சீனாவினை விடாமல் துரத்தும் அமெரிக்கா.. கொரோனாவில் சீனாவின் பங்கு என்ன? செவிசாய்க்காத பங்கு சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று உலகமே ஸ்தம்பித்து போயுள்ளது எனில் அதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் தான். இதனை சீனா நினைத்திருந்தால் சீனாவுடனேயே தடுத்திருக்கலாம். ஆனால் சீனா அதனை செய்யவில்லை. மேலும் கொரோனா பற்றிய உண்மைகளையும் வெளிப்படையாக சீனா கூறவில்லை என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இன்று உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடம். இப்படி இருக்கையில் இதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று அமெரிக்க தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கிடையில் திங்கட்கிழமையன்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சீனா நினைத்திருந்தால் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் முன்னரே தடுத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை.

சீனாவினால் நாங்கள் மகிழ்ச்சியில் இல்லை

சீனாவினால் நாங்கள் மகிழ்ச்சியில் இல்லை

ஆக உண்மையில் கொரோனா வைரஸின் சீனாவின் பங்கு தான் என கண்டறிய தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அங்கு என்ன தான் நடந்தது என அறிந்து கொள்ள நாங்கள் தீவிரமான விசாரணைகளை நடத்தி வருகிறோம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். சீனாவினால் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்று வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் தொடர்ந்து விமர்சனம்

ட்ரம்ப் தொடர்ந்து விமர்சனம்

மேலும் சீனா பார்த்து நினைத்து இருந்தால், அது இன்று உலகம் முழுக்க பரவி இருக்காது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கிய இந்த வைரஸ், இன்று உலகம் முழுக்க பரவிய ஒரு வைரஸ் ஆக உள்ளது. இது குறித்து ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உண்மையை மறைந்து விட்டது சீனா

உண்மையை மறைந்து விட்டது சீனா

இதே அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ, பெய்ஜிங் வைரஸ் பரவலை சரியான நேரத்தில் தெரிவிக்க தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் ஆபத்தினை சீனா மூடி மறைத்து விட்டதாகவும் அமெரிக்கா உறுதியாக நம்புகிறது என்றும் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துங்கள்

மக்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துங்கள்

இதே வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங், தனது ட்விட்டர் பக்கத்தில், பாம்பியோ அரசியல் விளையாட்டினை நிறுத்த வேண்டும். உயிர்களைக் காப்பாற்றுவதில் ஆற்றலை சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உலகெங்கிலும் 2 லட்சத்தும் அதிகாமானோர் பலியாகியுள்ள நிலையில், 55,000 அதிமானோர் அமெரிக்காவில் மட்டும் பலியாகியுள்ளனர்.

தரம் குறைந்த கருவிகள்

தரம் குறைந்த கருவிகள்

அது மட்டும் அல்ல வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ சீனா குறைந்த தரம் வாய்ந்த கொரோனா மருந்து கருவிகளை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த தொற்று நோயிலிருந்து கூட சீனா லாபம் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் இவற்றினை எதையும் செவிசாய்க்காத வகையில் சீனா சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump says US conducting investigations into China's role in coronavirus

Us President Donald trump said we are doing very serious investigations. We are not happy with China.
Story first published: Tuesday, April 28, 2020, 11:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X