வீடியோ எடிட்டிங் நிறுவனத்தை வாங்கும் பேஸ்புக்..!

By: கிருஷ்ணமூர்த்தி
Subscribe to GoodReturns Tamil

எண்டர்டெயின்மென்ட் துறையில் இருக்கும் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் தற்போது பேஸ்புக் போன்ற சமுகவலைதள மற்றும் டெக் நிறுவனங்களும் ஏஆர், விஆர் தொழில்நுட்பத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தற்போது ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் முக்கியத் திட்டத்திற்காகப் பணியாற்றி வருகிறது, இத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துள்ள ஜெர்மன் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது பேஸ்புக்.

ஃபேடெக்

தற்போது இருக்கும் வீடியோவில் ஒரு பொருளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ உதவும் ஒரு வீடியோ எடிட்டிங் மென்பொருளை வைத்துள்ளது இந்த ஜெர்மன் நாட்டு ஃபேடெக் நிறுவனம் (Fayteq).

இந்த நிறுவனத்தை எவ்வளவு தொகைக்குக் கைப்பற்ற உள்ளது, எப்போது கைப்பற்ற உள்ளது என்ற எந்தவிதமான தகவல்களையும் பேஸ்புக் அளிக்கவில்லை.

 

லைவ் வீடியோஸ்

பேஸ்புக் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லைவ் வீடியோவில் புதிய எபக்ட்களை இணைக்க முடியும். இதனால் தனது ஏஆர் முயற்சிகள் அடுத்தக் கட்டத்தை அடையும் என இந்நிறுவனம் நம்புகிறது.

விற்பனை

ஃபேடெக் நிறுவனம் அடோப் ஆஃபர் எபக்ட்ஸ் போன்ற மென்பொருள்களுக்குப் பிளக்இன்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தப் பிளக்இன்கள் மூலம் லைவ் வீடியோவை டிராக் செய்து அதில் பொருட்களை இணைக்கவோ அல்லது சேர்க்கவோ முடியும். பேஸ்புக் நிறுவனம் இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் இனி இவர்களது பிராடெக்கள் மற்றும் பிளக்இன்கள் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படமாட்டாது என் ஃபேடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வாச்ட்

இந்நிலையில் அடுத்த வாரம் பேஸ்புக் நிறுவனம் யூடியூப் போன்ற ஒரு பிரத்தியேக வீடியோ தளத்தை அறிமுகம் செய்கிறது. இதை மொபைல், டெஸ்க்டாப், லேப்டாப் மற்றும் டிவி ஆப்களில் பெற முடியும் வகையில் பேஸ்புக் வடிவமைத்துள்ளது.

இதன் பெயர் பேஸ்புக் வாட்ச்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Facebook has acquired computer vision startup Fayteq

Facebook has acquired computer vision startup Fayteq - Tamil Goodreturns | வீடியோ எடிட்டிங் நிறுவனத்தை வாங்கும் பேஸ்புக்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Friday, October 20, 2017, 13:54 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns