையில், இது சம்பந்தமான எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

அமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை
 

அமெரிக்க நிறுவனம் வாங்கினால் பிரச்சனை இல்லை

டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை டிக் டாக் ஆப்பினை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

அனுமதிக்கப்பட்ட திருட்டு

அனுமதிக்கப்பட்ட திருட்டு

இதுகுறித்து சீனாவின் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செயல் முறையானது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட திருட்டுக்கு ஒப்பாகும் என்றும் கூறியுள்ளது. ஒரு சீன நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் திருட்டை சீனா எந்த வகையிலும் ஏற்றும் கொள்ளாது. அமெரிக்கா திட்டமிட்டு இந்த செயலை மேற்கொண்டால், அதற்கு பதிலளிக்க சீனாவிற்கு ஏராளமான வழிகள் உள்ளன.

 அரசுக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும்

அரசுக்கு கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டும்

அமெரிக்கா நிறுவன பட்டியலில் டிக் டாக்கினை சேர்ப்பதன் மூலம், பை டான்ஸின் மதிப்பு மிக்க சொத்தினை, முடக்குவதற்காக அமெரிக்கா முயன்று வருகிறது. அமெரிக்காவின் இந்த ஒடுக்கு முறையானது தொழில் துறையில் பலரை பிளவுபடுத்தியுள்ளது. மைக்ரோசாப்டின் போட்டி நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள நிலையில், டிக் டாக்கை வாங்குவதன் மூலம் சமூக வலைத்தளத்தில் தனது தடத்தைப் பதிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முயன்று வருவதாகவும் கூறப்பட்டது.

அமெரிக்காவின் தந்திரம்

அமெரிக்காவின் தந்திரம்

இது இப்படி எனில் அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் டிக் டாக்கை வாங்குவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம் என பைட்டான்ஸ் இயக்குநர்கள் நினைப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டிவிட்டர் நிறுவனமும் டிக்டாக்கினை வாங்க ஆய்வு செய்வதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆரக்கிள் வாங்கலாம்

ஆரக்கிள் வாங்கலாம்

இப்படி பல அதிரடியான பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது டிக் டாக்கினை, அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் கையாள முடியும் என்று அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் டிக் டாக்கினை கையாள ஆரக்கிள் ஒரு சிறந்த காரணம் என்று நான் நினைக்கிறேன். அதன் உரிமையாளர் மிகப்பெரிய நபர் என்று நான் நினைக்கிறேன்.

சிறந்த நிறுவனம்

சிறந்த நிறுவனம்

ஆக ஆரக்கிள் நிச்சயமாக அதனை கையாளக்கூடிய சிறந்த ஒரு நிறுவனமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். ஆரக்கிள் மற்றும் மைக்ரோசாப்ட்டினைத் தொடர்ந்து, டிக்டாக்கினை வாங்குவதில் இன்னும் பல நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன என்றும் டிரம்ப் சுட்டிக் காட்டியுள்ளார். மைக்ரோசாப்டினை கையகப்படுத்த டிக் டாக் முக்கிய ஏலதாரராக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald trump says oracle would be handle the acquisition of the tik tok

US President Donald Trump said reporters that he thinks the US software company oracle can handle the acquisition of TikTok.
Story first published: Wednesday, August 19, 2020, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X