மோசமான நிலையில் அமெரிக்கா.. எலான் மஸ்க்-ன் டிவீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் அமெரிக்காவின் குழந்தை பிறப்பு விகிதம் பற்றிய டீவிட்டானது பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது எனலாம்.

கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது, இது தொடர்பான வரைபடம் ஒன்றைத் தான் எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய அறிக்கையில் அமெரிக்காவில் கருவுறுதல் விகிதமானது 2021ல் 2.1 க்கு கீழாக உள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டியுள்ளது.

நான் விதிவிலக்கானவன்

நான் விதிவிலக்கானவன்

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு குழந்தைகள் குறைவாக இருக்கும் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் நான் அதற்கு விதிவிலக்கானவன் என கூறியுள்ளார். எலான் மஸ்கிற்கு 7 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையை பூர்த்தி செய்ய முடியாது?

தேவையை பூர்த்தி செய்ய முடியாது?

இதற்கு பதிலளித்துள்ள ட்விட்டர் பயனர் ஒருவர், உண்மையை சொல்ல வேண்டுமெனில் நிறைய குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வது கடினம் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க் பணக்காரர்கள் கூட இந்த காலகட்டத்தில் குறைவான குழந்தைகளையே கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.

 செவ்வாய் கிரகத்திற்கு எப்படி?
 

செவ்வாய் கிரகத்திற்கு எப்படி?

மற்றொரு பயனர் அடுத்த சில தசாப்தங்களில் உலக மக்கள் தொகை குறைய உள்ளது. இது மிக கவலைக்குரிய விஷயம். செவ்வாய் கிரகத்தில் ஒரு தன்னிறைவு நகரத்தினை உருவாக்குவதற்கும் நமக்கு மனிதர்கள் தேவை. ஆக இந்த போக்கு தொடர்ந்தால், அது மனித குலத்திற்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம் என ட்வீட் செய்துள்ளார்.

வரி அதிகமாக

வரி அதிகமாக

இதே மற்றொரு பயனர் கார்ப்பரேட் வரி விகிதங்கள் அதிகமாக இருந்தபோது பிறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பிறப்பு விகிதம் 50 களில் இருந்ததை போல் இருக்க வேண்டுமானால், 50களின் 91% வரிக்கு திரும்புவோம் என கூறியுள்ளார்.

பணவீக்கம்

பணவீக்கம்

பெரும் பணவீக்கத்திலிருந்து கல்லூரிகளை யாராவது கட்டுப்படுத்த வேண்டும். கல்லூரி செலவுகள் 1400% மேலாக அதிகரித்துள்ளன, ஆனால் சராசரி வருமானம் 213% தான். சம்பளம் 116% மட்டுமே அதிகரித்துள்ளது என ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

உங்கள் கருத்து என்ன?

 

உண்மையில் இன்று சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மிக சவாலான ஒரு விஷயமாக உள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் 500 ரூபாயில் ஒரு மாதத்திற்கே சாப்பிடலாம். ஆனால் இன்று அப்படியில்லை. தினசரி குறைந்தபட்சம் 500 ரூபாய் தேவையிருக்கிறது. ஆக நடைமுறைக்கு பல குழந்தைகள் என்பது சாத்தியமாகுமா?

உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon musk tweet about US birth Rate: Attractive Twitter responses

Elon Musk, president of Tesla, says many would say that those who are rich have fewer children. But I have been told that I am no exception to that.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X