துபாயில் 32 பில்லியன் டாலர் செலவில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: பிரம்மாண்ட கட்டிடம் மற்றும் வியப்பூட்டும் கட்டிட கலைக்கு பெயர்போன துபாய் நகரம் தற்போது உலகநாடுகள் மிரளும் வண்ணம் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

 

உலகிலேயே துபாய் விமான நிலையம் தான் பரப்பரமான விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இதை மிஞ்சும் வண்ணம் துபாய் வோல்டு சென்டரல் கட்டிடத்திற்கு 30 கிலோமீட்டர் அருகில் இப்புதிய விமான நிலைய அமைய உள்ளது.

கீரின்பீல்டு ஏர்போர்ட்

கீரின்பீல்டு ஏர்போர்ட்

A380 ரக விமானங்கள் தாங்கும் வண்ணம், 5 ஒடுதளங்களை கொண்ட உலகிலேயே மிகப்பெரிய கீரின்பீல்டு விமான நிலையத்தை 32 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படுகிறது. இத்திட்டம் முடிவடையும் போது உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக இது இருக்கும்.

பயணிகள்

பயணிகள்

இப்புதிய விமான நிலையம் துபாயில் அல் மக்தூம் என்ற பகுதியில் அமைய உள்ளது. முதற்கட்டமாக இவ்விமான நிலையத்தில் 120 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. விமான நிலையத்தின் முழுமையான வேலைகள் 2020ஆம் ஆண்டு முடியும்போது சுமார் 200 மில்லியன் விமான பயணிகள் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என துபாய் ஏர்போர்ட் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் ஜூலியஸ் பவுமான் தெரிவித்தார்.

200 விமானங்கள்
 

200 விமானங்கள்

இந்த புதிய விமான நிலையம் 7 புட்பால் மைதானம் அளவிற்கு பெரிதாக இருக்கும், 5 ஒடுதளங்கள், 200 விமானங்களை நிறுத்தும் அளவிற்கு இடம் மற்றும் 4 முனைகளை இணைக்கும் 6 விமான நிலைய ரயில்கள் அவை நகரத்தின் மெட்ரோ முனையத்துடன் இணைக்கப்படும்.

போக்குவரத்து

போக்குவரத்து

இப்புதிய விமான நிலையத்தின் மூலம் வருடத்திற்கு 200 மில்லியன் பயணிகள் மற்றும் 12 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து செய்யப்படும்.

லண்டன்- துபாய்

லண்டன்- துபாய்

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பின் துபாய் விமான நிலையம் தான் மிகவும் பரப்பரப்பான விமான நிலையமாக உள்ளது. இங்கு விமான எரிபொருள் மலிவாக இருப்பதால் உலகில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் துபாய் நகரத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dubai to invest $32-billion to build world's largest airport

To further secure its position as the world’s aviation hub, Dubai Airports is building a whopping USD 32—billion greenfield airport at the upcoming Dubai World Central, 30 km off the present international airport which already is the second busiest in the world.
Story first published: Monday, December 1, 2014, 16:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X