அதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க் : சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் முதன்மை நாடாக விளங்கும் அமெரிக்காவே சமீபகாலமாக பொருளாதாரத்தில் பின்னடைந்து வருவதாகவும், இதனால் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று, பல ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்பட்டு வந்த நிலையில், எதிர்பார்க்கப்பட்டதை போலவே வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து 1.75%மாக குறைத்துள்ளது.

எனினும் இந்த வட்டி குறைப்பு போதாது என்றும் ஒரு தரப்பு கூறி வருகின்றது. இந்த நிலையில் இனி மீண்டும் ஒரு வட்டி குறைப்பு இருக்காது என்றும், இவ்வங்கி மறைமுகமாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி வட்டி குறைப்பு நல்ல விஷயம் தானே? இனி பணப்புழக்கம் அதிகரிக்குமே? இதனால் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? ஆமாங்கா.. வட்டி குறைப்பு நல்ல விஷயம் தான். யாருக்கு அமெரிக்காவுக்கு தான். இந்தியாவுக்கு அல்ல. மாறாக இனி இந்தியாவுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளது.

 

இது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்கா.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க!

பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டி குறைப்பு

பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டி குறைப்பு

நலிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா ஃபெடரல் வங்கி இப்படி ஒரு முடிவினை எடுத்திருந்தாலும், அமெரிக்காவை நம்பியுள்ள ஏராளமான ஏற்றுமதி நாடுகளின் நிலை அதே கதியில் தான் உள்ளது. ஏனெனில் அமெரிக்காவின் பொருளாதார நிலையை ஊக்குவிப்பதற்காகத் தான், அவ்வங்கி இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளது. பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் போது அங்கு உற்பத்தி அதிகரிக்கும். ஆக இறக்குமதி குறையும், ஏற்கனவே அமெரிக்கர்களுக்கு தான் முதல் உரிமை என்றும் கூறி வரும் டிரம்ப், இனி சும்மா இருப்பாரா?

இந்தியாவில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம்

இந்தியாவில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம்

வட்டி குறைப்பால் முதலீடுகள் அமெரிக்காவில் ஊக்குவிக்கப்படலாம். இதனால் இனி அங்கு முதலீடுகளை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, முதலீடுகளும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது, அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடு செய்வதை விட அன்னிய முதலீட்டாளர்கள், அமெரிக்கா போன்ற முதன்மை நாடுகளில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் முதலீடுகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அதே கதியில் இந்திய பங்கு சந்தை
 

அதே கதியில் இந்திய பங்கு சந்தை

அதிக அளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறும் பட்சத்தில், இந்திய பங்கு சந்தைகள் மேலும் சரிய வாய்ப்பிருக்கிறது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்பிருக்கிறது. இதனால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதிகளவிலான முதலீடுகள் வெளியேறும் போது, இந்திய சந்தைகள் அதள பாதாளத்தையே அடையும்.

பணவீக்கம் அதிகரிக்கும்

பணவீக்கம் அதிகரிக்கும்

அதிலும், சவுதி அராம்கோவின் எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் உற்பத்தியும் பாதியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில் மொத்த உபயோகத்தில் 80 சதவிகிதம் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு பெருத்த அடியாகவே இருக்கும், உதராணமாக ஒரு பேரலுக்கு 60டாலர் கொடுத்து வந்த இடத்தில், தற்போது 70 டாலருக்கும் மேல் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிப்பதோடு, பணவீக்கமும் இங்கு அதிகரிக்கும்.

ஆபத்தான நிலையில் இந்தியா

ஆபத்தான நிலையில் இந்தியா

இதனால் ஏற்கனவே மந்த நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரம், இதனால் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்பிருக்கிறது. மறுபுறம் அமெரிக்கா டாலர் வலுவடையும் போதும், நாம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆக எங்கு சுற்றி வந்தாலும், இந்தியாவிற்கு இது பிரச்சனையே. ஆக இந்திய அரசு விரைவில் இதனை கவனமாக கையாள்வதோடு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic crisis: Us federal bank cuts rates by 25 basis points

Us federal bank cuts rates by 25 basis points. This Rate cuts make it more attractive for business to borrow to invest. but its affect to India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X