கடைசி நேரத்தில் ஜகா வாங்கியது அமெரிக்க பெடரல் ரிசர்வ்.... மும்பை பங்குச் சந்தை 'ஜிவ்'!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அரசுப் பத்திரங்களின் மீதான வட்டி வீதத்தை உயர்த்தும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி.

 

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, அரசு பத்திரங்களின் மீதான வட்டி விகிதத்தை உயர்ந்த பேச்சுவார்த்தை நடந்தி வந்தது. செவ்வாய்கிழமை துவங்கிய 2 நாள் கொள்கை மறுஆய்வு கூட்டம் புதன்கிழமை முடிந்ததையடுத்து, பெடரல் வங்கி நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்றும் பணவீக்கத்தின் அளவை கணக்கிட்டு, வட்டி விகித உயர்த்தும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது.

விடாது கருப்பு

விடாது கருப்பு

அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் மற்றும் பணவீக்கத்தின் அளவு குறைவாக இருப்பதால் மட்டுமே, பெடரல் வங்கி வட்டி விகித உயர்வை தற்காலிகமாக கைவிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நிதிநிலை மற்றும் பொருளாதார நிலை மேம்பட்ட உடன் கண்டிப்பாக வட்டியை உயர்த்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.

பொறுமை மிகவும் அவசியம்

பொறுமை மிகவும் அவசியம்

இக்கூட்டத்தின் முடிவில் 2015ஆம் ஆண்டுக்கான பெடரல் வங்கியின் கடன் விகிதத்தை 0.625 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 1.125 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து இவ்வங்கியின் உயர் அதிகாரியான ஜெனட் எலன் கூறுகையில் நாட்டின் பணவீக்கம் குறையும் வரை பொறுமையாக காத்திருப்பது மிகவும் அவசியமாக உள்ளது.

பாதிப்பு
 

பாதிப்பு

அமெரிக்க அரசு பத்திரங்களின் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தினால், இந்திய பங்குச் சந்தைகளில் கிடைக்கப்பெறும் முதலீடுகள் சுமார் 60 சதவீதம் குறையும். இதனால் பங்குச் சந்தை வர்த்தகம் கடுமையாக பாதிக்கும். நாட்டின் வளர்ச்சி திட்டங்ககளுக்கு கிடைக்கும் அன்னிய முதலீடுகளும் குறையும்.

பெட்ரல் வங்கி

பெட்ரல் வங்கி

வட்டி விகிதத்தை உயர்த்த சாதகமான பல காரணங்கள் உள்ளன என உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கிய பெட்ரல் வங்கியின் முடிவுகள் கடைசி நேரத்தில் மாற்றியது அனைவரின் வயிற்றிலும் பாலை வார்த்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தை

அமெரிக்க பங்குச் சந்தை

பெடரல் வங்கியின் இந்த முடிவின் காரணமாக அமெரிக்க சந்தையில் எண்ணெய் விலை மற்றும் பங்குச் சந்தை குறியீடுகள் உயர்ந்தன. சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு சரிவை கண்டது. மேலும் அமெரிக்க கருவூல இருப்பு அளவு 2 சதவீதம் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தை

உலக நாடுகளைப் பொறுத்த வரை பெடரல் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு சாதகமானதாக கருதப்படுகிறது. இதன் எதிரோலியாக மும்பை பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fed opens door wider for rate hike but downgrades economic outlook

The Federal Reserve had on Wednesday moved a step closer to hiking rates for the first time since 2006, but downgraded its economic growth and inflation projections, signalling it is in no rush to push borrowing costs to more normal levels.
Story first published: Thursday, March 19, 2015, 11:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X