அமெரிக்காவும் சீனாவும் டேஞ்சரான பகுதியில் நுழைகிறார்கள்! நிபுணர்கள் எச்சரிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பனிப் போர் என்றாலே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடந்தவைகள் மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் இப்போது பனிப் போர் என்றால், அமெரிக்காவும் சீனாவும் தான் நினைவுக்கு வருகிறார்கள்.

Recommended Video

China-America Fight | Experts Warning | Oneindia Tamil

அந்த அளவுக்கு, அமெரிக்காவும் சீனாவும் பல பிரச்சனைகளில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.

சாதாரணமாக வர்த்தகப் போரில் 2018-ம் ஆண்டில் தொடங்கிய சண்டை, இன்று கொரோனா வைரஸால் பன் மடங்கு பெரிதாக வளர்ந்து வந்து நிற்கிறது.

புகையும் ஏரியாக்கல்

புகையும் ஏரியாக்கல்

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமே சீனா தான் என அமெரிக்கா குற்றம் சாட்டியதில் இருந்து தொடங்கி, ஹாங்காங் சுதந்திரப் பிரச்சனை, உய்கர் இஸ்லாமியர்கள் பிரச்சனை, டிரேட் டீல் பிரச்சனை, 5ஜி டெக்னாலஜி பிரச்சனை என பல ஏரியாக்களில் இரண்டு நாடுகளும் அடித்துக் கொள்கிறார்கள்.

உலக பொருளாதாரம்

உலக பொருளாதாரம்

ஏதோ ஆசிய கண்டத்தில் அல்லது ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு மூலையில் இருக்கும் இரண்டு நாடுகள் அடித்துக் கொண்டால் உலக பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆகாது. ஆனால் உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதாரங்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டால், உலக பொருளாதாரமே அடி வாங்கத் தானே செய்யும். உலக பங்குச் சந்தைகள் எல்லாம் தடுமாறத் தானே செய்யும்.

அமெரிக்கா தரப்பு

அமெரிக்கா தரப்பு

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா சர்வதேச அளவில் பேசத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி, மற்ற நாடுகளையும் சீனாவிடம் இருந்து பிரிந்து கொள்ளச் சொல்கிறது. அதோடு சீனாவின் உதவிகள் மற்றும் டெலிகாம் சேவைகளையும் மறுக்கச் சொல்கிறது அமெரிக்கா. குறிப்பாக தென் சீன கடல் பிரச்சனையில் சீனாவுக்கு எதிராகவே நிற்கிறது அமெரிக்கா.

நிபுணர்கள் கருத்து

நிபுணர்கள் கருத்து

இப்படி சீனாவும் அமெரிக்காவும் பார்த்துக் கொள்ளும் இடத்தில் எல்லாம் பற்றி எரிகிறது, இந்த இரண்டு நாடுகளும் ஆபத்தான ஏரியாவுக்குள் நுழைகிறார்கள் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இதை புதிய பனிப் போர் என்றே சொல்லலாம். சரி நிபுணர்கள் பார்வையில் சீனா மற்றும் அமெரிக்காவை எப்படி பார்க்கிறார்கள். அவர்கள் கருத்து என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஸ்டீபன் வால்ட் (Stephen Walt)

ஸ்டீபன் வால்ட் (Stephen Walt)

"உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும், ஒரு நீண்ட கால போட்டியில் இருக்கிறார்கள். இதில் ஆசியாவையே ஆள நினைக்கும் சீனாவின் ஆசையும் அடக்கம். சீனா ட்ரம்பை ஒரு பலவீனமான, தவறுகளைச் செய்யக் கூடிய தலைவராகவே பார்க்கிறது" என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின், சர்வதேச விவகாரங்களின் பேராசிரியர் ஸ்டீபன் வால்ட்.

பொருளாதார உறவுகள்

பொருளாதார உறவுகள்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடக்கும் பிரச்சனைகள், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்த பனிப் போரில் சிலவற்றை நினைவு படுத்துகின்றன. ஆனால் இன்னும் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பிரச்சனை அத்தனை அபாயகரமானதாக மாறவில்லை. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் இன்னும் நெருக்கமாகவே இணைந்து இருக்கிறது. அந்த உறவு தான் தற்போது கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது எனச் சொல்கிறார் ஸ்டீபன் வால்ட்.

டெக்னாலஜி

டெக்னாலஜி

அமெரிக்கா, ரஷ்யா உடன் அதிகம் பொருளாதார விவகாரங்களில் நெருக்கமாக இருந்ததில்லை. ஆனால் அமெரிக்கா, சீனாவோடு பொருளாதார விவகாரங்களில் நெருக்கமாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகள், சீனாவிடம் இருந்து தனியாக வர வேண்டும் எனச் சொல்கிறார் மைக் பாம்பியோ. அதிலும் குறிப்பாக டெக்னாலஜி விவகாரங்களில் சீனாவிடம் இருந்து தனித்து வர வேண்டும் என்கிறார். இந்த டெக்னாலஜிகளைப் பயன்படுத்தி, சீனா, அமெரிக்காவை வேவு பார்த்து விடுமோ என்கிற பயத்திலும் இருக்கிறது அமெரிக்கா.

ஒரியானா ஸ்கைலர் மஸ்ரோ (Oriana Skylar Mastro)

ஒரியானா ஸ்கைலர் மஸ்ரோ (Oriana Skylar Mastro)

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இருக்கும் இவர், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடப்பவைகள் பனிப் போர் போல இருபப்தாகச் சொல்கிறார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடப்பது பாசிட்டிவான விஷயம் என்றால், இந்த இரண்டு நாடுகளுக்கு மத்தியில் உண்மையாகவே ஒரு போர் நடக்க வாய்ப்பு இருப்பது நெகட்டிவ்வான விஷயம் என்கிறார். அமெரிக்கா & ரஷ்யாவுக்கு இடையில் ஒரு நேரடி போர் நடக்கும் அளவுக்கு, ஒரு சூழல் எப்போதுமே இருந்தது இல்லை எனவும் சொல்கிறார் இந்த பேராசிரியர்.

தவறான பார்வை

தவறான பார்வை

"அமெரிக்கா சீனாவை ஒரு தத்துவார்த்த அச்சுறுத்தலாகப் (Ideological Threat) பார்க்கிறது. இது சரி அல்ல. அதே போல சீனாவும் அமெரிக்காவின் கொள்கைகளை எது வழி நடத்துகிறது (Drivers) என்பதை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய வீழ்ச்சிக்கு, தானே காரணமாக இருக்கிறது. இதில் சீனா எப்படி என்ன நடவடிக்கை எடுத்தாலும், அமெரிக்கா சீனாவைத் தாக்கும் என சீனா நினைக்கிறது" என்கிறார் பேராசிரியர்.

சி யின்ஹாங் (Shi Yinhong)

சி யின்ஹாங் (Shi Yinhong)

வர்த்தகப் போரை தடுக்க போட்டுக் கொள்ளும் ஒப்ப்பந்தத்தை, சீனாவால் தொடர்ந்து முழுமையாக செயல்படுத்த முடியாது என்பது இரு தரப்பினருக்கும் (சீனா & அமெரிக்கா) தெரியும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் மோசமாகும்" என்கிறார் ரென்மின் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் சி யின்ஹாங்.

பனிப் போர்

பனிப் போர்

"ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அந்த பனிப் போர், இரண்டு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையிலான, ஒரு தீவிரமான மோதல் மற்றும் போட்டி. இந்த தீவிரமான மோதலும் போட்டியும் தத்துவம் (Ideology) மற்றும் திட்டத்தால் (Strategy) முன் எடுக்கப்பட்டன. ஆனால் அமெரிக்காவும் சீனாவும், தற்போது ஒரு புதிய பனிப் போர் காலத்தில் நுழைகிறார்கள் எனலாம்" என்கிறார் பேராசிரியர் சி யின்ஹாங்.

நிதானம் ப்ளீஸ்

நிதானம் ப்ளீஸ்

ஏற்கனவே கொரோனா படுத்தும் பாட்டில் இருந்து இன்னும் எந்த நாடும் முழுமையாக மீண்டதாகத் தெரியவில்லை. அதற்குள் அடுத்த பனிப் போர் எல்லாம் நடந்தால் உலக பொருளாதாரம் தாங்காதுப்பா. அமெரிக்காவும் சீனாவும் இந்த இக்கட்டான சூழலில் கூட, ஒரு சுமூகமான முடிவுக்கு வரவில்லை என்றால் பிறகு உலக பொருளாதாரமும், மற்ற நாடுகளும் தான் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Experts are warning America and china are entering dangerous territory

The international experts and professors are warning that the America and china are entering dangerous territory.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X