இந்தியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. துபாய் சென்ற பிறகு விசா பெற்றுக்கொள்ளலாம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

அமெர்க்க விசா அல்லது கிரீன் கார்டு வைத்துள்ள இந்தியர்கள் துபாய் என்று விசா பெற்றுக்கொள்ளலாம் என்று புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

அதன் படி முதல் இந்தியர் துபாய் சென்று உடனடி விசா வாங்கியதை அடுத்து அவருக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாகப் பயணியின் புகைப்படத்தைத் துபாயின் வெளிநாட்டினர் விவகாரம் பொது இயக்குநர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சுற்றறிக்கை

மார்ச் மாதம், யூஏஈ அமைச்சரவை இந்திய பாஸ்போர்ட்டினை அமெரிக்கா விசா அல்லது கிரீன் கார்டுடன் வைத்திருப்பவர்களுக்குத் துபாய் வந்த பிறகு மே1-ம் தேதி முதல் விசா பெற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியது.

இதற்கான சுற்றறிக்கை யூஏஈ-ன் அனைத்து எல்லைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு வழங்கப்பட்டது.

 

இருநாடுகள் இடையிலான நலன் ஊக்குவிப்பு

இந்தியா துபாய் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் அரசியல், பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை ஊக்குவிப்பதற்காக இந்த நீண்ட கால முடிவை யூஏஈ எடுத்துள்ளது.

இந்த முடிவு ஒரு சுற்றுலா மற்றும் பொருளாதார மையமாக யூஏஈ உலகளாவிய நிலையை உறுதிப்படுத்த விசா வழங்கல் செயல்முறை எளிதாக்கம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

யாருக்கெல்லாம் இந்தப் புதிய விதியினால் பயன்?

இந்தப் புதிய முடிவின் மூலமாக ஆறு மாதம் செல்லுபடியாகும் அமெரிக்க விசா அல்லது கிரீன் கார்டு வைத்துள்ள இந்தியர்கள் துபாய் சென்ற உடன் உடனடி விசாவை 14 நாட்களுக்குப் பெற்றுக்கொள்ளலாம். தேவைப்பட்டால் கூடுதலாக 14 நாட்களும் நீட்டிப்புச் செய்துகொள்ளலாம்.

வர்த்தகம்

யூஏஈ உடன் வர்த்தகத் தொடர்பில் இரண்டாம் மிகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது, இரண்டு நாடுகள் இடையிலும் ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெறுகின்றது, அதில் யூஏஈ இந்தியாவிற்கு 27 பில்லியப்ன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது. அதே நேரம் இந்தியா யூஏஈ-க்கு 33 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.

போக்குவரத்து

யூஏஈ-இந்தியா இடையில் தினமும் 143 விமானங்கள் சென்று வருகின்றது, ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு விமானம் அல்லது வாரத்திற்கு 1000 விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா

2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து யூஏஈ-க்கு 16 லட்சம் நபர்கள் சுற்றுலா சென்றுள்ளதாகவும் அதே நேரம் யூஏஈ-ல் இருந்து இந்தியாவிற்கு 50,000 நபர்கள் சுற்றுலா வந்துள்ளதாகவும் கூரப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Dubai Activates Visa On Arrival Facility For Indians

Dubai Activates Visa On Arrival Facility For Indians
Story first published: Thursday, May 4, 2017, 12:14 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns