கொரோனா காலத்திலும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் சாதனை.. காரணத்த கேட்டா அசந்துடுவீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்திலும் கூட சர்வதேச அளவில் ஜாம்பவான்களாக திகழும் கூகுள், பேஸ்புக், ஆப்பிள், அமேசான் போன்ற நிறுவனங்கள் சாதனை படைத்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இரண்டாவது காலாண்டில் நல்ல லாபம் கண்டுள்ளன.

நிபுணர்கள் கணித்ததை விட பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் இருந்த போதிலும் கூட, அதன் டிஜிட்டல் விளம்பர வருவாய் களைகட்டியதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய வலைத்தளமான இந்த நிறுவனம் 11% வருவாய் வளர்ச்சியினை பதிவு செய்த பின்பு, பேஸ்புக்கின் பங்கு விலையானது 7% அதிகரித்துள்ளது. இது மிக மெதுவானது என்றாலும், ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட 3% அதிகம் என்று IBES தரவு கூறுகின்றது.

பேஸ்புக்கின் விளம்பர வருவாய்

பேஸ்புக்கின் விளம்பர வருவாய்

பேஸ்புக்கின் வருவாயில் முக்கிய பங்காக இருக்கும் விளம்பர வருவாய், 10% அதிகரித்து 18.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏனெனில் உலகமே கொரோனாவால் லாக்டவுன் செய்யப்பட்ட நிலையில், பெரும்பாலானோரின் பொழுதுபோக்கே ஆன்லைனில் செலவிடுவதாகத் தான் இருந்தது. அப்படி ஆன்லைனில் செலவளித்தவர்களில் பலர் பேஸ்புக் பயன்படுத்தியவர்கள் தான் அதிகம்.

பயனர்கள் அதிகரிப்பு

பயனர்கள் அதிகரிப்பு

மாதாந்திர செயலில் உள்ள பயனர்கள் 2.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இது 2.6 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்காவின் காங்கிரஸ் கமிட்டியால் குற்றம் சாட்டப்பட்ட, ஒரு நாளைக்கு பின்பு வரப்பிரசாதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

செலவுகள் அதிகரிப்பு

செலவுகள் அதிகரிப்பு

மேலும் இந்த நிறுவனத்தின் மொத்த செலவுகள் 4% அதிகரித்து 12.7 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் 4,200 பேரை புதியதாக பணியமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தான் இப்படி எனில் அமெரிக்காவின் ஸ்மார்ட்போன் ஜாம்பவான் ஆன ஆப்பிள் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இது எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

விற்பனையில் வளர்ச்சி

விற்பனையில் வளர்ச்சி

ஏனெனில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காலத்தில், அதன் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்காக அதன் பொருட்களை வாங்கியதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐபேட்கள் மற்றும் மேக்குகள் கூட இந்த காலத்தில் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்னர் இந்த நிறுவன பங்கின் விலையானது 6% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆப்பிள் விற்பனை

ஆப்பிள் விற்பனை

ஆப்பிள் நிர்வாகிகள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் தொடர்ந்து வலுவான செயல்திறனை காணும் என்றும் கணித்துள்ளனர். ஆப்பிளின் விற்பனையானது 60% சர்வதேச சந்தையில் இருந்து வருவதால், கலிப்போர்னியாவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் வருவாய் 26.42 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது ஆய்வாளார்கள் கணித்ததை விட 4 பில்லியன் டாலர் அதிகமாக பதிவு செய்துள்ளது.

கூகுள் விளம்பர வருவாய்

கூகுள் விளம்பர வருவாய்

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், மார்ச் மாதத்தில் இருந்தே விளம்பர வருவாய் சரிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கூகுளின் விளம்பர வருவாய் மீண்டு வருவதாக ஆல்பாபெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் 16 ஆண்டுகளில் முதன் முறையாக விளம்பர வருவாய் சரிவு கவலையை ஏற்படுத்திய நிலையில், அதை இந்த அறிவிப்பானது தணித்ததாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

கூகுளின் விளம்பர விற்பனையானது அதன் வருவாயில் சுமார் 78% ஆகும். மந்த நிலைகளின் போது பெரும்பாலும் குறைக்கப்படும் முதல் பட்ஜெட் பொருள் இதுவாகும். ஆனால் கூகுள் நிறுவனம், பேஸ்புக் மற்றும் அமேசான்.காம் இன்க் ஆகியவை விட, கடந்த கால மந்த நிலையை விட சிறந்த முடிவுகளையே அறிவித்துள்ளது.

யூடியூப் விளம்பர வருவாய்

யூடியூப் விளம்பர வருவாய்

இரண்டாவது காலாண்டில் யூடியூப் விளம்பர வருவாய் 6% அதிகரித்துள்ளது. எனினும் மொத்த செலவினங்கள் 7% அதிகரித்து 31.9 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது ஒரு காலாண்டுக்கு முன்பு 12% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே மூலதன செலவினங்கள் 12% குறைந்து 5.4 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதாகவும், இது முந்தைய காலாண்டில் 3% குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமேசானின் வருவாய்

அமேசானின் வருவாய்

இதே ஆன்லைன் சில்லறை வர்த்தக ஜாம்பவான் ஆன அமேசான், அதன் வருவாய் 40% உயர்ந்து, ஜூன் காலாண்டில் அதன் வருவாய் 88.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சமீபத்திய மாதங்களில் அமேசான் நிறுவனம் 1,75,000 பேரை வேலைக்கு அமர்த்தியதாக தெரிவித்துள்ளது. ஏனெனில் தேவை அதிகமாக உள்ள நிலையில், பணியமர்த்தல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இப்படி கொரோனா காலத்திலும் வலுவான வருவாயினை கண்டுள்ளனர் இந்த ஜாம்பவான்கள்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook, Amazon, apple and google profits soar during coronavirus pandemic

June quarter results.. Facebook, Amazon, apple and google profits soar during coronavirus pandemic
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X