ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த பேஸ்புக்..ஜூலை 2021 வரை WFH தான்.. கூடுதலாக $1000 தொகையும் உண்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய அரக்கன் தனது கோரத்தாண்டவத்தினை காட்டி வரும் நிலையில், இதனால் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

இன்னும் லட்சக்கணக்கானோர் தங்களது இருக்கும் வேலையாவது நிலைக்குமா? அல்லது போய்விடுமா? என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதற்கெல்லாம் அசராத சில துறைகளில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் படியும் கூறி வருகின்றன.

ஸ்மார்ட்போன் தான் முதல் ஆப்சன்

ஸ்மார்ட்போன் தான் முதல் ஆப்சன்

எனினும் சில நிறுவனங்கள் சம்பள குறைப்பு, சம்பளமில்லா விடுமுறை என பல கோணங்களிலும் நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. ஆனால் உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் இருந்து வந்தாலும், சில நிறுவனங்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது எனலாம். உதாரணத்திற்கு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள், பொழுதுபோக்குகாக பயன்படுத்தும் முதல் ஆப்சன் ஸ்மார்ட்போன் தான்.

ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து வேலை

ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து வேலை

அதில் உபயோகிப்பதும் சமுக வலைதளங்கள் தான். இப்படி மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் சமூக வலைதளங்களில் முதலிடத்தில் இருப்பது பேஸ்புக் தான் என்று கூட கூறலாம். இந்த நிலையில் தான் பேஸ்புக் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியினை கொடுத்துள்ளது. அது அடுத்த ஆண்டு ஜூலை 2021 வரையில் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி புரியலாம் என்பது தான்.

ஊழியர்களுக்கு செலவுக்கு $1000 டாலர்

ஊழியர்களுக்கு செலவுக்கு $1000 டாலர்

இது மட்டும் அல்ல, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய சொல்வதால், அவர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிய தேவையான அலுவலக தேவைகளுக்கு 1000 டாலர்களை வழங்க உள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. சமீபத்தில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனமும் இப்படி அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.

கூகுள் & பேஸ்புக் சலுகை

கூகுள் & பேஸ்புக் சலுகை

கடந்த ஜூலை மாத இறுதியில் கூகுள் நிறுவனம், அலுவலகத்தில் தேவை இல்லாத அதன் ஊழியர்களை ஜூன் 2021 வரை வீட்டில் இருந்து பணிபுரிய கூறியது. இதே போல் ட்விட்டர் நிறுவனமும் அதன் சில ஊழியர்களை காலவரையின்றி வீட்டில் இருந்தே பணியாற்ற கூறியது. இந்த நிலையில் தான் பேஸ்புக்கும் இப்படி அதிரடியான நடவடிக்கையினை எடுத்துள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

இது குறித்து பேஸ்புக் வெளியிட்ட அறிக்கையின் படி, ஊழியர்களின் உடல் நலம் மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. நாங்கள் ஜூலை 2021 வரை தானாக முன் வந்து வீட்டில் இருந்து பணிபுரிய கூறியுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலுவலகம் மீண்டும் எப்போது திறப்பு?

அலுவலகம் மீண்டும் எப்போது திறப்பு?

அதுமட்டும் அல்ல கூடுதலாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய 1000 டாலர்களை வழங்குகிறோம். மேலும் அரசின் வழிகாட்டுதல் படி, மீண்டும் அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது. எனினும் தற்போது அமெரிக்காவிலும் லாக்டௌன் அமெரிக்காவிலும் கொரோனா வழக்குகள் மிக அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டு இறுதி வரையில் அலுவலகம் திறக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook allow employees to WFH until july 2021 amid coronavirus pandemic

Facebook will allow Work from home until july 2021 due to coronavirus pandemic
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X