இனி தேவையில்லை.. இளவரசர் சார்லஸ்-க்கு சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனான 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராகியுள்ளார்.

 

இதற்கிடையில் இளவரசர் சார்லஸுக்கு காலம் காலமாக சேவை செய்து வந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தி கார்டியன் அறிக்கையின் படி, செப்டம்பர் 8 அன்று ராணி எலிசபெத் மறைந்த பிறகு, டஜன் கணக்கான கிளாரன்ஸ் ஹவுஸ் ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக ஏற்றம்.. எப்படி தெரியுமா? முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக ஏற்றம்.. எப்படி தெரியுமா?

ஏன் பணி நீக்கம்

ஏன் பணி நீக்கம்

புதிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ள சார்லஸ் மற்றும் சார்லஸின் மனைவியின் அலுவலகங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த முக்கிய நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் அரச குடும்பத்திற்கு பல ஆண்டுகளாக சேவை செய்து வந்தவர்கள் என கூறப்படுகிறது.

பணியமர்த்தலும் உண்டு

பணியமர்த்தலும் உண்டு

சார்லஸ் இளவரசராக இருந்தபோது அவருக்கு சேவை செய்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிட்டத்தட்ட 100 தனியார் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊழியர்கள் அதிர்ச்சி

ஊழியர்கள் அதிர்ச்சி

பணி நீக்க அறிவிப்பினை பெற்றவர்களில் தனியார் செயலாளர்கள், நிதி அலுவலகம், தகவல் தொடர்பு குழு, வீட்டு ஊழியர்கள் என பலரும் அடங்குவர். இதனால் பல ஊழியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயர்மட்ட குழுவில் மாற்றமில்லை
 

உயர்மட்ட குழுவில் மாற்றமில்லை

எனினும் வளர்ச்சியுடன் தொடர்புடையவர்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள் அல்லது இணைக்கப்படுவார்கள். வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். தற்போது இருக்கும் சூழ்நிலையில் அரசு எதையும் விவரிக்கும் சூழ்நிலையில் அரசும் இல்லை. மேலும் அரசரின் உயர்மட்ட குழுவில் சிலருக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆக அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்விக் குறி

கேள்விக் குறி

அவர்கள் தொடர்ந்து புதிய மன்னருக்கு சேவை செய்வார்கள். மொத்தத்தில் 70 ஆண்டுகளாக அரியனையை அலங்கரித்து வந்த ராணியின் மறைவு என்பது, பலருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், பலரின் வாழ்வாதாரமும் இதனால் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. எனினும் இது குறித்தான முழு தகவல்கள் இங்கிலாந்தில் இயல்பு நிலை திரும்பிய பின்னரே தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

dozens of private employees who served prince Charles receive lay off notice

Dozens of Clarence House staff have also reportedly been sacked since Queen Elizabeth's death.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X