1.5 பில்லியன் டாலருக்கு பிட்காயின் வாங்கிய டெஸ்லா.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது முதலீட்டுக் கொள்கை மற்றும் முடிவுகளை அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இது அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இயல்பான நடவடிக்கை என்றாலும், எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா-வின் முதலீட்டு முடிவில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் உள்ளது.

அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என அரசு தரப்பு அதிகாரிகள் கூறிவரும் நிலையில், எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ஜனவரி 2021ல் சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயினை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி காட்டுத்தீ-ஐ விடவும் வேகமாகப் பரவியதன் எதிரொலியாக, சரிவில் தத்தளித்த பிட்காயின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, பிட்காயின் வாயிலாகப் பணம் அளிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

பிட்காயின் மீது முதலீடு

பிட்காயின் மீது முதலீடு

இந்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டெஸ்லா நிறுவனம் பிட்காயின் மீது சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து பிட்காயினை ஆதரித்து இந்தக் கிரிப்டோகரன்சியை வாங்கியுள்ளது. கிரிப்டோகரன்சி ஆர்வலர்கள் மத்தியில் கொண்டாட்டமாக மாறியுள்ளது.

பிட்காயின் பேமெண்ட்

பிட்காயின் பேமெண்ட்

இதுமட்டும் அல்லாமல் டெஸ்லா தனது கார் விற்பனைக்கான தொகையைப் பிட்காயின் பேமெண்ட் வாயிலாகப் பெற முடிவு செய்துள்ளது. இந்தச் சேவை விரைவில் டெஸ்லா தளத்தில் அறிமுகம் செய்யப்படும் என டெஸ்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது பிட்காயினை நேரடியாக டெஸ்லா தளத்தில் செலுத்தி அல்லது கொடுத்து டெஸ்லா கார்களை வாங்க முடியும்.

அமெரிக்க அரசு விதிகள்

அமெரிக்க அரசு விதிகள்

இந்த முடிவு குறித்து டெஸ்லா கூறுகையில் பிட்காயின்-ஐ பேமெண்ட்டாக அறிவிக்கும் முன் அரசின் அனைத்து விதமான சட்ட விதிகளுக்கு உட்பட்டுத் தான் இந்தப் பேமெண்ட் முறை அமலாக்கம் செய்யப்பட உள்ளது என டெஸ்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிட்காயின் உரிமையாளர்கள்

பிட்காயின் உரிமையாளர்கள்

இதனால் இனி பிட்காயின் வைத்துள்ளவர்கள் பணமாக மாற்றாமல் நேரடியாகப் பிட்காயின் செலுத்தி டெஸ்லா கார் மட்டும் அல்லாமல் டெஸ்லாத் தளத்தில் இருக்கும் பிற பொருட்களையும் வாங்க முடியும் குறிப்பாகச் சோலார், பவர்வால் போன்வற்றையும் பிட்காயின் கொண்டு வாங்க முடியும்.

பேபால்-ஐ தொடர்ந்து டெஸ்லா

பேபால்-ஐ தொடர்ந்து டெஸ்லா

அமெரிக்காவின் முன்னணி பேமெண்ட் தளமான பேபால் அனைத்து விதமான நிதி சேவைகளிலும் பிட்காயின் மற்றும் இதர முக்கியக் கிரிப்டோகரன்சியைக் கொண்டு பேமெண்ட் சேவையை அளிக்கிறது, இதைத் தொடர்ந்து தற்போது டெஸ்லாவும் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி-க்கு ஆதரவு அளிக்கும் வகையில் முடிவை எடுத்துள்ளது.

Dogecoin - எலான் மஸ்க்

Dogecoin - எலான் மஸ்க்

டிவிட்டரில் அவ்வப்போது பிட்காயின் பற்றிப் பேசி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் டிவிட்டரை விட்டு வெளியேறிய 2 நாட்களில் திரும்பி வந்த நாள் முதல் Dogecoin என்ற மற்றொரு கிரிப்டோகரன்சியின் மீம்களைப் பகிர்ந்து வந்தார். இந்த மீம்களில் பெரும்பாலானவை பிட்காயினுக்கு மாற்றாக இந்த Dogecoin இருக்கிறது என்பது போன்ற மீம்களாக இருந்தது.

டெஸ்லா முதலீட்டுக் கொள்கை

டெஸ்லா முதலீட்டுக் கொள்கை

எலான் மஸ்க்-ன் சத்தமே இல்லாமல் பிட்காயின் மீது 1.5 பில்லியன் டாலர் அளவிலான மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ததிற்குக் காரணமாக டெஸ்லா சமர்ப்பித்துள்ள முதலீட்டுக் கொள்கையில், டெஸ்லா தனது முதலீட்டைப் பல துறையில் விரிவுபடுத்த முடிவு செய்து எதிர்காலத்தில் தனது நிதி ஆதாரத்தை வைத்து அதிக லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon musk's tesla buys bitcoin for $1.5 billion on Jan 2021, plans to accept the cryptocurrency as payment

Elon musk's tesla buys bitcoin for $1.5 billion on Jan 2021, plans to accept the cryptocurrency as payment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X