புதிய வரலாற்றை படைக்க போகும் எலான் மஸ்க்.. லெவல் 5 தானியங்கி கார்..! #Tesla

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலக்ட்ரிக் கார் மற்றும் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் பல முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் டெக் நிறுவனங்களை மிகவும் குறைந்த காலகட்டத்தில் ஓரம்கட்டி இத்துறையில் முன்னோடியாக விளங்குகிறது.

 

இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால் கட்டாயம் எலான் மஸ்க்-ன் விடாப்பிடியான முயற்சி மற்றும் மேம்பாடுகள் தான் காரணம். இந்நிலையில் எலான் மஸ்க் ஆட்டோமொபைல் துறையில் புதிய உச்சத்தை விரைவில் எட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

e-RUPI: மோடி அரசின் புதிய சேவை.. எப்படி இயங்கும்..? யாருக்கு லாபம்..?

 மக்களின் நிலை

மக்களின் நிலை

அப்படி என்னதான்பா பண்ண போற.. ஏற்கனவே நீ பண்ண வேலைக்குப் பல கோடி இந்தியர்கள் வாங்குனா எலக்ட்ரிக் கார் தான் வாங்குவேனு சுத்திகட்டு இருக்கானுங்க.

எலான் மஸ் கட்டாயம் அனைவரையும் இந்த முறை ஆச்சரியப்படுத்த உள்ளார் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.

பில்டு அப்-க்கு ஏத்த மாதிரி விஷயமும் பெருசு மக்கா..!

 டெஸ்லா நிறுவனம்

டெஸ்லா நிறுவனம்

எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனம் வெறு ஆட்டொமொபைல் நிறுவனம் மட்டுமல்ல.. பேட்டரி டெக்னாலஜி, உற்பத்தியில் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு எனப் பல பிரிவில் முன்னோடியாக விளங்குகிறது. இப்படித் தற்போது டெஸ்லா தீவிரமாகப் பணியாற்றி வரும் ஒரு முக்கியமான தளம் செயற்கை நுண்ணறிவு.

 லெவல் 5 தானியங்கி கார்
 

லெவல் 5 தானியங்கி கார்

சமீபத்தில் நடந்த உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், லெவல் 5 தானியங்கி கார் அல்லது மனிதர்கள் உதவி துளியும் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் கார்களின் அடிப்படை வடிவத்தைக் கூடிய விரைவில் வெளியிடுவதில் தான் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

 எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் சும்மாநாச்சிக்கு சொல்லும் ஆள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும், சொன்னதைச் செய்யும் ஒரு சகலகலா வல்லவன். எலான் மஸ்க் சொல்வதைப் போல் தானியங்கி காருக்கான முதல் கட்ட தொழில்நுட்பத்தை நடப்பு நிதியாண்டுக்குள் வெளியிட்டால் வரலாற்று நிகழ்வாக இருக்கும்.

எலான் டிவிட்டரில் பல ஜோக் அடித்தாலும், டெக்னாலஜி குறித்தும், தனது நிறுவனம் குறித்தும் எப்போதும் விளையாடியது இல்லை.

 செயற்கை நுண்ணறிவு தினம்

செயற்கை நுண்ணறிவு தினம்

இதற்கு ஏற்றார் போல் டெஸ்லா நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு தினத்தை அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் லெவல் 5 தானியங்கி கார்களுக்கான முதல் கட்ட திட்ட வடிவம் அல்லது மாதிரியைக் காட்ட வாய்ப்பு உள்ளது. இது மட்டும் நடந்தால் டெஸ்லா நிறுவனப் பங்குகள் பெரிய அளவில் உயரும்.

 தானியங்கி கார்

தானியங்கி கார்

லெவல் 5 தானியங்கி கார் என்ன அவ்வளவு பெரிய விஷயமா..? ஆம் அனைத்து இடத்திலும் மனிதர்கள் உதவி இல்லாமல், ஒரு டிரைவர் இல்லாமல், ஒரு ஸ்டியரிங் வீல் கூட இல்லாமல் இயங்க கூடிய ஒரு வாகன தொழில்நுட்பம் தான் லெவல் 5 தானியங்கி கார்கள் தொழில்நுட்பம். கேட்கவே பயங்கரமா இருக்குல..

 கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

எலான் மஸ்க் உலகச் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய பின்பு பல விமர்சனங்களை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் பல செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் வல்லுனர்கள் இது சாத்தியமில்லை எனக் கூறினர், இன்னும் பலர் எலான் மஸ்க் வழக்கம் போல் பப்ளிசிட்டி ஸ்டென்ட் என விமர்சனம் செய்தனர். அவை அனைத்திற்கும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பதில் கிடைக்குமா..?!

 டெஸ்லா ஆட்டோ சமமன்

டெஸ்லா ஆட்டோ சமமன்

டெஸ்லா கார்களின் இருக்கும் ஆட்டோ சமமன் வசதியும் கிட்டத்தட்ட தானியங்கி சேவையின் முதல் படி தான் எனப் பலர் எலான் மஸ்க்-கிறகு ஆதரவு தெரிவித்தாலும். பலர் அனைத்து இடத்திலும் தானாக இயங்கும் காருக்கான algorithm உருவாக்குவது என்பது சாதாரணக் காரியம் இல்லை.

 ரியல்டைம் கண்காணிப்பு

ரியல்டைம் கண்காணிப்பு

ஒரு தானியங்கி காரை இயக்க வேண்டும் என்றால் பல காரணிகளை ரியல்டைம்-ல் கண்காணித்து அதற்கான முடிவுகளைக் கண் இமைக்கும் நேரத்திற்குள் செய்ய வேண்டும். கிட்டதட்ட ஒரு மனித மூளைக்கு இணையாக ஒரு கார் இயங்குமா என்றால் கட்டாயம் சந்தேகம் தான். இதற்கும் எலான் மஸ்க் தீர்வு கண்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

 DOJO சூப்பர் கம்பியூட்டர்

DOJO சூப்பர் கம்பியூட்டர்

சமீபத்தில் வெளியான ஒரு செய்தியிலும், ஆகஸ்ட் 2020ல் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ஒரு டீவிட்டை-யும் பார்க்கும் போது தானியங்கி காருக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக neural network training computer-ஐ உருவாக்கி வருவதாகவும் இதற்கு DOJO எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 டோஜோ கம்யூட்டர்

டோஜோ கம்யூட்டர்

இந்த டோஜோ கம்யூட்டர் டெஸ்லா கார்களில் இருக்கும் கேமரா-வைத்து தேவையான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் திறன் பெற்றதாக இருக்கும் என அறியப்படுகிறது. இதன் மூலம் எளிதாக லெவல் 5 தானியங்கி கார்களை டெஸ்லா உருவாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும், சந்தைக்கு வரும் போது தான் அதன் உண்மை தெரியும்.

 8 கேமராக்கள்

8 கேமராக்கள்

தற்போது தயாரிக்கப்படும் அனைத்து டெஸ்லா கார்களிலும் 8 கேமராக்கள் உள்ளது. இந்தக் கேமரா டேட்டா உடன் ஸ்டியரிங், பிரேக், accelerator என அனைத்தும் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல விபத்துகளிலிருந்து டெஸ்லா கார் தனது பயணிகளைக் காப்பாற்றியுள்ளது.

 இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

இந்தியா ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

அதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு தளத்தைக் கொண்டு செல்வது தான் லெவல் 5 தானியங்கி கார். இது சாத்தியமானால் இந்தியாவில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் என்ன செய்யும். அதன் எதிர்காலம் என்ன..?

போட்டி

போட்டி

மேலும் டெஸ்லா நிறுவனத்திற்குப் போட்டியாகப் பல முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்கள் வெளியிட்டாலும், டெஸ்லாவிற்கு இணையாக யாராலும் இதில் வெற்றி அடையவில்லை. இதனால் எலக்ட்ரிக் கார் உலகின் அசைக்க முடியாத ராஜா-வாக எலான் மஸ்க் திகழ்கிறார்.

 கடினமான தொழில்நுட்ப சிக்கல்

கடினமான தொழில்நுட்ப சிக்கல்

தானியங்கி கார் தொழில்நுட்பத்தை எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா உருவாக்கிவிட்டால் உலகில் இருக்கும் மிகவும் கடினமான தொழில்நுட்ப சிக்கல்-ஐ தீர்த்த ஒருவராக இருப்பார் எலான்.

கடந்த 10 வருடத்தில் பல தொழில்நுட்ப சாதனைகளைப் படைத்த எலான் இதையும் சாதிப்பார் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon musk says level 5 self-driving cars happen very Quickly, Does Dojo play vital role?

Elon musk says level 5 self-driving cars happen very Quickly, Does Dojo play vital role?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X