ஒஎல்எக்ஸ், குவிக்கர் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கும் 'பேஸ்புக்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் வளர்ந்து வரும் இ-காமர்ஸ் துறையில் நுழையும் முயற்சியாக பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களுக்குப் பொருட்கள் விற்பது, வாங்குவதற்கான சந்தையை இன்னும் சில தினங்களில் அறிமுகப்படுத்த உள்ளது.

 

இதனால் கிவிக்கர், ஓஎல்எக்ஸ் போன்ற விளம்பரங்கள் இணைய தளங்களும், இ-காமர்ஸ் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் எந்தெந்த நாடுகள்..!

முதலில் எந்தெந்த நாடுகள்..!

அமெரிக்கா, பிரட்டன், ஆஸ்த்ரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள 18 வயதுக்கு மேல் உள்ள பேஸ்புக் பயனர்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் பயன்பாட்டாளர்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் உள்ளவர்களிடம் எளிதாகப் பொருட்களை விற்கலாம் மற்றும் வாங்கலாம்.

கணினி பயன்பாட்டாளர்களுக்கு எப்போது?

கணினி பயன்பாட்டாளர்களுக்கு எப்போது?

வரும் மாதங்களில் இந்தச் செயலியை கணினி பயன்பாட்டாளர்களுக்க அறிமுகப்படுத்த உள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மேரி கியூ திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

பொருட்களை வாங்குவது விற்பது பொன்ற சேவையை பேஸ்புக் அறிமுகப்படுத்துவதினால் வரும் ஆண்டுகளில் மேலும் பயனர்கள் அதிகரிப்பர் என்றும் கூறுபடுகிறது.

பேஸ்புக் குழுக்கள்
 

பேஸ்புக் குழுக்கள்

பேஸ்புக்கில் உள்ள குழுக்கள் மூலமாகத் தினமும் 450 மில்லியன் பயனர்கள் பொருட்கள் வங்குவது மற்றும் விற்பது போன்ற சேவையைத் தேடி வருகின்றனர் என்றும் மேரி கியூ தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாகப் பயனர்களை சென்றடைய முடியும், இதற்காக மார்க்கெட் பிளேஸ் என்ற தெரிவை எளிதாகத் தட்டி பேஸ்புக் பயன்பாட்டில் பொருளை விற்க வாங்க இயலும்.

அருகில் உள்ள நபர்கள்

அருகில் உள்ள நபர்கள்

மேலும் தேவையான பொருட்களை விற்கும் அருகில் உள்ள நபர்கள் யார் போன்ற விவரங்களையும் இந்தப் பயன்பாட்டின் மூலம் எளிதாகப் பார்க்க இயலும். பிறகு அந்த விற்பனையாளரின் இருப்பிடத்தையும் எளிதாகச் சேமித்து வைத்துக்கொள்ள இயலும்.

பயனர்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் விலை குறைப்பு போன்றவற்றையும் எளிதாக மெஸேஜ் தெரிவைப் பயன்படுத்தி நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இ-காமர்ஸ் இணையதளங்கள்

இ-காமர்ஸ் இணையதளங்கள்

இ-காமர்ஸ் இணையதளங்களைப் போன்று எளிதாகப் பொருட்களை தேடும் வசதி, பொருட்களின் படங்களை ஏற்றும் வசதிகளையும் அளிக்கிறது.

அனுமதி இல்லாத பொருட்கள்

அனுமதி இல்லாத பொருட்கள்

பொதை பொருட்கள், வெடி பொருட்கள் போன்ற சட்டவிரோத பொருட்கள் எதையும் விற்பனைக்கு பேஸ்புக் தளம் அனுமதிக்காது. அதே போன்று மது பானங்கள், விலங்குகள், போன்றவற்றையும் விற்க அனுமதி கிடையாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook's Marketplace: You can buy and sell a product

Facebook's Marketplace: You can buy and sell a product
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X