எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற நினைக்கும் டிரம்ப்.. மீண்டும் வரி உயர்வு.. சீனாவுக்கு எச்சரிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன் : எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமெரிக்கா அதிபர், தொடர்ந்து சீனாவுக்கு வரியை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி குறைவாக இருப்பதாக கூறியுள்ளாராம். ஆக மீண்டும் சீனாவுக்கு வரி உயர்த்தப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

அதோடு சீனாவும் மெக்ஸிகோவும் வர்த்தக உடன் படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள நினைக்கின்றன என்றும் கூறியுள்ளாராம் டிரம்ப். ஆனால் வர்த்தக ஒப்பந்த்தால் அது முடிவுக்கு வந்த பாடாக இல்லை என்றும் கூறியுள்ளராம்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்ற நினைக்கும் டிரம்ப்.. மீண்டும் வரி உயர்வு.. சீனாவுக்கு எச்சரிக்கை

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையால், உலக பொருளாதாரம் பாதிப்படையும் என்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த பிரச்சனையில் எண்ணெயை ஊற்றியுள்ளார் டிரம்ப்.

கடந்த மே மாதத்திலேயே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இதில் இழுபறி நிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த செயல் மீண்டும் பிரச்சனையை வலுவடைய செய்வதாகவே உள்ளது.

ஏற்கனவே 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி 10 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் டிரம்ப், சீனாவுடன் நடந்து வரும் பேச்சு வார்த்தை மிக சுவாரசியாமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று கூலாக சொல்லி இருக்கிறாராம்.

எனினும் வர்த்தக ஒப்பந்தமோ பேச்சு வார்த்தையோ சரியான முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, இந்த வரி உயர்வு சரியான நேரத்தில், 300 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும் டிவிஸ்ட் வைத்துள்ளாராம் டிரம்ப்.

அதோடு சீனாவும் மெக்ஸிகோவும் வர்த்தக உடன் படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள நினைக்கின்றன என்றும் கூறியுள்ளாராம் டிரம்ப். ஆனால் வர்த்தக ஒப்பந்தத்தால் அது முடிவுக்கு வந்த பாடாக இல்லை என்றும் கூறியுள்ளராம். இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா பிரச்சனையை தொடரும் பட்சத்தில், அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஏனெனில் சீனா மக்களுடைய நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாம்.

 

மேலும் மெக்ஸிகோ ஏற்றுமதி பொருட்களுக்கு தற்போது 5% வரி வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் முன்னேற்றம் காணவிட்டால் இந்த வருட முடிவுக்குள் இது 25%வரை அதிகரிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளாராம் டிரம்ப்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump threatens china with tariffs on further $300 billion goods

America President Donald Trump threatened to hit China with tariffs on at least another $300 billion worth of Chinese goods.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X